Tuesday, August 15, 2017

நவ துவாரகை யாத்திரை -15

கீர்த்தி மந்திர்


இத்தொடரின்  மற்ற  பதிவுகள் :  

  1   2   3   4   5    6    7    8    9    10    11   12    13 

  14   16   17   18   19   20    21   22   23  24    25   26   27   28


புகழ் பெற்ற ஆலயம்

 
அன்பர்கள் அனைவருக்கும் ஜென்மாஷ்டமி  வணக்கம் 

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 

இப்பதிவில் நாம் காண இருப்பது மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த இல்லம்.  காந்தி அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது மாமேதை ஐன்ஸ்டின் அவர்கள் இவ்வாறு கூறினார். 

“On the occasion of Mahatma Gandhi's 70th birthday. "Generations to come, it may well be, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth.”― Albert Einstein

வரும் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் மனித உடலுடன் இப்பூவுலகில் நடமாடினார் என்று நம்புவது கடினம் சென்று போற்றினார். 


குஜராத் காந்தியடிகள் பிறந்த மண். போர்பந்தர் மது தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த புண்ணிய ஊர் அல்லவா? எனவே அவரது பிறந்த இடமான கீர்த்தி மந்திர் சென்றோம். கீர்த்தி என்றால் புகழ், மந்திர் என்றால் ஆலயம். ஆகவே அண்ணல் பிறந்த இல்லம் புகழ் பெற்ற ஆலயம் தானே.   மந்திரமான இராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு, சத்திய வழியில் ந்து, அகிம்சையையே ஆயுதமாகக் கொண்டு அன்னிய தளையிலிருந்து மக்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணலின் இல்லம் சென்றோம். 1777ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் முப்பாட்டன்  ஹரிவன்ஜி ராஹ்தாஸ்ஜி  காந்தி அவர்கள்  ந்த இல்லத்தை வாங்கியுள்ளார். 1869ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவ்வில்லத்தில் பிறந்தார். அவர் பிறந்த புண்ணிய இடத்தை சுவஸ்திக் சின்னம்  இட்டு  சுட்டிக்காட்டியுள்ளனர். அவரின் வாழ்க்கை வரலாறு பல் வேறு சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களின் மூலம் முழுவதுமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சந்தித்த முக்கிய தலைவர்கள், அவரை கௌரவப்படுத்தி மற்ற அரசுகள் வெளியிட்ட தபால் தலைகள் ஆகியவற்றை கண்டு களித்தோம்.




காந்தியடிகள் பிறந்த இடம் 






அண்ணலைச் சிறபிக்க வெளியிடப்பட்ட தபால் தலைகள் 

போர்பந்தர் அக்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அப்படியேதான் உள்ளது. கோட்டை போன்ற மாளிகைகள்.  பிற்கால சந்ததியினர்  வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டதால் பராமரிப்பில்லாமல் அப்படியே பூட்டிக்கிடப்பதை பார்த்தோம். குஜராத் மாநிலம் நிலக்கடலைக்கு பெயர் போனது. கடலை பெரிதாக இருக்கும். எனவே ஒரு காலத்தில் மது  தமிழ்நாட்டிலிருந்து கடலை எண்ணெய்  இம்மாநிலத்தில் இருந்தது.  லாரிகள் தேங்காய்களை இங்கு கொண்டு வந்து இங்கிருந்து கடலை எண்ணெய் எடுத்து செல்கின்றன.


அண்ணல் காந்தி - அன்னை கஸ்தூரிபாய் 


 மேலும் அடியேன் தங்கிய ஊரின் அருகே உள்ள  கரமான பரூச்(Bharuch) உப்பு வேர்க்கடலைக்கு பெயர் பெற்றது. அப்போது ஊருக்கு வரும் போது அக்கடலையை வாங்கி கொண்டு வருவேன். அது போன்ற கடலை இங்கும் கிடைத்தது ஆளுக்குக் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம்.  போர்பந்தரும் கடற்கரை கரமானதால், பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்காக இந்நகரிலும் கப்பற்படை, மற்றும் கடலோரக் காவல்படை தளங்கள் உள. 


போர்பந்தரில் உள்ள சில கோட்டை போன்ற கட்டிடங்கள் 



போர்பந்தரிலிருந்து சோமநாத் சுமார் 127 கி.மீ தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சென்று விடலாம் எனவே  இன்றிரவே சோமநாத் அடைந்து விடலாம், ஆலயத்தின் விடுதிகள் உள்ளன, அதிக கட்டணம் வசூலிப்பதில்லை, எல்லா வசதிகளும் உள்ளன எனவே அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளலாம்  என்று வண்டி ஓட்டுனர் கூறினார். சோமநாதரின் தரிசனம் கிடைக்குமா? என்று அவரிடம் கேட்டோம் முயற்சி செய்கிறேன், அதிகமான போக்குவரத்து இல்லை என்றால் சென்று விடலாம் என்று கூறினார். அன்றே சோமநாதர் தரிசனம் தந்தாரா? என்று அறிய ஆவலாக உள்ளதா. தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.  

                                                                                 நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

Thursday, August 3, 2017

நவ துவாரகை யாத்திரை -14

சுதாமா துவாரகை


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்    

    1   2   3   4   5    6    7    8    9    10    11  


   12    13    15   16   17   18   19   20    21   22   23  24    25   26   27   28




அலங்கார வாயில்

விசாவாடா மூல துவாரகையை தரிசித்து பிறகு வண்டி ஓட்டுர் அடுத்து போர்பந்தரில் சுதாமா துவாரகையை தரிசிக்கலாம் என்று கூறினார். யார் அந்த சுதாமா என்று யோசிக்கின்றீர்களா?  தூய ட்பிற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன் -சுதாமா இதோ  இவர்களின் அற்புதக்  கதை. பாகவதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ள இக்கதையை காணலாம்.  நாம் இவரை  குசேலர் என்று அழைக்கின்றோம், வடநாட்டில் இவரை  சுதாமா என்றழைக்கின்றனர்.  குசேலர் என்பது காரணப்பெயர் வறுமை காரணமாக் கந்தல் துணிமணிகளை அணிந்திருந்ததினால் இவர் குசேலர் என்றழைக்கப்பட்டார். ஸ்ரீகிருஷ்ணர் சந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில்  கல்வி பயின்றபோது உடன் கல்வி கற்றவர். கண்ணனின் சிறந்ண்பர்.  குருகுலம் முடிந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

கண்ணன் துவாரகைக்கு அரசனார். குசேலரோ திருமணம் முடித்து 27  பிள்ளைகளைப் பெற்று வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். இவரது மனைவி சுசீலை இவரை ஸ்ரீகிருஷ்ணர் தங்களின் பால்ய ண்பர் என்று சொல்கின்றீர்களே, அவரிடம் சென்று ஏதாவது பொருள் வாங்கி வாருங்கள் என்று  அறிவுறுத்திக் கொண்டிருந்தார். மனைவியின் அறிவுரை மதித்து ஒரு சமயம் குசேலர் ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க சுதாமாபுரியில் இருந்து  துவாரகைக்குப் புறப்பட்டார். பரிசுப் பொருளாக கொண்டு செல்ல எதுவும் இல்லாதால் சிறிது அவலை ஒரு கந்தல் துணியில் கட்டிக்கொண்டு புறப்பட்டார். 

அவர் துவாரகையை அடைந்த போது முதலில் கோட்டைக் காவலாளிகள் இவரது உடையைப் பார்த்து இவரை  உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தன் ண்பன் வந்து கோட்டை வாசலில் நிற்பதை உணர்ந்த கண்ணன், ஒரு காவாலாளியை அனுப்பி அவரை சகல மரியாதைகளுடன் அழைத்து வருமாறு கூறினார். குசேலரை ஒரு உயரிய ஆசனத்தில் அமர வைத்து ருக்மிணிப் பிராட்டியார் நீர் வார்க்க பாத பூஜை செய்து வரவேற்றார். பின்னர் அவருக்கு விருந்தளித்தார்,  இருவரும் சிறிது நேரம் அளவளாவினர். கண்ணனின் செல்வ நிலையைப் பார்த்து  குசேலருக்கு தான் கொண்டு வந்த அவலை கொடுக்க மனம் வரவில்லை. மாயக்கண்ணன் அதை அறியமாட்டானா? என்ன. அவனாகவே எனக்காக எதுவும் கொண்டு வரவில்லையா என்று வினவி அவர் தோளில் இருந்த அந்த கந்தல் மூட்டையை இழுத்து பிரித்து அவலை எடுத்து தன் வாயில் இட்டான்.

சுதாமர் ஆலயம்

அடுத்த நொடி அங்கு சுதாமாபுரியில் பெரிய பிராட்டியாரின் அருளினால்  குசேலரின் குடிசை மாட மாளிகையாயிற்று, அம்மாளிகை முழுதும் செல்வத்தினால் நிறைந்தது. பரந்தாமனின் ஆசியினால் குசேலர் ஆனார் மாளிகைவாசி, இனி ஒட்டாது அவர் காலில் தூசி. கிருஷ்ணனின் அன்பில் திளைத்த குசேலர்  எதுவும் கேட்காமல் திரும்பி வந்தார். தன் வீட்டை அடைந்த போது அது மாளிகையாக மாறி இருப்பதையும், மனைவி மற்றும் பிள்ளைகள் பட்டுப் பீதாம்பரம், விலை உயர்ந்த ஆபரணங்களில் மிளிர்வதையும், மாளிகை முழுவதும் செல்வம்  நிறைந்திருப்பதையும் கண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு  மனதார ன்றி கூறினார். ட்பின் மேன்மையை கூறும் வரலாறு இது. “உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை  எல்லாம் கண்ணன்“ என்று சமர்ப்பணம் செய்பவர்களுக்கு அவன் அருளை வாரி வழங்குவதைக் கூறும் வரலாறு இது. அந்ண்பனுடன் கண்ணன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தற்போதைய போர்பந்தரில் அமைந்துள்ள சுதாமா துவாரகை.

துவாரகையிலிருந்து சோமநாத் செல்லும் வழியில் துவாரகையிலிருந்து சுமார் 105  கி.மீ தூரத்தில் போர்பந்தர் அமைந்துள்ளது. ஊரின் மையமாக சுதாமா துவாரகை சற்று வித்தியாசமாக ஒரு பெரிய சோலையின் டுவே ஆலயம் அமைந்துள்ளது.  ஆலயத்தின் முன்னர் சுதாமாபுரி என்று ஒரு அலங்கார வளைவு எல்லாரையும் வரவேற்கின்றது. அடியோங்கள் அங்கு சென்ற போது மாலை   நேரம் என்பதால் பறவைகள் எல்லாம் இவ்வாலயத்தில் உள்ள மரங்களில் உள்ள தம் கூடுகளுக்கு  திரும்பிக்கொண்டிருந்தன. அவைகள் எழுப்பிய ஓசை அருமையான பிண்ணனியாக விளங்க காயா மலர் வண்ணனை, குன்றமேந்தி குளிர் மழை காத்தவனை, காரொத்த மேனி என்பெருமானின் தரிசனம் பெற்றோம்.

ஆலயத்தில் குழுவினர் 

கர்ப்பகிரகம் நாகாரா விமானத்துடன் உள்ளது. ஒரே   ஒரு மண்டபம்,  அழகிய தூண்களுடன்  பிரம்மாண்டமாக இம்மண்டபம் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையில் சுதாமா மற்றும் அவரது மனைவி சுசீலையுடன் துவாரகாதீசன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு ண்பனுக்கு ஏற்றம் தருகின்றார் “கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான், குன்றதனால் மழை காத்து  குடமாடு கூத்தன் ஸ்ரீகிருஷ்ணன்“. 


ஸ்ரீகிருஷ்ணர் குசேலருக்கு

 பாத பூஜை செய்யும் சித்திரம் 



பிரகாரத்தை வலம் வரும் போது துவாரகையில் குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணர் பாத பூஜை செய்யும் ஒரு சித்திரத்தையும், பத்ரி நாராயணர் யோக கோலத்தில் அமர்ந்திருக்கும் சித்திரத்தையையும் தரிசனம் செய்தோம். ஆலய வளாகத்தில் ஞான வாவி என்றழைக்கப்படும்  ஒரு கிணறும் அமைந்துள்ளது.  அன்றைய தினம் இவ்வாறு  ஐந்து துவாரகைகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.








Wednesday, August 2, 2017

ஸ்ரீமுத்து மாரியம்மன் இராஜகோபுர திருப்பணி


அம்மன்  நவராத்திரி அலங்கார   நாட்காட்டி



அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய ஸ்வரூபணியாய் இச்சா சக்தி, கிரியா சக்தி,  ஞான சக்தி, முதலாகி சர்வசக்தி கொண்டு அனைத்து உயிர்களையும் தாயன்பு கொண்டு காத்திடும். அன்னையாய் அருள்மழை பொழிந்து வளம் பல சேர்த்திடும் தேவியாய் தருமமிகு சென்னை, தியாகராய நகர், தென்மேற்கு போக் சாலை, வெங்கடநாராயணா  சாலை சந்திப்பில்  அழகாய்  கோவிலமைந்து  ஸ்ரீ முத்து மாரியம்மன்  என்ற திருப்பெயருடன் எழுந்தருளி தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நற் கருணை மழை பொழியும் அன்னைக்கு புதிதாக இராஜ கோபுரம் அமைக்கும் திருப்பணி துவங்கப்பெற்று நடைபெற்று வருகின்றது. அன்பர்கள்  இத்திருப்பணியில் தங்களால் முடிந்த அளவு நன்கொடை கொடுத்து கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். 

ஆடி வெள்ளி
சிறப்பு வளையல் அலங்காரத்தில் 
முத்து மாரியம்மன் 



இவ்வாலயத்தில் ஆடி, தை வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, வருடப்பிறப்பு, ஆடி நான்காம் வாரம் ஆகிய பல பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இப்பதிவில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சென்ற வருட ஆடிப் பண்டிகையன்று எடுக்கப்பட்ட  படங்கள். அலகு தரிசனமும், தீ மிதி திருவிழாவும்  இவ்வாலயத்தின் சிறப்பு  நிகழ்வுகள் ஆகும். 

திருவிழா சிறப்பு அலங்காரம் 




காமாக்ஷி, முத்துமாரி, மீனாக்ஷி


ஆடி மாதம் நான்காம் வாரம் மூன்று நாட்கள் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. வியாழக்கிழமையன்று இரவு அம்மன் பதி அமைக்கப்ப்டுகின்றது.   வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு பால் குட அபிஷேகமும், இரவு  சிறப்பு அலங்காரம் . சனிக்கிழமை காலையிலும் மாலையிலும் கரக ஊர்வலம். ஞாயிற்றுக்கிழமை காலை அலகு தரிசனம். மதியன் அம்மனுக்கு கூழ் வார்த்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று மாலை தீ மிதித்தலும் இரவு சகல மேளதாளங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் முத்து மாரியம்மன் புஷ்பக விமானத்தில் பவனி வருதலும் சிறப்பாக நடைபெறுகின்றது. 

இவ்வருடம்  10-08-2017 முதல் 13-08-2017 வரை சிறப்பாக நடைபெறவுள்ளது அதில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு வேண்டுகிறேன். 

உற்சவர் அம்மன் 

பதி அம்மன் 




அம்மன் -  அலகு தரிசனம் 

அலகு தரிசனம் 




உற்சவர் அம்மன் திருவீதிப் புறப்பாடு


இராஜ கோபுர பணி நடந்து கொண்டிருக்கின்றது. இப்பதிவை காணும் அன்பர்கள் இத்திருப்பணியில் கலந்து கொண்டு அம்மன் அருள்பெறுங்கள். 

Sunday, July 30, 2017

நவ துவாரகை யாத்திரை -13

விசாவாடா மூலதுவாரகை


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

    1   2   3    4    5     6    7    8    9    10   11    12  


 14   15   16   17   18   19   20    21   22  23  24    25   26   27   28


துவாரகையிலிருந்து கிளம்பி அரபிக்கடலோரம் தேசிய நெடுஞ்சாலையில் சோமநாத் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தோம். அகலமான பாதை, போக்குவரத்து அதிகம் இல்லை என்பதாலும் பயணம் வேகமாகவும் சுகமாகவும் இருந்தது. ஒரு பக்கம் நீல நிற கடல் கார் கடல் வண்ணனை செங்கட்கருமுகிலை தேவகி சிங்கத்தை நினைவு படுத்தியது,  மறு பக்கம் பசுமையான வயல்கள் அது பார்க்கும் மரத்தில் எல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்று பாரதியார் பாடியபடி எம்பெருமானின் பச்சை மாமலை போல் மேனியை நினைவு படுத்தியது. இச்சமயத்தில் வெளி நாட்டிலிருந்து பறவைகள் அதிகம்  வரும் காலம் என்பதால் வயல்களில் சோலைக் கொல்லை பொம்மைகளுக்கு பதிலாக  இப்பகுதியில்,  பறவைகளை துரத்த ஜிகினா காகிதங்களை பறக்க விட்டிருந்தனர், வெயிலில் அவை வெள்ளி போலவும், பொன் போலவும் மின்னிக் கொண்டு தட தடவென்று சத்தத்துடன் பறந்து கொண்டிருந்தன. அவை இல்லாத  பல வயல்களில் கூட்டம் கூட்டமாக பறவைகள் அமர்ந்திருந்தன. இவ்வாறாக இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே திட்டமிட்டபடி யாத்திரை சென்று கொண்டிருப்பதையும், அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக  தரிசனம் கிட்டியதற்காக ஸ்ரீகிருஷ்ணருக்கு ன்றி தெரிவித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் பயணித்துக் கொண்டிருந்தோம்.  சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்திருப்போம். ஓட்டுர் திடீரென்று வண்டியை ஓர் இடத்தில் நிறுத்தி மூலதுவாரகை வந்து விட்டது தரிசனம் செய்து கொள்ளுங்கள் என்றார்.  அடியோங்கள் தயாரித்த அட்டவணையில் இந்த மூலதுவாரகை இடம்பெறவில்லை.


 மூல துவாரகை ஆலயம் 


விசாவாடா என்ற இடத்தில் உள்ள  ஒரு புராதமான ஆலய வளாகத்தை இவர்கள்  ஒரு மூலதுவாரகை என்றழைக்கின்றனர். காலயவனன் ஸ்ரீகிருஷ்ணரை துரத்தி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் அவனை அழைத்து முசுகுந்தரின் குகை அருகில் உள்ளது. அதற்குப்பின் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கினார் என்பது ஒரு ஐதீகம்.  இன்னும் இரண்டு தலங்கள்  மூல துவாரகைகள் என்று கொண்டாட்டப்படுகின்றன. கொடினார் (Kodinar) என்ற இடத்தில் ஒரு கோவிலும், கஞ்சேடார் என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலும் மூலதுவாரகை என்று கருதுகின்றனர். இவ்விரண்டு இடங்களிலும் கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சியின் போது சில இடிபாடுகள் கிடைத்துள்ளன. 


ரண் சோட் ராய் ஜீ 



மதுராவிலிருந்து துவாரகை செல்லும் வழியில்  முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் தம் பாதத்தை இவ்விடம் பதித்து தங்கினார் என்பது இரண்டாவது  ஐதீகம். விஷ்ணு தன் பாதத்தை இங்கு பதித்ததால் ரண் சோட் ராய் ஜீ சன்னதியில் விஷ்ணு பாதம் உள்ளது. விஷ்ணு பாதம் என்பதே  மருவி விசாவாடா ஆகிவிட்டதாம்.     தற்போதைய முக்கிய துவாரகை ஆலயத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் மூல துவாரகை ஆயிற்று. ஆலய முகப்பில் மூல துவாரகை ஆலயம் அலங்கார வளைவு ம்மை வரவேற்கின்றது. நுழைவு வாயிலில் வாசக்காலில் அருமையான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள். வாயிலைக் கடந்து உள்ளே சென்று   உள்ளே சென்றால் பஞ்சாதாயன முறையில் நீலகண்டேஸ்வரர், ரண்சோட் ராய் ஜீ,  ஆகியோருக்கு முக்கிய சன்னதிகள் உள்ளன. 

கிளிகள் 

ங்கு டேரு மற்றும் ரண்டால் டேரு அம்பாள்  என்று பல சன்னதிகள் இவ்வளாகத்தில்  அமைந்திருக்கின்றன. அனைத்து சன்னதிகளும் காரா பாணி விமானம் மற்றும் பிரமிட் வடிவ மாடங்களுடன் எளிமையாக அமைந்துள்ளன. சன்னதிகளை வலம் வந்து வணங்கினோம்.  ஆலய வளாகத்தில் ஒரு பிரம்மாண்ட ஆலமரம் உள்ளது அம்மரத்தை எண்ணற்ற பச்சை கிளிகளும், புறாக்களும் இருப்பிடமாக கொண்டுள்ளன. ஆலோலம் பாடும் கிளிகளைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம்தான்.




இவ்வாலயத்தின் சிறப்பு படிக்கிணறு (Step Well) ஆகும். இக்கிணற்றை ஞான வாவி என்று இவர்கள் அழைக்கின்றனர்.  குஜராத்தில் இது போன்ற படிக்கிணறுகளை பல இடங்களில் அமைத்திருக்கின்றனர். இக்கிணற்றை ஞான வாவி என்று இவர்கள் அழைக்கின்றனர். ’ட’ வடிவத்தில் இக்கிணறு அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டில் இக்கிணறு அமைக்கப்பட்டதால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப் பட்டு தொல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.  கீழிறங்கிச் செல்ல படிகளை மூன்று நிலைகளாக அமைத்துள்ளனர். ஒவ்வோரு நிலையிலும் கோஷ்டத்தில்  அருமையான சிற்பம் காணப்படுகின்றது. அருமையான கலையத்துடன் பிரம்மா, சூரியன், விஷ்ணு சிலைகளை தரிசித்தோம்.  அருகில் மற்றொரு ஆலய வளாகம் உள்ளது. அதில் சிவன், கார்த்திகேயர், தத்தாத்ரேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. ஒரு அருமையான புராதான ஆலயத்தில் ங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடு மதிசய வினையுறு மலகையை வென்றும் கொன்றும் துண்டந் துண்டஞ் செயு மரி கேசவன், கருமுகில் வண்ணன், கருக்கார் கடல் வண்ணன், புயற்கரு நிறத்தானை,   தரிசித்த மகிழ்ச்சியுடன் அடுத்த துவாரகையை நோக்கி புறப்பட்டோம்.






விசா வாடா கிணறு 


அடுத்து அடியோங்கள் தரிசித்த தலம் சிறந்ட்பிற்கு உதாரணமாக கூறப்படும் ஒருவரின் பெயரால் அழைக்கப்படும் துவாரகை ஆகும். யார் அவர்?  இத்துவாரகையின் வரலாறு என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சற்றுப் பொறுத்திருங்கள். 


 குஜராத்தின் தனித்தன்மை வாய்ந்த இஞ்சி, ஏலக்காய் மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து குழம்பு போல சுண்டக் காய்ச்சிய தேநீர் அருந்திவிட்டு செல்லலாம். இம்மசாலா தேநீர் குஜராத்தில் மிகவும் சுவையாக இருக்கும்,  வாய்ப்புக் கிடைத்தால்  அவசியம் அருந்திப் பாருங்கள் அன்பர்களே.


                                                                             நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

Friday, July 21, 2017

நவ துவாரகை யாத்திரை -12

ருக்மிணி துவாரகை

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்

     1   2   3    4    5     6    7    8    9    10    11   13 

  14   15   16     17   18   19   20    21   22  23  24    25   26   27   28





துவாரகாதீசர் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது. அடியோங்கள் இவ்வாலயம் சென்ற சமயம் கருவறை திருக்கதவங்கள் மூடப்பட்டிருந்தன, ஏமாற்றத்துடன் எப்போது திறப்பீர்கள் என்று கேட்ட போது,  சிறிது நேரம் பொறுங்கள் என்றார்கள். அப்போது தான் கவனித்தோம் சுமார் பத்து பேர் முதலில் இருந்து காத்துக்கொண்டிருந்தனர். சபா மண்டபம் பக்தர்களால் நிறையும் வரை காத்திருந்த பின் அனவைருக்கும் ருக்மணி கண்ணனை மணந்த கதையைப் பற்றி கூறினார்கள். ருக்மணியின் அண்ணன் ருக்மி, ருக்மணியை சிசுபாலனுக்கு மணம் செய்ய விரும்பினான். ஆனால் ருக்மிணி,  ஸ்ரீகிருஷ்ணரை மணாளனாக வரித்து விட்டாள். எனவே புவன சுந்தரா! என்று தொடங்கி கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். கண்ணனின் ஆலோசனைப்படி காத்யாயினி ஆலயத்திற்கு பூசை செய்ய வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் தேரில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார். எதிர்த்து வந்த சிசுபாலனையும், ருக்மியையும் போரில் தோற்கடித்து துவாரகை வந்து சித்திரை மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசியன்று திருமணம் செய்து கொண்டார்.  தாயார் எழுதிய கடிதத்தை தினமும் படித்து வந்தால் எல்லா ன்மைகளும் கிட்டும், வீட்டில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும், அச்சிடப்பட்ட இக்கடிதம் இவ்வாலயத்தில் உள்ளது  ரூ 5/-க்கு விரும்பியவர்கள் வாங்கிச்சென்று தினமும் தங்கள் இல்லத்தில் பாராயணம் செய்யுங்கள் என்றனர்.



பின்னர் இவ்விடம் ருக்மிணி தாயார் வந்து தவம் செய்ய,  துர்வாசர் சாபம் கொடுத்த கதையைக் கூறினார்கள் இதோ அக்கதை. கிருஷ்ணர் ருக்மணியை திருமணம் செய்த பின்,  தவத்தில் சிறந்த துர்வாச முனிவரை அழைத்து விருந்து தர விரும்பினார். எனவே அவரை அணுகிப் பணிவுடன் இருவரும் அழைத்தனர். கிருஷ்ணரே அழைக்கும் போது அதை மறுக்க முடியுமா? ஆனாலும் ஒரு நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார் துர்வாசர். அந்நிபந்தனை அவர்  செல்லும் தேரை கிருஷ்ணரும்,  ருக்மிணியும் இழுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அது.

இருவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வழியில் கடும் வெயில். ருக்மிணிக்கு தாகம் எடுத்து நா வறள ஆரம்பித்தது. விருந்தோம்பலின் முக்கியமான விதிமுறை, விருந்தினர் திருப்தியாக உபசரிக்கப்பட்ட பிறகே விருந்தளிப்பவர் உண்ண வேண்டும். அதனால் துர்வாசரிடம் தன் தாகத்தைப் பற்றி ருக்மிணி சொல்லவில்லை. ஆனால், ருக்மிணியின் துயர் பொறுக்காத கிருஷ்ணர், துர்வாசர் அறியாதவாறு நிலத்தை  கால் நகத்தால் கீறி கங்கையை வரவழைத்து ருக்மிணியை அருந்தச் செய்தார்.



விதிவசம், அச்சமயம் பார்த்து இவர்கள் பக்கம் திரும்பினார் துர்வாசர். ருக்மிணி நீர் அருந்தியதைக் கண்டு அவருக்குக் கோபம் தலைக்கேறியது. அதிதியின், அதாவது தன்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீர் அருந்தலாம் என்பதுதான் துர்வாசரின் கோபத்துக்குக் காரணம். கிருஷ்ணர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவரது முயற்சி தோல்வி அடைந்தது.



அதிதிக்கு உணவளிக்காமல் நீர் அருந்திய நீ, கிருஷ்ணனைப் பிரிந்திருக்கக் கடவாய்”. மேலும் இந்த பூமி தண்ணீர் இல்லாமல் பயிர் பச்சை விளையாமல் போகட்டும் என்று துர்வாசர் சாபமிட்டார்  பிறகு, தண்டனை பன்னிரண்டு வருட காலம்  என்று குறைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ருக்மிணி துவாரகைக்கு வெளியே தனியே வசித்து வந்தார். கிருஷ்ணர் தான் உறையும் ஒரு மூர்த்தியை அளிக்க அதை  தினமும் பூசை செய்து வந்தாள்.  அந்தக் கெடு முடிந்த பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார்.ருக்மிணி தவம் செய்த இவ்விடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சபா மண்டபத்தில் இவ்வரலாறு  எழிலான ஓவியங்களாக மிளிர்கின்றன.




பின்னர் துவாரகை வந்த  துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார். இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். மேலும் துர்வாசர் சாபத்தினால் தண்ணீர் உப்பு நீராகி விட்டதால் பக்தர்களுக்காகவும், பூசைக்காகவும் ல்ல தண்ணீர் வெளியிலிருந்து வாங்குவதால் அதற்காக விரும்பியபடி ன்கொடை அளியுங்கள் என்றார்கள். பின் எல்லாரையும் அர்ச்சனைக்காக பெயர் கேட்டார்கள் தம்பதிகளாக இருந்தால் இராதா கிருஷ்ணன், லக்ஷ்மி நாராயணன் என்பது போல மனைவி பெயரை முதலிலும் கணவன் பெயரை பின்னரும் சொல்லுங்கள் என்றது புதுமையாக இருந்தது.
பின்னர் சன்னதியின் கதவை திறந்து ஆரத்தி காண்பித்தனர். வைர கிரீடம், பிரசன்ன வதனம், அழகிய ஆபரணங்களுடன் பச்சைப் பட்டில், நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதித்தாள் பிராட்டி. செல்வத்திருமகளை வணங்கி வெளியே வந்து பிரகாரத்தை வலம் வந்தோம்.   



கட்டிடக் கலையின் சிறப்பை இக்கோயிலில் கண்டோம். நாகாரா  கட்டிட அமைப்பில் ஒற்றை நெடிதுயர்ந்த விமானத்துடன் கூடிய கருவறை, அரைக் கோள குவி மாடத்துடன் கூடிய சபா மண்டபம், சிறிய குவி மாடத்துடன் கூடிய நிருத்திய மண்டபத்துடன் கோவில் அமைந்துள்ளது.    கோவிலின் வெளிப்புறச் சுவர்களில்  அற்புதமாகச் சிற்பங்கள்  செதுக்கப்பட்டுள்ளன. சபா மண்டபத்தின் சுவர்களின் அருமையான வேலைப்பாடுகளைக் கொண்ட ஜன்னல்கள்.   இந்தக் கோயில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சிற்பங்கள் மனித உருவங்களும் தெய்வ உருவங்களும் கொண்டதாக உள்ளன. அடித்தளத்தில் கஜதரங்கள், அதாவது யானைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக பார்க்க வேண்டிய ஆலயம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவ்வாறாக அன்றைய  தினம் அதுவரை நீதமுந் திருடி உரலோடயொன்று அரி கேசவன் மாயவனின்  நான்கு துவாரகைகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. பின்னர் சோம்நாத்திற்காக கிளம்பினோம் வழியில் சில ஆலயங்களை தரிசித்தோம் அவையெவை என்பதை அறிந்து கொள்ள  ஆவலாக உள்ளதா?  தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 
                                                                                 நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .