கால மாற்றத்தினால் இன்றைய கால கட்டத்தில் மேதை நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,திருவல்லிக்கேணிப் பகுதியில் இருந்தாலும், திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபாலீஸ்வரர் கோவில் திருமயிலையிலேயே முற்காலத்தில் இருந்தது .
அக்காலத்தில் இக்கோவிலைச் சுற்றி 64 தீர்த்த குளங்கள் இருந்தனவாம், மிகப்பெரிய தீர்த்தமாக வங்க கடலும் கோவிலுக்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் தீர்த்தங்களை பாரிபாலனம் செய்யும் ஈஸ்வரர்= தீர்த்தபாலீஸ்வரர் என்று திருநாமம்.
சூரியனை நோக்கி நீர் விடுவதான ”அர்க்கியம்” இங்கு முன் காலத்தில் முனிவர்களாலும் சித்தர்களாலும் செய்யப்பட்டதாக நம்பிக்கை. சிறிய கோவில் தான் ஆனால் மிகவும் பழமையானது அமைந்திருக்கும்சுற்றுபுறத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே அமைதி தவழ்கிறது.
திருபுரசுந்தரி அம்மன் பெயருக்கு ஏற்றவாரே அருளும் அழகும் பொங்க காட்சி அளிக்கிறார். நீர் சார்ந்த உணவுகளான பாயசம், பானகம் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைத்து வழிபட்டு எல்லோருக்கும் பகிர்ந்தால் நலம் பல பெறலாம்.
கண்ணாடி தரிசனம்
**************
அலங்காரம்
கற்பூர ஆரத்தி
**************
மல்லீஸ்வரர்
முற்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் எம்பெருமானுக்கு மல்லீஸ்வரர் என்று திருநாமம். மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர்.
மல்லிகையின் வாசம் போல பக்தர்களின் மனதில் பரவசம் ஏற்படுத்தும் ஈஸ்வரர். நமதுமனமாகிய மலரை நற்சிந்தனையோடு இறைவன் திருவடியில் சமர்பித்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள்பல. அது அகவழிபாடு. புறவழிபாடாக மனம் மிகுந்த மலர்களையும் உணவு வகைகளையும் தாமரை இலையில் படைத்து வழிபட்டு பகிர்வது இந்த கோவிலில் சிறப்பு.
கற்பூர ஆரத்தி
*******************
அங்காளபரமேஸ்வரி அம்பாள்
2 comments:
அருமை
மிக்க நன்றி
Post a Comment