Showing posts with label அஸ்திரதேவர். Show all posts
Showing posts with label அஸ்திரதேவர். Show all posts

Sunday, March 19, 2017

மாசி மக தீர்த்தவாரி - 4

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   3   5  


                                               





                                       
கால மாற்றத்தினால் இன்றைய கால கட்டத்தில் மேதை நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,திருவல்லிக்கேணிப்  பகுதியில் இருந்தாலும், திரிபுரசுந்தரி உடனுறை  தீர்த்தபாலீஸ்வரர் கோவில் திருமயிலையிலேயே முற்காலத்தில் இருந்தது .

அக்காலத்தில் இக்கோவிலைச்  சுற்றி 64 தீர்த்த குளங்கள் இருந்தனவாம், மிகப்பெரிய தீர்த்தமாக வங்க கடலும் கோவிலுக்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் தீர்த்தங்களை பாரிபாலனம் செய்யும் ஈஸ்வரர்= தீர்த்தபாலீஸ்வரர் என்று திருநாமம். 

சூரியனை நோக்கி நீர் விடுவதான ”அர்க்கியம்” இங்கு முன் காலத்தில் முனிவர்களாலும் சித்தர்களாலும் செய்யப்பட்டதாக நம்பிக்கை. சிறிய கோவில் தான் ஆனால் மிகவும் பழமையானது அமைந்திருக்கும்சுற்றுபுறத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே அமைதி தவழ்கிறது. 

திருபுரசுந்தரி அம்மன் பெயருக்கு ஏற்றவாரே அருளும் அழகும் பொங்க காட்சி அளிக்கிறார். நீர் சார்ந்த உணவுகளான பாயசம், பானகம் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைத்து வழிபட்டு எல்லோருக்கும் பகிர்ந்தால் நலம் பல பெறலாம். 









கண்ணாடி தரிசனம் 

**************


 


அஸ்திர தேவரில் சிவசக்தி 


அபிஷேகம் 


அலங்காரம் 




  கற்பூர ஆரத்தி 


 **************


மல்லீஸ்வரர் 

முற்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் எம்பெருமானுக்கு மல்லீஸ்வரர்  என்று திருநாமம்.  மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர்.

மல்லிகையின் வாசம் போல பக்தர்களின்  மனதில் பரவசம் ஏற்படுத்தும் ஈஸ்வரர். நமதுமனமாகிய மலரை நற்சிந்தனையோடு இறைவன் திருவடியில் சமர்பித்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள்பல. அது அகவழிபாடு. புறவழிபாடாக மனம் மிகுந்த மலர்களையும் உணவு வகைகளையும் தாமரை இலையில் படைத்து வழிபட்டு பகிர்வது இந்த கோவிலில் சிறப்பு. 







கற்பூர ஆரத்தி 


*******************


அங்காளபரமேஸ்வரி அம்பாள் 



                                                                                                                                 மாசிமக தரிசனம்   தொடரும்  .................




Saturday, November 12, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -15

சிவமயம்

திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!



தக்ஷிணாயண புண்ய காலமான ஆடி முதல் நாள் அன்று தீர்த்தம் கொடுக்க திருக்குளக்கரையில் எழுந்தருளியிருக்கும் பஞ்சமூர்த்திகள்.


யானை வந்து இறைவனை வணங்கும் காட்சி





தீர்த்தவாரி(2010) முடிந்தபின்
திருவீதி உலா வரும் பஞ்ச முர்த்திகள்.

ஐந்து முர்த்திகளும் ஒரே வண்டியில் உலா வரும் அற்புத காட்சி. இந்த வருடம் ஒரு அன்பர் மானசரோவர் தீர்த்தம் கொண்டு வந்திருந்தார் தீர்த்தவாரியின் போது அனைத்து பக்தர்களும் அந்த வருடம் மானசரோவர் தீர்த்தத்தில் குளிக்கும் வாய்ப்புப் பெற்றனர்.

தீர்த்தவாரி - 2011



சோமாஸ்கந்தர்



அஸ்திர தேவருக்கு திருக்குளக்கரையில்
பால் அபிஷேகம்


தயிர் அபிஷேகம்


அலங்கார பூஜை அஸ்திரதேவருக்கு

புண்ணிய நாளில் தீர்த்தம் கொடுத்தபின் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா சென்று வந்த பின் உச்சிக் கால அபிஷேகம் பிரம்மோற்சவத்தின் பத்து நாட்களும், வேத மந்திரங்களுடனும் ஹோமத்தினாலும் சுத்திகரிக்கப்பட்ட யாக சாலை கும்ப நீரினால் மூலவருக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.