Tuesday, October 28, 2008

கந்தன் கருணை -2

முத்துக்குமார சுவாமி


வைத்தீஸ்வரன் கோவில்வள்ளி தெய்வாணையுடன் திருமுருகன்


பாரத்வாஜேஸ்வரம் சென்னை
செங்குந்தக்கோட்டம் திருக்கல்யாணக்கோலம்

கஜ வள்ளி

வன வள்ளி

திருப்போரூர் சுயம்பு முருகர் ஆலய கோபுரம்

திருப்போரூர் திருக்குளம்


சக்தி வேல் கொண்டு சூர சம்ஹாரத்திற்கு எழுந்தருளும் செங்குந்தக்கோட்ட அழகன்மயில் வாகனம் - திருநள்ளார்வள்ளலார் பாடிய தர்மமிகு சென்னை கந்த கோட்டத்துள் வளர் கந்த வேள் (முத்துக்குமார சுவாமி)
ஸ்கந்த சஷ்டி விழா கந்த கோட்டத்தில் ஆறு நாட்கள் வெகு சிறப்பாக கோடி அர்ச்சனையுடன் நடைபெறுகின்றது. மூலவர் கந்த சுவாமிக்கு மூலவர் சன்னதியிலும், உற்சவர் முத்துக் குமார சுவாமி ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சலிலும் , சரவணப் பொய்கை குளக்கரையிலே ஞான தண்டாயத பாணிக்கும், கல்யாண மண்டபத்தில் ஆறு முக சுவாமிக்கும் என நான்கு இடங்களில் கோடி அர்ச்சனை பெரு விழாவாக நடைபெறுகின்றது.
அப்போது ஒவ்வொரு வேளையிலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், சோடசோபசாரம். வேத பாராயணம், திருமுறை பாராயணம், ஜபம், ஹோமம் சந்தர்ப்பணை முதலிய வைபவங்களுடன் கோடி அர்ச்சனை சிறப்பாக நடைபெறுகின்றது. சமஸ்கிருதத்தில் சகஸ்ரநாமம் முடிந்த பிறகு அன்பர்கள் அனைவரும் முருகனை துதிக்க ஏதுவாக தமிழில் நூற்றியெட்டு போற்றிகள் கூறுவது வேறு எக்கோவிலிலும் இல்லாத ஒரு புதுமை.
கோடி அர்ச்சனையில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக பால சுப்பிரமணியர் குளக் கரையில் எழுந்தருளி அர்ச்சனைகளை ஏற்றுக்கொள்கிறார்.
கந்தன் கலையரங்கத்தில் ஆறு நாட்களும் ஆறு விதமான கொலு,


மஹா ஸ்கந்த ஷஷ்டி முதல் நாள் வள்ளியை மணம் புரிய யானையாக வந்து உதவிய யானை முகருக்கு சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் வைர அங்கியில் அருட் காட்சி கலச யாக பூஜை.இரண்டாம் நாள் முருகப் பெருமான் ஈசனுடன் ஞான மொழி பேசும் கோலம்
மூன்றாம் நாள் நவ வீரர்களுடன் சூர சம்ஹார மந்திர ஆலோசனை,
நான்காம் நாள் திரு முருகன் சிவபெருமானை வழிபடும் திருக்கோலம்,
ஐந்தாம் நாள் திருமுருகன் மாறுபடு சூரரை வதைக்க சிவசக்தியிடம் சக்தி வேல் வாங்கும் திருக்கோலம்,
மஹா ஸ்கந்த சஷ்டியன்று சூர சம்ஹார திருக்காட்சி என்று நாள் ஒரு அலங்காரம்.

கந்தர் ஷஷ்டியன்று மாலை ஆறு மணியளவில் தொண்டை மண்டல வழக்கப்படி சூர சம்ஹாரத்திற்கு தங்கக் குதிரை வாகனத்தில் அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் எழுந்தருளி , ஆணவமாம் சூரர்களை சம்ஹாரம் செய்தருளுகின்றார். சூர சம்ஹாரம் பாய்க்கடைக்கு அருகில் நடைபெறுகின்றது. முருகன் கோபமாக சூர சம்ஹாரத்தை செய்ய புறப்படும் விதமாக அன்று அவருக்கு சிவப்பு அங்கி அணிவிக்கப்படுகின்றது. சூர சம்ஹாரதிற்குப்பின் மயில் வாகனத்துடனும் சேவற் கொடியுடனும் வெற்றி வீரராக தேவ சேனாபதி முத்துக் குமரன், சரவணபவன், காங்கேயன், ஸ்கந்தர், கார் மயில் வாகனன், குகன் வீதி உலா வந்து அருள் பாலித்து நள்ளிரவுக்கு மேல் திருக்கோவிலுக்கு திரும்புகிறார்.


அடுத்த நாள் காலையில் மூலவர், ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி மஹா அபிஷேகமும், மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 பன்னீர் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று மாலை தெய்வானை அம்மை திருக்கல்யாணம் பின் மயில் வாகன உற்சவம் திருவீதி உலா என வெகு சிறப்பாக நடை பெறுகின்றது ஸ்கந்தர் ஷஷ்டி பெரு விழா.


முத்துக் குமரனின் நாமங்கள் நீங்காது ஒலித்திடும் நன்னாளான இந்த ஸ்கந்த ஷஷ்டி நாட்களில் நீங்கா மனத்தினராய் வழிபடும் அன்பர்களுக்கு, நித்தம் துனையிருந்து அருள் பாலிக்கும் கந்த வேளை இத்திருநாட்களில் நாடி வந்து வணங்கும் பக்த கோடிகள் எண்ணிலடங்கர். கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும் மின்விளக்கு அலங்காரங்களையும். பிரதி தினமும் காலை முதல் திருக்கோயில் முன்பாக உள்ள முத்துக்குமரன் கலை அரங்கில் கலை நிகழ்ச்சிகள் என்று ஆறு நாட்களூம் கோலாகலம்தான் இத்திருக்கோவிலில்.


இனி வள்ளலார் பாடிய ஒரு பாடல்


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளேதண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி சண்முகத் தெய்வமணியே


( எதிர்மறையாக எதுவும் கூறாமல் நேர் மறையாகவே பாடியுள்ளார் பாருங்கள் வள்ளலார் சுவாமிகள்)
வேலும் மயிலும் துணை.

கந்தன் கருணை தொடரும்.............

5 comments:

Anonymous said...

அழகு முருகன்
ஆனந்த தரிசனம்
அருளியமைக்கு
மிக்க நன்றி.

Logan said...

மிகவும் நல்ல பதிவு, கந்த கோட்டத்திலும் திருபோரூரிலும் நடந்த சூர சம்ஹார காட்சிகள் நினைவுக்கு வருகின்றது,

நன்றி
லோகன்

Kailashi said...

நன்றி அனானியாக வந்து தரிசித்த அன்பரே.

Kailashi said...

//கந்த கோட்டத்திலும் திருபோரூரிலும் நடந்த சூர சம்ஹார காட்சிகள் நினைவுக்கு வருகின்றது//

கந்தர் சஷ்டியன்று கந்த கோட்ட குமரனின் சூர சம்ஹார காட்சிகளை பதிவிட ஐயன் ஆனை வந்து தரிசியுங்கள் Logan ஐயா அவர்களே.

cheena (சீனா) said...

அன்பின் கைலாஷி

அழகிய பல கோவில்களின் கந்தன் படங்களை - காணக்கிடைக்காத படங்களை இட்டு, கந்த கோட்ட நிகழ்ச்சி நிரலுடன், சூர சம்ஹார நிகழ்வுளைச் சுட்டிக் காட்டி, வள்ளலார் பாடலுடன் நிறைவு செய்த இரண்டாம் பாகம் அருமை அருமை.

சஷ்டி நாட்களில் கந்தன் கருணை எங்கள் மீதும் விழ வைத்த நண்பருக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்