சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம்
முருகப்பெருமான்
முருகப்பெருமான்
அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனை ஆள் புனிதா சரணம் சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம்
வடபழனி ஆண்டவர் குதிரை வாகனம்
திருமயிலை சிங்கார வேலவர் எழிற்கோலம்
சிங்கார வேலவர் கந்தருவன் வாகனத்தில்
செங்குந்தக் கோட்டம் சிவ சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனம்
சைதை திருக்காரணீஸ்வரம்
முருகர் போர்க் கோலம்
முருகர் போர்க் கோலம்
சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலையில் கண்ட கந்தர் சஷ்டி நினைவுகள். பிரசண்ட விநாயகர் திருக்கோவிலில் தினமும் காலையில் முருகருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை. மாலை மெரவணை. ஆறாம் நாள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தவர்கள் தண்டு சாறு பருகி விரதம் முடிப்பர் மாலை விசாலாக்ஷி அம்பாளிடம் சக்தி வேல் வாங்குதல், பின் சூர சம்ஹாரம் ஆரம்பம். காப்பு கட்டியவர்கள் வேல் ஏந்தி வருவார்கள் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும். முதலில் கோவிலின் முன்னர் கஜமுகாசுரன் சம்ஹாரம், பின் ஊர்வலம் தொடரும் பெரிய கடை வீதியில் சிங்கமுகாசுரன் சம்ஹாரம், பின்னும் ஊர்வலம் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் பானு கோபன் சம்ஹாரம் நிறைவாக சூரபத்மன் சம்ஹாரம், சேவலும் மயிலும் பொம்மையாக வைக்கப்படும் சூரன் தலை இருந்த இடத்தில் வேப்பிலை வைக்கப்படும். பின் வெற்றி வீரராக முருகன் கோவிலுக்கு திரும்புவார். அடுத்த நாள் காலை வெகு சிறப்பாக வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் மாலை மயில் வாகனத்தில் மெரவணை என்று கந்தர் சஷ்டியை கண்டு களித்ததை இன்றும் மறக்க முடியவில்லை முருகா.
சண்முகக் கடவுள் போற்றி! சரவணத்துதித்தோய் போற்றி!
கண்மணி முருகா போற்றி! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர்க் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி!
விண்மதி மதன வள்ளி வேலவா போற்றி! போற்றி !
கண்மணி முருகா போற்றி! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர்க் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி!
விண்மதி மதன வள்ளி வேலவா போற்றி! போற்றி !
வேலும் மயிலும் துணை.
கந்தன் கருணை தொடரும்.............
2 comments:
அன்பின் கைலாஷி
சென்னைக் கோவில்களின் மூலவரின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். சரணம் கூற வைத்தீர்கள். உடுமலை கந்த சஷ்டியின் நேரடி ஒலிபரப்பு அருமை அருமை. கந்தன் போற்றியுடன் நிறைவு செய்த விதம் பாராட்டுக்குரியது.
நன்றி நன்றி நன்றி
நல்வாழ்த்துகள்
//உடுமலை கந்த சஷ்டியின் நேரடி ஒலிபரப்பு அருமை அருமை//
மனதில் பதிந்த நினைவுகள் மறக்க முடியவில்லை அன்று கவலையில்லாமல் சுற்றித் திரிந்த நாட்களை இன்றும்.
ஓம் சரவணபவ, ஒம் சரவணபவ.
Post a Comment