Thursday, October 23, 2008

கந்தன் கருணை -1

"சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் ", இது அனைவரும் அறிந்த பழமொழி இதன் உண்மையான விளக்கம் - ஸ்ரீ கந்தர் சஷ்டியில் அழகன் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கருப்பையில் (அகப்பையில்) குழந்தை தோன்றும். ஆம குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறந்த உபாயம்

"கந்தர் சஷ்டி விரதம்" .






மூவிரு முகங்கள் போற்றி


முகம் பொழி கருணை போற்றி


ஏவரும் துதிக்க நின்ற


ஈராறு தோள் போற்றி


காஞ்சி மாவடி வைகும்


செவ்வேள் மலரடி போற்றி


அன்னான் சேவலும் மயிலும்


போற்றி; திருக்கை வேல்


போற்றி; போற்றி
என்றபடி நாம் அனைவரும் உய்ய கருணை பொழியும் கநத வேளின் கந்தர் சஷ்டி புனித நாட்களில் அவரது அற்புத திருக்கோலங்கள், (பல் வேறு ஆலயங்களில் பதியப்பட்டவை) கண்டு அவரின் கருணை மழைக்கு பாத்திரமாகுங்கள் அன்பர்களே.




சென்னை கந்தசுவாமி கோவிலென்று அழைக்கப்படும் முத்துகுமார சுவாமி தேவஸ்தானம்
முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்தில்


















திருச்செந்தூரில் போர் புரிந்து சினம் எல்லாம் தீர்ந்த கந்தன் அலங்காரம்



















ஜெயந்தி நாதர்











அருணகிரிநாதர் பாடிய



திருமயிலை சிங்கார வேலவர்











திருமுருகனுடன் பவனி வரும் வீரபாகு தேவர்



சண்டிகேஸ்வரர்


கந்தர் சஷ்டி நாளில் திருமயிலையில் கொடியேற்றத்துடன் விழா சிறப்பாக நடைபெறுகின்றது, தினமும் மாலை சண்டிகேஸ்வரர், வீரபாகு தேவருடன் புறப்பாடு சூர சம்ஹாரம், ஒரு நாள் ஏக தின லட்சார்ச்சனை, திருக்கல்யாணம், பின் யானை வாகனப்புறப்பாடு (மயில் அல்ல , தேவ யாணைக்கு இந்திரன் சீதனமாக அளித்த ஐராவதம் என்பது ஐதீகம், கருவறையில் தேவியர் இருவரும் யாணை மீது அமர்ந்த கோலத்தில்தான் திருக்காட்சி அளிக்கின்றனர். சிங்கார வேலவர் ஆறு திருமுகங்கள் பன்னிரு கரங்களுடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் ) என கோலாகலமாக கந்தர் சஷ்டி உற்சவம் நடைபெறுகின்றது திருமயிலையில் சிங்கார வேலவருக்கு.





சென்னை சைதை செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணியசுவாமி







முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யவில்லை, அவனது அஞ்ஞானத்தை அகற்றி அவனுக்கு வாழ்வளித்தார். அவன் ஆணவம் அகன்றவுடன் மயிலாகவும் சேவலாகவும் மாறினான், மயில் முருகருக்கு வாகனம் ஆனது சேவல் அவரது கொடியானது எனவேதான் கந்தப்பெருமான் கருணைக்கடல் எனப்படுகின்றார்.










கருணை மழை பொழியும் கந்த வேள் தங்க மயில் வாகனத்தில் பவனி வரும் கண்கொள்ளாக் காட்சி.




சித்தி சுந்தரி கௌரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பர

சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாகத விலாச விமலி

குத்து திரிசூலி திரிகோணத்தி ஷட்கோண
குமரி கங்காளி ருத்ரி

குலிச வோங்காரி ரீங்காரி யாங்காரி யூங்
காரி ரீங்காரி யம்மா

முத்தி காந்தாமணி முக்குண துரந்தரி
மூவர்க்கும் முதல்வி ஞான


முதுமறைக்கலைவாணி அற்புத புராதனி
மூவுலகும் ஆன சோதி

சக்தி சங்கரி நீலி கமலை பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினாரைக் குத்தி எதிர்
ஆடிவரும் சத்ரு சங்கார வேலே.

வேலும் மயிலும் துணை.
கந்தன் கருணை தொடரும்.............

8 comments:

cheena (சீனா) said...

நண்ப கைலாஷி

அருமையான தரிசனம் - அழகான படங்கள் - கந்தனை - அவன் கருணையை - நேரில் பார்ப்பது போன்ற உணர்வு - கருணை கிட்டச் செய்தமைக்கு நன்றி

நல்வாத்துகள்

S.Muruganandam said...

வாருங்கள் சீனா ஐயா

என் அப்பன் முருகன், அழகன் அவன் எழிலை வரும் கந்த சஷ்டி நாட்களிலும் வந்து தரிசியுங்கள் சீனா ஐயா.

ஓம் சரவண பவ, ஓம் சரவண பவ

ஆயில்யன் said...

கந்தர் சஷ்டி கவசம் ஆடியோவோட ஆரம்ப்ப்போம் சஷ்டி விரதத்தினை என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பதிவு கண்டேன்! :)

பக்தியுடன்,மனத்திருப்தியுடன் ஆரம்பிக்கிறேன்!


தொடருங்கள்! தொடர்ந்து வருகிறேன்!

S.Muruganandam said...

அழகன் முருகன் அற்புத தரிசனம் காண கந்தர் சஷ்டி நாள் அனைத்திலும் வாருங்கள் ஆயில்யன் ஐயா. கந்தன் கருணை மழையில் நனையுங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான படப் பதிவு கைலாஷி ஐயா! அதுவும் வீரபாகுத் தேவர் படம் கிடைத்தற்கு அரிது! அருமை!

//சரஹணனை நம்பினவர் மேல்//

சரஹணனா? சரவணனா?

S.Muruganandam said...

சரவணபவன் என்பதற்கு நாணல் காட்டில் தோன்றியவர் என்பதுதானே பொருள். ஆனால் பல இடங்களில் சரஹணன் என்றும் அழைக்கப்படுகின்றார் கவிதைகளில். கந்தர் சஷ்டி கவசத்திலும் ஒரு இடத்தில் சரஹண பவனே சைலொளி பவனே என்று வருகின்றதல்லவா?

வீரபாகுத்தேவர் படம் அவன் அருளால் கிடைத்தது.

குமரன் (Kumaran) said...

என்னழகன் முருகனின் தரிசனத்தைக் கண்டேன். நன்றி கைலாஷி ஐயா.

S.Muruganandam said...

எல்லாம் முருகனருள் குமரன் ஐயா.
அனைத்து பதிவுகளையும் காணுங்கள்.

ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம: