Monday, February 15, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 9

முத்துக்குமார சுவாமி தேவேந்திரபோகம்
மங்கள கிரி விமான சேவை

மங்கள கிரி விமானத்தில் எழிலாக தேவ சேனாதிபதி




கந்த கோட்டத்தின் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் பகுதியில் முருகப்பெருமானின் திருஅவதார நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. இவ்வாறு ஆணவமாம் சூரனை சம்ஹாரம் செய்து ஜெயந்தனையும் மற்ற தேவர்களையும் விடுவிக்க முக்கண் முதல்வனின் ஐந்து முகங்கள் மற்றும் அம்மையின் அம்சமான அதோ முகத்திலிருந்து ஆறு முகனாக திருஅவதாரம் செய்த முருகப்பெருமான் தேவ சேனாதிபதியாக பட்டாபிஷேகம் நடைபெற்று மங்களகிரி விமானத்தில் பவனி வரும் அழகை காண்கின்றீர்கள்.




மங்கள கிரி விமானத்தின் முன்னழகு



பின்னழகு

பின்னர் சிவனின் அம்சமே முருகன் என்பதை உணராமல் பால் மணம் மாறாத பாலகன் என்று இறுமாந்து எதிர்த்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து பின்னர் ஜெயந்தனையும் மற்ற தேவர்களையும் விடுவித்த இந்திராணி மாங்கல்ய ரட்சகன் முருகப்பருமான் இந்திரன் புதல்வி தேவயாணையை திருமணம் செய்து கொள்கின்றார். இவ்வைபவம் பதினான்காம் நாள் நடைபெறுகின்றது. திருக்கல்யாணம் முடிந்த பின் துதிக்கை மற்றும் வால் ஆடும் வெள்ளை யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி தேவியருடன் பவனி வந்து அருளுவார். அதற்கடுத்து வள்ளியை மணக்க முருகப்பெருமான் நடத்தும் வேடர் பறி உற்சவமும் வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றது.


காமதேனு வாகனத்தில் தேவியர் இருவரும்

2 comments:

Unknown said...

தத்ரூபமான கலை வடிவு நிறைந்த தங்க தேரில் பவனி வந்த அத்துனை தரிசன காட்சிகளுக்கு முதல் சிரம் தாழ்த்தி கை கூப்பி வணங்குவோம் .....சித்ரம்..//

S.Muruganandam said...

வாருங்கள் சித்ரம், முதல் தடவை வருகின்றீர்கள். இன்னும் வரும் சிவ சுப்பிரமணியின் அருட்காட்சிகளையும் கண்டு அருள் பெறுங்கள்.