Monday, October 16, 2017

நவ துவாரகை யாத்திரை - 27

அகமதாபாத் சுற்றுலா -1 

சபர்மதி ஆசிரமம் 

இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3   4    5     6    7    8    9    10    11    12  

13    14   15   16   17   18   19   20    21   22   23   24   25   26   28

வண்டி ஓட்டுநர் கூறிய அறிவுறையின் பேரில் முதல் நாளே டாகோர் துவாரகை சென்று விட்டு பிறகு  துவாரகை சென்றதால் அகமதாபாதில் ஒரு நாள் அதிகமாக கிட்டியது. அகமதாபாதிலிருந்து சென்னைக்கான விமான டிக்கெட் முதலிலேயே பதிவு செய்திருந்ததினால் இரண்டு  நாட்கள் அகமதாபாதில் உள்ள சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். திரு. படேல் அவர்கள் இல்லம் சென்று அவருக்கு ன்றி கூறினோம். அகமதாபாதில் முதலில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றோம்.



வாழ்க நீ! எம்மான்இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க
வாழ்க!
  - 

என்று பாரதியார் போற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி 1918 முதல்  1933 வரை  அன்னை கஸ்தூரிபாய் அவர்களுடன் இவ்வாசிரமத்தில் வசித்தார். முதலில் சாத்தியாகிரக ஆசிரமம் என்றழைக்கப்பட்டது.  1930 உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தியடிகள்  தண்டி யாத்திரை மேற்கொண்டது இங்கிருந்துதான்.

சபர்மதி ஆறு 



காந்தியடிகள் தங்கிய அறை 

சபர்மதியாற்றின் கரையில் இவ்வாசிரமம் அமைந்துள்ளது. ஆசிரமம் தேசிய நினைவுச் சின்னமாக விளங்குகின்றது.   அகமதாபாதும் ஒரு பெரிய கரம்தான் அதில் ஓடும் ஆற்றை எவ்வளவு சுத்தமாக வைத்துள்ளனர். அதுவும் ஆசிரமத்தை ஒட்டி ஆற்றங்கரையில் அருமையான பூங்காவும் அமைத்துள்ளனர். ஆசிரமத்தில் காந்தியடிகள் தங்கிய அறை, அவர் நூல் நூற்ற இராட்டை, அவர் எழுத பயன்படுத்திய சிறு மேசை. அவருடைய வாழ்வுடன் தொடர்புடைய பல நிகழ்வுகளின் புகைப்படங்கள், மது சுதந்திர போராட்டத்தின் பல்வேறு  புகைப்படங்கள்  ஆகியவற்றை பார்த்து இரசித்தோம். ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகிம்சை என்ற ஆயுதத்தை கொண்டு வீழ்த்திய மகான் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சிரியப்படாமல் இருக்க முடியவில்லை.  ஆசிரமத்தின் விற்பனை நிலையத்தில் சில நினைவு பரிசுகள் வாங்கினோம். ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தாலே மனதில்  ஒரு அமைதி தவழ்வதை இன்றும் உணர முடிகின்றது. ஆசிரமத்தை சுற்றிப் பார்த்து விட்டு அடுத்து எங்கு சென்றோம் தெரியுமா அன்பர்களே?.





குஜராத்தி உணவை முழுவதுமாக சுவைக்க ஒரு ல்ல உணவகத்திற்கு அழைத்து செல்லுமாறு வண்டி ஓட்டுனரிடம் கூறினோம் அவரும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சிறு பூரி தொடங்கி பல வகையான பூரிகள், சப்பாதிகள், இனிப்புகள் என்று சுமார் 32 வகைகள் கொண்ட அவ்வுணவை இரசித்தோம். அவ்வுணவகத்திலும் கோவர்த்தனகிரிதாரி கண்ணன் இருந்தான். மனத்திருப்தியுடன் அடுத்து அறிவியல் மையம் சென்றோம்.  

வண்டி ஓட்டுநர் 


கோவர்த்தன கிரிதாரி 



அகமதாபாத் கரத்தின் ஒரு சிறப்பு அம்சம் இந்த அறிவியல் மையம் ஆகும். அறிவியல் உண்மைகளை எளியவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மையத்தை அமைத்துள்ளனர். கோளரங்கம் ஒன்றும்  இம்மையத்தில் அமைந்துள்ளது. மேலும் சூரிய குடும்பத்தில் ஒரு சுற்றுலா (Journey through Solar system), அண்டவெளி (Hall of Space), பூமிக்கோள் (Planet Earth Pavilion), வாழ்வியல் பூங்கா (Life Science Park), சக்தி கல்வியியல் (Energy Education), மின்சாரம் (Electrodome) என்று பல பெரிய அரங்ங்கள் இவ்வறிவியல்   மையத்தில் உள்ளன. அனைத்தையும் முழுதுமாக பார்க்க வேண்டுமென்றால் பல மணி நேரம் பிடிக்கும், நேரமின்மையால்  அவற்றை அவசரமாகச்  சுற்றி வந்தோம், ஒரு விண்கலம்  வழியாக விண்வழியில் (Space) பயணம் செய்து  சூரிய குடும்பத்தை சுற்றி வந்தோம். கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது ஆனால் அருமையான அனுபவமாக இருந்தது. 5 பரிமாண  திரைப்படம் பார்த்தோம். அதில் நாங்கள் ஒரு அதி வேக  தொடர் வண்டியில் பயணம் செய்யும்  போது ஏற்படும் அனுபவங்களை உணர்ந்தோம். வண்டி அதி வேகத்தில் ஓடும் போது அதன் அதிர்வு, மல்லிகைத் தோட்டத்தில் இடையே செல்லும் போது மல்லிகையின்  மணம், ஒரு அருவியின் ஊடே செல்லும் போது தண்ணீர்ச் சிதறல் என்று ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மன அமைத்திக்காக  இசை நீரூற்றும் (Music Fountain) உள்ளது. மாலை திரு, பட்டேல் அவர்கள் இல்லம் சென்று அவருக்கு ன்றி தெரிவித்துவிட்டு வந்தோம். 

                                            நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

No comments: