பழனியாண்டவர் உபநயன உற்சவம்
தைப்பூசம் பத்தாம் நாளன்று தினமும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சேவை சாதித்த உற்சவம் கொடியிறக்கம் நடைபெறுகின்றது. அநேகமாக எல்லா ஆலயங்களிலும் பத்து நாள் பிரம்மோற்சவம் நடைபெும் ஆனால் கந்த கோட்டத்தில் இருபது நாட்கள் பிரம்மோற்சவம் நதைபெறுகின்றது. எனவே அடுத்த நாள் கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு எழுந்தருளி தெப்பல் உற்சவம் கண்டருளி திரும்பி வருகின்றார். பன்னிரண்டாம் நாள் மாலை பழனியாண்டவர் பால தண்டாயுதபாணிக்கு உபநயன உற்சவம் நடைபெறுகின்றது. பின்னர் அவர் பதினாறு கால் விமானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தாங்கள் பார்க்கின்ற படங்கள் பால தண்டாயுதபாணியின் அருட்காட்சிகள்.

பதினாறு கால் விமானம் பின்னழகு

பழனியாண்டவருடன் இன்று உற்சவர் முத்துக்குமார சுவாமி இன்றைய தினம் வாள்கார இரத்தின செட்டியார் பாரியாள் அபரஞ்சி அம்மாள் கண்ணாடி பல்லக்கு சேவை தந்தருளுகின்றார். இன்றைய தினம் தான் பாகம் பிரியா அம்மைகளை ஐயனின் இரு பக்கமும் இல்லாமல் தனியாக முத்துக்குமரனுக்கு எதிரில் சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. அலங்கார மண்டபத்தில் கண்ணாடி பல்லக்குக்கு எழுந்தருளும் போது ஒரே மஞ்சத்தில் எதிரெதிராக ஐயனும் அம்மைகளும் எழுந்தருளி அருள் பாலித்தனர்.



3 comments:
முத்துகுமரன் தேர் பவனியும், பழனி ஆண்டவர் கண்ணாடி பல்லக்கும் கண்கொள்ளக் காட்சியாக அமைந்தது...
தரிசனம் செய்ய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ...
மிக்க நன்றி தினமும் வந்து தரிசனம் செய்ததற்கு. ( கால தாமத்த்திற்கு வருந்துகிறேன்)
:)
Post a Comment