Thursday, May 30, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -44

விருத்த பத்ரி தரிசனம்

விருத்த பத்ரிநாதர் ஆலயம் - அணிமட்

 பின்னர் அங்கிருந்து அணிமட் பிரிவை  வந்தடைந்தோம். இவ்விடம் ஹெலாங் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது.  முக்கிய சலையிலிருந்து ஒரு பாதை கீழிறங்கி சமவெளியில் உள்ள கிராமத்திற்கு செல்கின்றது. கோயிலை குறிக்கும் வகையில் அலங்கார வளைவு உள்ளது. அதன் வழியாக இறங்கி அணிமட் கிராமத்தை அடைந்தோம்

விருத்தபத்ரியும் (புடா பத்ரிசிறிய கோவில்தான் ஒரே பிரகாரம். வயதான கோலத்தில் பெருமாள் நாரதருக்கு சேவை சாதித்த அதே கோலத்தில் இன்றும்  சேவை சாதிக்கின்றார். காலையில் திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்த பிறகு இரவு வரை அதே கோலத்தில் பெருமாள் சேவை சாதிப்பார் என்று பட்டர் கூறினார். அதிகமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருவதில்லை, தென் நாட்டவர்கள் அவ்வப்போது வருகின்றனர் என்று அவர்  கூறினார். நாரதருக்கு அணிமா சக்தி அருளிய, ஆதிசங்கரர் பூஜித்த  பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி பிரசாதமும் அளித்தார். எங்களுக்கும் ஆரத்தி காட்ட வாய்ப்பளித்தார்.   பிரகாரத்தில் ஒரு சிறிய சன்னதியில்  சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

கோவிலிலிருந்து ஒரு பாதை கீழிறங்கி செல்கின்றது அது முக்கிய சாலையை சென்று சேருகின்றது அதில் செல்லுங்கள் இல்லாவிட்டால்  மறுபடியும் மேலேறி  வர வேண்டும்,    என்று பவிஷ் பத்ரியில் பட்டர் கூறியிருந்தார் என்பதால் வண்டியை கீழே அவ்விடத்திற்கு வர முதலிலேயே  முக்கிய சாலை வழியாக வரச்சொல்லியிருந்ததால்  நாங்கள் கீழிறங்கி சென்றோம். இப்பாதை முக்கிய சாலையை சேரும் இடத்திலும்  கோவிலைக் குறிக்கும்  அலங்கார வளைவு உள்ளது.   விருத்த பத்ரிநாதரையும் சேவித்த மகிழ்ச்சியில் கர்ண பிரயாகைக்கு புறப்பட்டோம்


 பிண்டார் நதியும் அலக்நந்தாவும் 
கூடும் கர்ண ப்ரயாகை

 ஒரு சிலர் இந்த விருத்த பத்ரி நாதரை பஞ்ச பத்ரியில் சேர்ப்பதில்லை, அவர்கள் ஊர்கம் அருகில் உள்ள த்யான் பத்ரியை பஞ்ச பத்ரியாக கருதுகின்றனர். மாலையாகி விட்டதால் இனி த்யான் பத்ரி சென்று தரிசித்து விட்டு திரும்பி வந்து  ஆதி பத்ரிக்கு அருகில் உள்ள கர்ண ப்ரயாகை சேர்வது கடினம் என்று ஓட்டுநர் கூறினார். அதுவும் இரவு கர்ண ப்ரயாகையில் தங்கி காலையில் சென்றுதான் ஆதி பத்ரியை தரிசனம் செய்ய முடியும் என்றார். ஆகவே கர்ண ப்ரயாகையை நோக்கி புறப்பட்டோம்.  8 மணிக்குள் நந்த ப்ரயாகையை   கடக்க வேண்டும் இல்லாவிட்டால்  பாதை அடைபட்டுவிடும் என்று வண்டியை  வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தார் வண்டி ஒட்டுநர்சமயத்திற்குள் நந்த ப்ரயாகையை கடந்து  சுமார்மணி அளவில் கர்ண பிரயாகையை அடைந்தோம். அங்கு சங்கமத்தின் கரையில் உள்ள கிருஷ்ணா பேலஸ் என்னும்  ஹோட்டலில் இரவு தங்கினோம்.



இவ்வாறு ஒரே நாளில் ஐந்து பத்ரிநாதர்களில் நால்வரை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது.

4 comments:

ப.கந்தசாமி said...

எழுத்துகள் மிகச்சிறியனவாக இருக்கின்றனவே.

S.Muruganandam said...

எழுத்துக்களை பெரிதாக்கியுள்ளேன்.படித்து மகிழுங்கள் XYZ ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஓட்டுனர்... பயணத்தை தொடர்கிறேன்...

S.Muruganandam said...

அருமையாக தொடர்ந்து வாருங்கள் திண்டுக்கல் தனபாலன் ஐயா.