ஜலாராம் பாபா ஆலயம்
இத்தொடரின் மற்ற பதிவுகள்
திரு.கோபால் -அடியேன் திரு. ஸ்ரீகுமார் - திரு.கோபால்
டாக்கோர் துவாரகையிலிருந்து ராஜ்கோட்(Rajkot), ஜாம்நகர்(Jamnagar)
வழியாக சுமார் 450 கி.மீ பயணம் செய்தோம். வரண்ட பிரதேசம், அதிகமாக போக்குவரத்து இருக்கவில்லை. வழியெங்கும்
புகையிலை தோட்டங்களை கண்டோம். பல நாடோடிக் குடும்பங்கள் ஒட்டகங்களில் தமது உடமைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு குடிபெயர்ந்துக் கொண்டிருந்தனர். மாடுகள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தன. ஒட்டக வண்டிகளை அதிகம் இப்பகுதியில் பார்த்தோம்.
சோடிலா ஜலாராம் ஆலய முகப்பு
வழியில்
சோடிலா (Chotila) என்ற இடத்தில் உள்ள ஜலாராம் பாபா (Jalaram Bapa) ஆலயத்தில் வண்டியை
நிறுத்தினார். குஜராத் மாநிலத்தில் இத்துறவியை மிகவும்
மதித்துப் போற்றுகின்றனர். தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டிருந்தாராம். இராம பக்தரான
இவர் இராமருடன் பேசியுள்ளாராம். ஒரு சமயம்
எம்பெருமான் ஒரு வயோதிக துறவியாக எனக்கு சேவை செய்ய உனது மனைவியை அனுப்பு என்றவுடன்
என்ற தயக்கமும் இல்லாமல் தனது மனைவியை அவளது சம்மதத்துடன் அனுப்பி வைத்தாராம். சிறிது
சமயத்தில் அந்தத் துறவி
மறைந்தார். பின்னர் ஆகாய வாணி மூலம் உங்களின் விருந்தினர்களை உபசரிக்கும் பான்மையை
உலகிற்கு உணர்த்தவே இவ்வாறு திருவிளையாடல் புரிந்தேன். என்னுடைய
தண்டத்தையும், ஜோல்னாப் பையையும் விட்டுச் சென்றுள்ளேன் என்று அறிவித்தார். அத்தண்டத்தையும்
பையையும் ஜலாராம் பாபா தானே பயன்படுத்தினார். இராம நாமம் ஜபித்து பல பக்தர்களின்
துன்பங்களை போக்கி பல அதிசயங்கள் புரிந்துள்ளார். ஆகவே இவரை ஒரு தெய்வப்பிறவியாக
மதித்து பலர் அவரை இன்றும் வழிபடுகின்றனர் தமது பிரார்த்தனைகளை இவரிடன் வைத்து அவை
நிறைவேறியவுடன்
நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்தி சாயும்
நேரத்தில்
அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இவ்வாலயத்தில் சீதா லட்சுமண ஹனுமத் சமேத இராமரையும்,
ஜலாராம் பாபாவையும் சேவித்தபின் பயணத்தைத் தொடர்ந்து துவாரகையை
அடையும் போது நள்ளிரவாகி விட்டது.
தூண்களில் உள்ள சிற்பங்கள்
துவாரகாதீசர்
ஆலயத்தின் பின்புறமுள்ள ஒரு தங்கும் விடுதியில் இரு அறைகள் கிடைத்தன அதில் தங்கினோம். அதிகாலை ஐந்து மணிக்கு
எழுந்தால் துவாரகாதீஷ் என்றழைக்கப்படும் துவாரகையின் அரசன்
ஸ்ரீகிருஷ்ணரையும் அருகில் உள்ள மற்ற ஆலயங்கள் அனைத்தையும் தரிசித்து
விடலாம் என்று ஓட்டுனர் கூறினார். இவ்வாறு முதல் நாள் யாத்திரை
அமைந்தது.
நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .
நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .
No comments:
Post a Comment