Wednesday, May 24, 2017

நவ துவாரகை யாத்திரை -4

டாகோர் துவாரகை -2


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்   


  1   2   3   5   6   7   8    9   10   11   12    13 

  14   15   16   17   18   19   20    21   22    23    24    25   26   27   28

                                                     மஹாபிரபுஜீ                   ஸ்ரீநாத்ஜீ                      யமுனாஜீ 
டாகோர் துவாரகை ஸ்ரீகிருஷ்ணர்   ஆலயம் ஒரு கோட்டை போல அமைந்துள்ளது. மிக பிரம்மாண்டமான மதிற்சுவர், நாற்புறமும் வாயில்கள், கோட்டை வாயில்களைப் போலவே உள்ளன.  முக்கிய துவாரத்தின் மேலே நாகர்கானா அமைந்துள்ளது. பூசை சமயத்தில் இசைக் கலைர்கள் மற்றும் மேளகாரர்கள்  இங்கமர்ந்து இசைக் கருவிகளை வாசிப்பார்கள். உள்ளே நுழைந்தவுடன் வெளிப்பிரகாரத்தின் உட்புறத்தில்  இரு புறமும் பிரம்மாண்டமான தீபஸ்தம்பங்கள் இச்சுற்றில் மற்ற அலுவலக அறைகளும் உள்ளன. ஆலயத்தை வலம் வரும் போது துவாரகை கிருஷ்ணரை நிறுத்த துலாபாரத்தைக் காணலாம். தற்போது தங்கக் கவசத்தில் மின்னுகின்றது அத்தராசு.
பொன் துலாபாரம் 

ஒரு சமயம்   ருக்மணிசத்யபாமா ஆகிய  கிருஷ்ணரின்  இரு மனைவியரிடையே அன்பு குறித்து போட்டி எழுந்தது. அப்போது நாரதரின் யோசனைப்படி துலாபாரம் அமைத்து அன்பினை நிரூபிப்பது என்று முடிவானது. துலாபாரத்தில் கிருஷ்ணர் ஒரு தட்டில்  அமர்ந்திருக்க சத்யபாமா கர்வத்துடன் வைர வைடூரியங்கள், பொன் போன்றவற்றை  மறு தட்டில் வைத்தார். தன்னிடமிருந்த அனைத்து விலை உயர்ந்த பொருட்களை கொட்டியும்  கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயரவில்லை. அடுத்தாக ருக்மணி ஒரு பிடி துளசியை அன்பாக வேண்டி வைத்தார். கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயர்ந்துதுளசி இருந்த துலாபாரத் தட்டு கீழே சென்றது. பக்தியின் சிறப்பை விளக்கவும் சத்யபாமாவின் கர்வத்தை அடக்கவும் பகவான் செய்த லீலை அது. இக்கதைதான் தங்க துலாபாரத்தை டாக்கோர் துவாரகையில் தரிசித்த போது அடியேன் மனதில் தோன்றியது.


ங்க சிம்மாசனம்

பிரகாரத்தை வலம் வரும் போது ஸ்ரீகிருஷ்ணருக்கு நிவேதனமான பிரசாதங்களை விற்றுக்கொண்டிருந்தனர். மறு புறத்தில் ஒரு ங்க சிம்மாசனம் இருந்தது. உற்சவ மூர்த்தி எழுந்தருளும் போது இச்சிம்மாசனத்தில் சேவை சாதிப்பார் என்று கூறினார்கள். ஆலய வளாகத்தில் பெரிய மரங்கள் இருந்தன. கோவில் பிரம்மாண்டமாக இருந்தது. எட்டு குவி மாடங்கள் (Dome) மற்றும் 24 நெடிதுயர்ந்த ஸ்தூபிகள். அவற்றின் உச்சியில் உள்ள கலசங்கள்  தங்க கவசத்தில் மின்னுகின்றன.   கருவறை மேல் உள்ள சதுர வடிவமான  ஸ்தூபி 90 அடி உயரமானது. பல்வேறு மிருகங்களின் சுதை வடிவங்கள் கூரையெங்கும்  அமைத்துள்ளனர்.
இக்கோவிலை 1772ம் ஆண்டு புனேவின் பேஷ்வா மாதவ் ராவ் அவர்களின் அதிகாரி கோபால் ஜகந்நாத் தம்ப்வேகர் அவர்கள் இக்கோவிலைக் கட்டினார்.  அவரது கனவில் வந்து ஸ்ரீகிருஷ்ணர் கூறியபடி  பேஷ்வா மற்றும்  பரோடாவின் கைக்வாட் மன்னன் டாமாஜி கைக்வாட் இருவரும் ஒவ்வொரு கிராமத்தை இறையிலியாக அளித்தனர். அதில் டாகோர் கிராமத்தில் தம்ப்வேகர் தற்போதுள்ள இக்கோவிலை   பிரம்மாண்டமாக கட்டினார்.


சதுர விமானம் 
கருவறையும் சபா மண்டமும் உயரமாக அமைந்துள்ளன. வண் துவாராபதி மன்னனை  சேவிக்க   சுமார் 20 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். கருவறை மற்றும் சபா மண்டபத்தின் கதவங்களில் வெள்ளிக் கவசம் ஓளிர்கின்றன. அதில் பல கிருஷ்ண லீலை புடைப்பு சிற்பங்கள் எழிலாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை மூன்று பகுதிகளாக உள்ளது. வலப்பக்கம் ஸ்நான அறை, டுவில் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். இடப்பக்கம் சிகரபந்தி எனப்படும் பள்ளியறை. பள்ளியறையில் வெள்ளி ஊஞ்சல், படுக்கைகள் உள்ளன.  சபாமண்டபத்தில் இருந்து போரிலிருந்து ஓடிய சுந்தரனை சேவிக்கின்றோம்.  சபா மண்டபத்தின் உள்ளே சரியான கூட்டம். சியாமள வண்ணத்தில் சங்கு சக்கரம் கதை அபய  திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கின்றார் மனமோகனன். அபய திருக்கரத்தில் தாமரையும் உள்ளது. கிரீடத்தில் கண்ணனுக்கே உரித்தான மயிற்பீலி, பட்டுப் பீதாம்பரம், வனமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் திருமேனியை அலங்கரிக்க எழிலாக, ஒயிலாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார்.   துவாரகையிலிருந்து வந்த சக்கரவர்த்தி   என்பதால் பொன் சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார்.ரண் சோட் ராய் ஜீ 
கொண்டல் வண்ணன், கரு நீல வண்ணன், அதிருங்கடல் வண்ணன், உருவு கரிய ஒளி மணி வண்ணன், காயா மலர் நிறவன், கருவுடை முகில் வண்ணன், கருவிளை போல் வண்ணன், அஞ்சன வண்ணன், கருமாணிக்கம் என்றெல்லாம் ஆழ்வார்கள் பாடி மகிழந்த வண்ணம், இப்பகுதியில் அனைத்து கிருஷ்ண விக்கிரகங்களும் கருப்பு பளிங்குக் கல்லால் ஆனவை. செவ்வரி ஓடிய பரந்து விரிந்த அழகிய பங்கயக் கண்கள் அப்படியே அனைவரையும் சொக்க வைக்கின்றது  பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றன. வலக்கரத்தில் புல்லாங்குழல், பட்டு பீதாம்பரம், வரத்ன மாலைகள், மயிற்பீலியுடன் கூடிய மகுடம், திருப்பாதங்களில் கொலுசு என்று பெருமாளை  அருமையாக சேவித்தோம்.   வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை அப்படியொரு அழகு, ஈர்ப்பு அந்த சௌந்தர்யத்தைப் பருகிக்கொண்டே நின்றோம்.  கருவறை முழுவதும் தங்கத்தால் இழைத்துள்ளனர்.


 வெள்ளித் திருக்கதவம்  
இரு பக்கமும் தொலைக் காட்சி பெட்டிகளிலும் பெருமாளை சேவித்துக் கொள்ளலாம். சில குஜராத்தி  தொலைக் காட்சிகளிலும் ஆலயத்தின்  http://ranchhodraiji.in  வலைத்தளத்திலும்  நேரடி ஒலிபரப்பு செய்கின்றனர்.  சபா மண்டபத்தின் குவிமாடத்தின் உட்பக்கம்  கூரையில் வண்ண வண்ணக் கண்ணாடிகளால் ஆன அருமையான ராஜபுதன பூந்தோட்டக்காட்சிகள்,  எழிலாக  அமைத்துள்ளனர். சபா மண்டபமெங்கும் புள்ளின் வாய் கீண்டல், பேய் முலை உண்ணல், கள்ளச்சகடம் உதைத்தல், கன்று குணிலாய் எறிதல், காளிய ர்த்தனம் ஆகிய பால லீலைகளின் அற்புத ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றை எல்லாம் கண்ணுற்ற போது

காயாமலர் நிறவா! கருமுகில்போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே
தூயடம்பயிலும் சுந்தரவென்சிறுவா!
      துங்கமதக்கரியின் கொம்பு பறித்தவனே!
ஆயமறிந்துபொருவானெதிர்வந்தமல்லை
      அந்தரமின்றியழித்தாடிய தாளினையாய்!
ஆய! எனக்கொருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள்போரேறே! ஆடுக ஆடுகவே (பெரி.தி 1.5.6)
 என்னும் பெரியாழ்வாரின் பாசுரம் மனதில் தோன்றியது.  
பெருமானுக்கு மிக அருகில் பெண்களுக்குக்கென்றே  தனி இடம் ஒதுக்கியிருக்கின்றனர். கிருஷ்ணருக்கு அருகில் சென்று தரிசிக்க உரிமை, அவர்கள் கோபிகைகளாக இருந்ததனாலோ  என்னவோ இக்கோவிலில் வழங்கியுள்ளனர்? கூட்டம் அதிகமாக இருப்பதாலும் பெரிய சபா மண்டபம் என்பதாலும் கோயில் ஊழியர்கள் கயிற்றில் தொங்கிக்கொண்டே  தட்சனை வசூலித்தது புதுமையாக இருந்தது.  


ஸ்ரீநாத்ஜீ

 வல்லபாச்சார்யாரின் புஷ்டி மார்கத்தின்படி வழிபாடுகள் டைபெறுவதால் இசை (ராக்), பிரசாதம் (போக்), உடை மற்றும் அலங்காரம் வஸ்த்ர ஔர் ச்ருங்கார் (வஸ்த்ர ஔர் ச்ருங்கார்) ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது.  கிருஷ்ணனை இவர்கள் சிறு குழந்தையாகவே பாவித்து வணங்குகின்றனர். எப்படி ம் இல்லத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து மகிழ்கின்றோமோ அது போலவே இவர்களும் ஒரு நாளில் பலமுறை பட்டு பீதாம்பரங்கள் மற்றும் விலை உயர்ந்த வரத்ன ஆபரணங்களாலும் பல்வேறு அலங்காரம் செய்து மகிழ்கின்றார். குழந்தைக்கு எப்படி பார்த்து பார்த்து உணவளிக்கின்றோமோ அதே போல ஒரு நாளில் பல முறை பிரசாதம் படைக்கின்றனர். அதுவும் இனிப்புகள் (பால் இனிப்புகள்) பெரிய அளவில்  இவருக்கு  நிவேதனம்   செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வதைப் போலவே கருவறை முழுவதும் வண்ணமயமான  துணிமணிகளால் அலங்காரம் செய்கின்றனர். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கின்றனர்.  பன்னிரு மணி வரை சன்னதி திறந்திருக்கின்றது. காலையில் ங்கலா போக், பால் போக் என்று சிருங்கார் போக், க்வால் போக், ராஜ் போக் என்று ஐந்து முறை பிரசாதம் படைக்கின்றனர். அப்போது ஆரத்தியும் காண்பிக்கின்றனர். பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் சிறிது நேரம்  ஓய்வெடுக்கின்றார். மறுபடியும் மாலை 4:30 மணிக்கு தரிசனம் ஆரம்பம் இரவு 8 மணி வரை தரிசனம் தொடர்கின்றது.  மாலையில் உதாபன் போக், சயன் போக் மற்றும் சக்தி போக் என்று மூன்று முறை பிரசாதம் படைக்கின்றனர். பெருமாளுக்கு பிரசாதம் படைக்க விரும்பும் அன்பர்கள் கட்டணம் செலுத்தி மஹா போக் மற்றும் ராஜ் போக் படைக்கலாம். அடியோங்களுக்கு ஒரு ஆரத்தி சேவிக்கும் பாக்கியம்  கிட்டியது.

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத்தென்னிலங்கைசெற்றாய்! திறல்போற்றி
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி
கன்றுகுணிலாவெறிந்தாய்! கழல்போற்றி
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி
வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி
என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்! (திரு-24)

என்று ஆண்டாள் நாச்சியாரின் பாசுரம் பாடி திவ்யமாக சேவித்தோம். பல பக்தர்கள் தங்களின் கரங்களில் இனிப்புகளை வைத்து ஸ்ரீகிருஷ்ணருக்கு படைக்கின்றனர். “ரண்சோட் ராய் ஜீக்கு ஜே!” என்று கோஷமிட்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.  இத்தலத்தில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை குறிப்பாக ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையிலிருந்து டாக்கோருக்கு வந்த வராத்திரிக்குப் பின் வரும்  புரட்டாசி பௌர்ணமியும், ஹோலிப் பண்டிகையான பங்குனிப் பௌர்ணமி, சித்திரை, ஆவணி மாதப் பௌர்ணமிகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. மற்றும் ஜன்மாஷ்டமி, தசரா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அத்தினங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் இத்தலத்தில் குவிகின்றனராம்.  முகலாயர் காலத்தில் இக்கோவில் சிதைக்கப்பட்டுள்ளது, பின்னர் புனருத்தாரணம் செய்துள்ளனர்.
முதல் துவாரகையின் திவ்யமான தரிசனத்திற்குப் பிறகு வெளியே வந்த போது மஹாலஷ்மித்தாயாரின் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு சந்தில் இத்தலத்திற்கு ஸ்ரீகிருஷ்ணர் வருவதற்கு காரணமாக இருந்த போதாணா அவர்களின் இல்லத்திற்கு அருகில் உள்ளது. சன்னதி மூடி விடுவார்கள் எனவே விரைவில் சென்று சேவியுங்கள் என்று அங்கிருந்த அன்பர்கள் சிலர் அறிவுறுத்தினர்.  அங்கு சென்று தனிக்கோவில் நாச்சியாராக விளங்கும் தாயாரை சேவித்தோம்.செல்வத்திருமகளின்  ஆலயம் எளிமையாவும் அமைதியாகவும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்புறம் சிவன் சன்னதி அடுத்து ஆஞ்நேயர் சன்னதி. இவ்வாலயமும் கருவறை மற்றும் சபா மண்டபத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் அருமையான அலங்காரத்தில் மஹாலக்ஷ்மித்தாயாரை திவ்யமாக சேவித்தோம். வெள்ளிக்கிழமைகளில் ரண்சோட்ராய் உற்சவர்  தாயாரின் சன்னதிக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாராம்.
பெருமாளுடன் தாயாரையும் சேவித்த மனத்திருப்தியுடன் 200 வருடங்கள் ஸ்ரீகிருஷ்ணர் இருந்த, அருகில் உள்ள போதாணாவின் இல்லத்திற்கு சென்றோம். கிருஷ்ண விக்கிரகம் இருந்த இடத்தில் ஒரு சப்பரத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் படம். அருகில் ஒரு பளிங்கு மேடையில் திருப்பாதங்கள். வீட்டின் ஒரு புறம் போதாணாவும், கங்காபாயும் சிலை வடிவில் அமைத்துள்ளனர். திவ்ய தம்பதிகளின் தரிசனத்திற்குப்பின் துவாரகைக்கான பயணத்தைத் தொடர்ந்தோம். 

                                                                                 நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

No comments: