Wednesday, March 15, 2017

மாசி மக தீர்த்தவாரி - 2

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   3   4   5  

கோடீஸ்வர யோகம் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும்  வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. 


புதுப்பேட்டை அரங்கநாத சுவாமி தீர்த்தவாரி 

கருடவாகனத்தில் ரங்கநாத ஸ்வாமி


கடலில் இறங்கும் பெருமாள் *****************மாதவப்பெருமாள் 


சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் 
**************


அணைக்கரைப்பட்டு
  பட்டாபிஷேக ராமர்  ஆலயம் பெருமாள் 

உபய நாச்சியார்கள் 

சக்கரத்தாழ்வார் 

பதினாறு கரங்களுடன் முன்புறம் சக்கரத்தாழ்வாரும் பின்புறம்   யோக நரசிம்மரும் கூடிய சக்கரத்தாழ்வாரே எழுந்தருளி அருள் பாலித்தார். 

நரசிம்மர் 

மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.  குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால்  குழந்தை  பிறப்பதாக ஐதீகம்.


மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீலலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.

இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. 

                                                                                                                                                                                                                                                                                                                                                            மாசிமக தரிசனம்   தொடரும்  .................

3 comments:

P Vinayagam said...

தீர்த்தவாரி என்றால் தமிழில் எப்படி சொல்வார்கள்?

Muruganandam Subramanian said...

பெருவிழாவின் நிறைவாக நடைபெறும் நீராட்டு உற்சவம். (மலையாளத்தில் ஆறாட்டு என்று குறிப்பிடுவர்).

கோவில் குளத்திலோ அல்லது ஆற்றிலோ, கடலிலோ சுவாமியின் சார்பாக அஸ்திர தேவர்( ஆயுதப்படை) நீராடி பக்தர்களுக்கு அருளுவதே தீர்த்தவாரி.

Muruganandam Subramanian said...

திருமயிலை மாசி மக தீர்த்தவாரியை திருஞானசம்பந்தர் மாசி கடலாடல் என்று பாடியுள்ளார். இதோ அப்பாடல்

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்