Tuesday, October 3, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 14

திருமயிலை  விஜய தசமி


 சந்திரசேகரர் 

( ஆடும் மயிலாய் அன்று உருவெடுத்து திருமயிலையில்  ஐயனை  தரிசித்த கோலம்)


சிவாலயங்களில் நவராத்திரி ஒன்பது நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு தரிசனம் தருகின்றாள். விஜயதசமியன்று அம்பு போட சந்திரசேகரராக   ஐயனுடன்  அம்பிகை எழுந்தருளுகின்றாள். 

பின்னழகு 




சுந்தருக்கு நெற்குவியல் வழங்கிய லீலை




நீள நினைந்தடியேன் உனைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே.  - சுந்தரர்


குதிரை வாகனத்தில் புறப்பாடு 




அசுரன் மேல் அம்பு எய்தல்

மது கைடபர்கள்,  மகிஷாசுரன், , சண்ட முண்டர்கள், இரக்தபீஜன், சும்ப நிசும்பர்கள் ஆகிய அசுரர்களை  அன்னை ஆதி பராசக்தி மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி ரூபிணியாக சாமுண்டேஸ்வரியாக அழித்த நாட்களை கொண்டாடுவது தான் நவராத்திரி. அதாவது அதாவது அதர்மத்தை அன்னை வெற்றி கொள்ளும் நாளே விஜய தசமி. இங்கு வாழை மரம் அரக்கனின் அம்சம், அம்பெய்வது  அரக்கர்களை அழித்து பக்தர்களை காப்பது. 

நவராத்திரி பதிவுகள் நிறைவடைகின்றன.வந்து தரிசனம் செய்த அன்பர்கள் அனைவருக்கும், மற்றும் உள்ள அனைவருக்கும் அன்னையின் அருள் கிட்ட வேண்டுகிறேன். 
முந்தைய பதிவு         
நவராத்திரி பதிவுகள் நிறைவு

No comments: