Tuesday, February 2, 2010

முத்துக்குமார சுவாமி தேரோட்டம்

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 7


பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் முத்துக்குமாரசாமி திருத்தேரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். பெரிய தேரில் முத்துக்கும்ரன் எழுந்தருள் சிறிய தேரில் தாயார்கள் இருவரும் எழுந்தருளி உடன் தேரோட்டம் கண்டருளுகின்றனர்.


முத்துக்குமரன் திருத்தேர்




திருத்தேரில் அருள் பாலித்த முத்துக்குமரன்


உடன் தேவியர்


திருத்தேரில் வீதி வலம் வந்த பின் தேரிலிருந்து இறங்கி அபிஷேகம் கண்தருளுகின்றார் சுவாமி. பின்னர் வசந்த மண்டபத்தில் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருட் காட்சி தந்து இரவு புது அலங்காரத்தில் வீதி வலம் வந்து அலங்கார மண்டபன் வந்தருளுகின்றார்.

புது அலங்காரம்


கண்ணாடி அறையில் முத்துக்குமாரசுவாமி


இது வரை கந்த கோட்டத்தின் பல்வேறு சிறப்புக்களையும் தைப்பூச பிரம்மோற்சவத்தின் பல்வேறு அருட்காட்சிகளையும் கண்டு அருள் பெற்ற அனைவருக்கும் நன்றி.

கற் சிற்பங்கள் ஆகட்டும், சுதை சிற்பங்கள் ஆகட்டும், மர சிற்பங்கள் ஆகட்டும், அருமையான சிறப்புப்பெற்ற வாகனங்கள் ஆகட்டும் எல்லாவற்றிலும் பெரும் கலைப் பொக்கிஷமாக திகழ்கின்றது இத்தலம். வருடம் முழுவதும் திருவிழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும் இத்தலம் சென்று கந்த சுவாமியையும், முத்து குமார சுவாமியையும்

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் - எழுந்தே மகிழ்ந்து

தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன் - தொழுதே உருகி

அழும் போதும் வேலும் மயிலும் என்பேன் - அடியேன் உடலம்

விழும் போதும் வேலும் மயிலும் என்பேன்- செந்தில் ( கந்தக் கோட்ட)வேலவனே !

என்று வண்ண சரபம் சுவாமிகள் பாடியபடி வணங்கி நன்மையடையுமாறு பிரார்த்திக்கின்றேன்.





6 comments:

sathishsangkavi.blogspot.com said...

படங்கள் அனைத்தும் அருமை...

Anonymous said...

மயிலேறி உலக வலம் வந்த வேலவனை
கணணியூடாக அருள் செய்ய அனுப்பியமைக்கு
மிக்க நன்றி.

S.Muruganandam said...

நன்றி கிரமாத்துக்காரன் Sankavi. முதல் முரை வருகின்றீர்கள். வரும் காலங்களிலும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

S.Muruganandam said...

//மயிலேறி உலக வலம் வந்த வேலவனை
கணணியூடாக அருள் செய்ய அனுப்பியமைக்கு
மிக்க நன்றி//

தரிசித்த தங்களுக்கும் நன்றி.

Unknown said...

மயிலுமாடி நீ ஆடி வர வேண்டும் .எழும் போதும் .
.எழுந்த போதும் ..
..தொழும் போதும்
உருகி அழும் போதும்
...உடல் விழும் போதும்

.மயிலுமாடி நீயும் ஆடி வர வேணும் .
..... .சித்ரம்../

/

S.Muruganandam said...

//.மயிலுமாடி நீயும் ஆடி வர வேணும் .
..... .சித்ரம்..//

ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ