Friday, June 16, 2017

நவ துவாரகை யாத்திரை -7

வண் துவராபதி -2

இத்தொடரின்  மற்ற  பதிவுகள்  

   1   2   3    4    5   6   8   9   10   11   12   13 

  14   15   16   17   18   19   20   21    22    23    24    25   26    27   28

துவாரகாதீசன் 


யாத்திரையின் இரண்டாம் நாள்  அதிகாலையில் எழுந்து கதிரவன் குண திசை வந்ணைந்து, கனை இருள் அகன்று காலையம் பொழுதாகின்ற வைகறைப் பொழுதில்  கடலும் கோமதி ஆறும் கூடும் சங்கமத்தில் புண்ணிய நீராடக் கிளம்பிச் சென்றோம். அவ்வேளையிலேயே பலர் கோமதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தனர்.  நீராடிவிட்டு வெளியே வந்த போது ஆற்றின் கரையில் பல பசு மாடுகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம்.  கோமாதாவிற்கு நாம் அகத்திக்கீரை வாங்கி அளிப்பதைப் போல இங்கு கோதுமை மாவு உருண்டை அளிக்கின்றனர் ஆற்றில் உள்ள மீன்களுக்கும் லட்டு அளிக்கின்றனர். லட்டை ஆற்றில் வீசியவுடன் மீன்கள் வந்து மொய்ப்பதைக் காணலாம்.  யாத்திரை வரும் சமயம் தானம் செய்யவேண்டும் என்பதால் அருகில் கோதுமை மாவு விற்றுக்கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் அவற்றை வாங்கி படைத்தோம். மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு ஆசிர்வதிப்பது போல கோமயமும் பெய்து விட்டு சென்றது.




புனித நீராடல் 







கோமதி ஆறு 



கோமதி  இத்துவாரகைக்கு வந்த ஒரு சுவையான  கதை உள்ளது அது என்ன என்று காணலாமா அன்பர்களே?  வசிஷ்ட முனிவரின் புதல்வியானகோமதிதனக்கு உகந்த மணாளனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முனிவருடன் புறப்பட்டாள். முனிவரிடம் ஒரு நிபந்தனை விதித்தாள் .அதாவது தந்தையைத் தொடர்ந்து வரவிருக்கும் அவளைமுனிவர் திரும்பிப் பார்த்தால்அந்த இடத்திலேயே நிலையாகி விடுவதாகக் கூறியிருந்தாள் . 


                    கோமதி அன்னை                                                        மஹாலக்ஷ்மித் தாயார்




கோமதியின் கால் சலங்கை ஒலியின் மூலம் அவள்தன்னைத்  தொடர்வதை அறிந்து கொண்ட முனிவர்அந்த ஒலிதுவாரகாபுரியில் நின்று விடவே,  திரும்பிப் பார்த்தார். யுவதியாக இருந்த கோமதிநீர் நிலையாக அந்த இடத்தையே நிரந்தரம் ஆக்கிக் கொண்டாள்இவளின் கரையில் இன்றைய ஜகத்மந்திர் என்றழைக்கப்படும் துவாரகை ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும்கோமதி திக்கரையிலும் பித்ரு காரியங்கள் செய்கின்றனர் பக்தர்கள். 

கோமதி தியில் நீராடினால் மது பாவங்கள் அகலும், பரிசுத்தர்கள் ஆகின்றோம், அதற்குப்பிறகே மக்கு துவரகாதீசனை தரிசிக்க அதிகாரம் கிட்டுகின்றது, தரிசன பலனும் அப்போதுதான் சித்திக்கும். எனவே முதலில் நாம் கோமதி மாதாவை அர்சித்து பூசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அன்னையை தரிசித்த பின்னரே துவாரகை யாத்திரை முழுமை பெறுகின்றது எனவே இத்தலம் கோமதி துவாரகை என்றழைக்கப்படுகின்றது.



கோமதி அம்மனுக்கு ஆற்றின் கரையிலேயே ஒரு சிறு சன்னதி உள்ளது. இக்கோவிலை கோமதி துவாரகை என்று அழைக்கின்றனர். கருவறையில் பச்சை பட்டு, கிரீடம்,  முத்து, இரத்தின மாலைகள், வைரத் திலகம் என்று சர்வலங்கார பூஷிதையாக நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள் கோமதி அன்னை. அன்னைக்கு வெள்ளி சிம்மாசன மேடை அன்னையின் சன்னதியில் மஹாலக்ஷ்மித்தாயாரும் பொன் சிம்மாசன மேடையில் நின்ற கோலத்தில்  அருள் பாலிக்கின்றாள். கோமதிப்படித்துறையில் ராதா தாமோதர் கிருஷ்ண மந்திரும் அமைந்துள்ளது.   அன்னையர் இருவரையும் பணிந்து வணங்கி விட்டு துவாரகையின் நாயகனை தரிசிக்க  ஆலயத்திற்குள் சென்றோம். 

துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது57 படிக்கட்டுகள் ஏறித்தான் ஜகத்மந்திர் அல்லது திரைலோக்ய  சுந்தர் மந்திர் என்றழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்முன்னரே கூறியது போல இவ்வாலயத்திற்கு இரு பக்கம் வாயில்கள் உள்ளன. ஆயினும் கோமதி திப் பக்கம் உள்ள சுவர்க்க த்வார்’ (சொர்க்க வாயில்) வழியாக உள்ளே சென்றுவிட்டு,  எதிர்பக்கம் உள்ள மோட்ச த்வார்‘ (மோட்ச வாயில்) வழியாக வெளியே வர வேண்டும் என்பது ஐதீகம்.  ஏனென்றால் குசேலர் துவாரகைக்கு தன்  குருகுல ண்பன் கண்ணனை காண வந்த போது இவ்வாசல் வழியாகச் சென்று அவல் கொடுத்து திருமகளின் பெருங்கருணைக்கு பாத்திரமானார் என்கிறார்கள்.





ஜகத் மந்திரின் பல் வேறு கோணப் படங்கள் 







சுவர்க்க துவாரத்திற்கு நுழைவதற்கு முன்னரே பலராமரின் சன்னதி அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் எழிலான அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இத்தலத்தில் கொடி ஏற்றுவது ஒரு பிரார்த்தனை  அக்கொடி இவர் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னரே ஏற்றுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றது. தினமும் அன்னதானம் டைபெறுகின்றது அதற்காக பக்தர்கள் அரிசி தானம் இச்சன்னதியில் செய்கின்றனர். சங்கல்பம் செய்து கொண்டு தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அரிசியையும், பணத்தையும் கிருஷ்ணார்ப்பணம் என்று பலராமரின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றனர். துலாபார பிரார்த்தனையும் இவர் சன்னதியில் நிறைவேற்றப்படுகின்றது.  பலராமரது திருப்பாதங்களை தொட்டு வணங்கலாம். பலராமரை

பலராமர் ( காலடியில் கொடி)

அம்பரமே தண்ணீரே சோறேயறஞ் செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பரமூடறுத்தோங்கி உலகளந்
உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய்
செம்பொற்கழலடிச்  செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய் (திரு. 17)

என்று பாசுரம் பாடி வணங்கினோம். அடுத்து ஆலயத்துள் சென்று துவாரகாதீஷனை சேவிக்கச்சென்றோம்.

“வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்’ என்று பெரியாழ்வார் பாடியபடி சுற்றிலும் உயர்ந்த மதிள் சுவர்த்திருக்கோவில் கோபுரத்தின்  உயரம் 51.8 மீட்டர். கோபுரத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கலசத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. சாளுக்கிய கட்டிடக் கலை அமைப்பு.  இக்கோபுரம் ஐந்து மாடிகளைக் கொண்டது.  60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. உன்னதமான சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன.. கோயிலின் நடுவில் 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம்

கருவறையில் துவாரகாதீஷ் (ஸ்ரீகிருஷ்ணன்) சிரசில் கொண்டையுடன்  “காயா மலர் வண்ணன் கருவிளை போல வண்ணன் கமல வண்ணன் என்று ஆண்டாள் பாடிய படி சியாமள வர்ணத்தில் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் சேவை சாதிக்கின்றார். வலமேற்திருக்கரத்தில் கதையும், இடமேற்திருக்கரத்தில் சக்கரமும், வலகீழ்திருக்கரத்தில் பத்மும், இடகீழ்திருக்கரத்தில் சங்கமும் ஏந்தி சர்வாங்க சுந்தரனாக எழிலாக சேவை சாதிக்கின்றார். கருப்பு நிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. சாய்ந்த தலைப்பாகையிடன் கூடிய மகுடமும், பட்டு பீதாம்பரமும், கரியவாகி புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப்பெரியவாய கண்களும் ம்மை அப்படியே ஈர்க்கின்றன.

தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பேர் மற்றபேர் – தமருகந்த்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே
அவ்வண்ணம்  ஆழியான் ஆம்  -  என்று பொய்கையாழ்வார் பாடியபடி 
ஸ்ரீகிருஷ்ணரை குருவாகவும்,  சாரதியாகவும் கண்டான் அர்ச்சுன்ன், மானம் காத்த தமையனாக கண்டாள் பாஞ்சாலி. ஆப்த ண்பனாக கண்டார் குசேலர்,  உயிரினும் மேலான காதலானாகக் கண்டனர்  கோகுலத்து கோபியர், எல்லாமாகவும் சேவகனாகவும் கண்டார் பாரதியார், அக்காலத்தில் மன்னனாகக் கண்டனர் துவாரகாவாசிகள் இன்று நாம் தெய்வமாக, குழந்தையாக வணங்குகின்றோம். 

காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப் போலவும் மாலையில் பகவான் அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். அடியோங்கள் சென்றது குளிர் காலம் என்பதால் பால கிருஷ்ணருக்கு குளிருமே என்று கம்பளி உடைகள் அணிவித்திருந்தனர். கோடைக் காலத்தில் மலர் அலங்காரம் செய்கின்றனர். மாதவ்ஜீ என்று அழைத்து மகிழ்கின்றனர். முன்னர் கருவறையின் உள்ளே செல்ல அனுமதித்திருந்தார்களாம், தற்போது யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.
திரைலோக்ய மோகன சுந்தரனுக்கு எதிரே தேவகி சன்னதி. அதிகாலையில் பெருமாள்  கண் விழிப்பது தாயின் திருமுகத்தில்தான். மேலும் எந்த குறையும் இல்லாமல் தன் மகனுக்கு எல்லா சீர்களும் டைபெறுகின்றதா? என்று அன்னை கவனித்துக் கொள்வதாகவும் ஐதீகம்.  ”முன்னையமரர் முதல்வன் வண் துவாராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன்” என்று ம்மாழ்வார் மங்கலாசாசனம் செய்த ”தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை” திவ்யமாக சேவித்தோம்.

பின்னழகு 





அன்னை  மட்டுமா? அண்ணன் பலராமன், பட்டமகிஷிகள் எண்மர், மைந்தன், பேரன் ஆகியோருக்கும் சன்னதிகளும் அமைந்துள்ளன. ஸ்ரீகிருஷ்ணருக்கு எட்டு பட்டமகிஷிகள், எண்பது பிள்ளைகள். மொத்தம் 71 தலைமுறைகள்.  ஆலயத்தின் உள்ளே கிருஷ்ணரின் வம்ச மரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்திற்கு பின் 1.ருக்மணி, 2.சத்யபாமா, 3.ஜாம்பவதி, 4.நாக்நாஜ்தி, 5.காளிந்தி, 6.லக்ஷ்மணா, 7. மித்ரவிந்தா, 8. பத்ரா – சாய்பா ஆகிய எட்டு பட்டமகிஷிகளின் சன்னதிகள் ஒரே மண்டபத்தில் அமைந்துள்ளன. மேலும் ஆதி குக்கேஸ்வரர், சத்யநாராயணர், காயத்ரி, அம்பிகை, த்ரிவிக்ரமன், சரஸ்வதி, கோபால கிருஷ்ணர், தத்தாத்ரேயர், மகன் பிரத்யும்ன், பேரன் அநிருத்தன், மற்றும் துர்வாசருக்கும் ஒரு சன்னதி உள்ளது. துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். அடியோங்கள் சென்ற சமயம், வேதம் படிக்கும் சிறார்கள் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.

துவாரகையின் கிருஷ்ணர்தான் டாகோர் சென்று விட்டாரே இப்போதுள்ள கிருஷ்ணர் யார் என்று இன்னும் சொல்லவில்லையே என்கிறீர்களா? இதோ சொல்லி விடுகிறேன். துர்வாசரின் சாபத்தினால்  ருக்மணி ஸ்ரீகிருஷ்ணரை பிரிந்து பன்னிரண்டு வருட காலம் தனியாக தவம் செய்ய நேரிட்டது. இம்மூர்த்தத்தில் நான் உறைந்துள்ளேன் என்று ருக்மணி தினமும்  பூசை செய்ய ஒரு  மூர்த்தியை ஸ்ரீகிருஷ்ணர் அளித்தார். அம்மூர்த்தி அதற்குப்பின் லாட்வா கிராமத்தில் ஒரு குளத்தில் இருந்தது, டாகோர் சென்ற அந்தணர்களுக்கு கனவில் வந்து அக்குளத்தைக்  காட்டினார். அத்திருவுருவமே இப்போது துவாரகையில் அமைந்துள்ளது.  இனி ஒரு கதையா? அந்த துர்வாசரின் சாபக் கதை என்னவென்று அறிய ஆவலாக உள்ளதா? பொறுங்கள் ருக்மணி துவாரகையை தரிசிக்கும் போது சொல்கின்றேன். 

                                                                            நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

No comments: