Wednesday, February 19, 2020

திருப்பாத தரிசனம் - 9


சப்த விடங்க நடனங்களின் தாத்பர்யம்




இறைமையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை. இறைமை என்பது இயற்கையின் தாய். இயற்கை என்பது இறைவனின் தன்மைகளுள் ஒன்று.  இவ்வேழு திருத்தலங்களிலும், இறைவன், நிகழ்த்தும் ஏழு விதமான நடனங்களும் இயற்கையோடு இணைந்து தொடர்பு கொண்டிருப்பது இவற்றின்  தனிச்சிறப்பு,  ஒவ்வொரு  நடனமும் மக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றது என்று பெரியோர்கள் கூறுவர்.


சப்தவிடங்கத்தலங்களில் இரண்டு கடற்கரையோரம் அமைந்துள்ளன அவை திருநாகைக்காரோணம் மற்றும் திருமறைக்காடு ஆகும், ஒன்று ஆரண்யத்தில் அமைந்த தலம், தர்ப்பாரண்யமான திருநள்ளாற்றுத்தலம் அது மற்ற நான்கு தலங்களும் மருத நிலத்தில் அமைந்துள்ளன.


நாம் தரிசிக்க இருக்கின்ற சப்தவிடங்க தலங்களில் அருள் பாலிக்கும் விடங்கர்கள் ஆஆடுகின்ற நடனங்கள் எவை  அவை எதைக் குறிக்கின்றன என்று காண்போம்


திருவாரூர்      வீதி விடங்கர்     அஜபா டனம்         மௌன டனம்

திருநாகை       சுந்தர விடங்கர்    தரங்க டனம்         கடல் அலையோசை டனம்

திருள்ளாறு     க விடங்கர்      உன்மத்த டனம்       பித்த(ஆவேச) டனம்

திருமறைக்காடு  புவனி விடங்கர்    ஹம்சபாத டனம்     அன்னடை டனம்

திருக்காரவாசல்  ஆதி விடங்கர்     குக்குட டனம்        கோழி டனம்

திருவாய்மூர்     நீல விடங்கர்      கமல டனம்          தாமரை டனம்

திருக்கோளிலி    அவனி விடங்கர்   பிரம்ர டனம்         வண்டு டனம்



சப்த விடங்கத்தின் முதல் தலம் இம்மண்ணில் பிறந்தாலே முக்தி தரும் திருவாரூர். இத்தலத்தில் ஈசன் வீதி விடங்கராக   அஜபா நடனம் ஆடுகின்றார். இந்நடனத்தின் சிறப்பு, மனித உடலில் உள்ள அனைத்து சக்கரங்களிலும் மூச்சுக்காற்று சென்று, இயங்கி அசைவதை உணர்த்துகின்றது. அடியார்களின் உள்ளத்தில் தியான காலத்தில் ஆடும் நடனம்.


இரண்டாவது தலமான திருக்காறாயில், ஆதி விடங்கர் ஆடிய குக்குட நடனம். குக்குடம் என்றால் கோழி. தான் படைத்த உயிர்களை, இறைவன் தனது அருட்கரங்களால் காக்க ஆடிய நடனம் குக்குட நடனம்.

மூன்றாவதாக  திருநாகைக்காரோணம் கடற்பகுதி எனவே இத்தலத்தில் சுந்தரவிடங்கராக பாரவார  தரங் நடனத்தில் கடல் அலைகள்  ஆடுவது போல  ஆடுகின்றார். 


 நான்காவதாக திருநள்ளாறு தலத்தில் நக விடங்கராக உன்மத்த நடனம்  டுகின்றார். இறைவனை அடைந்தவருக்கு குறைவில்லா ஆனந்தம் என்றும் உண்டு என்பதை  ந்நடனம்  உணர்த்துகின்றது.




ந்தாவது தலமான திருக்கோளிலியில் பிரமர நடனத்தை அவனி விடங்கர் ஆடும் அழகே அலாதி. கோள் என்றால் கிரகம். கோளிலி என்றால் கிரகம் இல்லாதிருப்பது.  ஒன்பது கோள்களும் செயலற்று, திருக்கோளிலியில் ஆடிய சிறப்பு. ஆன்மாக்கள், ஈசனை அடைய, கடினமாக உழைத்து, பேறு அடைவதன் அமைதியை காட்டும் நடனம்.


ஆறாவது திருமறைக்காடு எனப்படும், வேதாரண்யம். இதில் புவனி விடங்கராக ஈசன்  ஆடிய ஹம்ஸபாத நடனத்தின்  சிறப்பு. பாலில் கலந்த நீரை பிரித்தெடுத்து அருந்தும் அன்னம். அதுபோல் உயிர்கள், நன்மை, தீமை புரிந்து, அறிந்து, உணர்ந்து வாழ வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.


ஏழாவதாக, திருவாய்மூர், கமல நடனம். நீலவிடங்கராக ஈசன் ஆடியதை, மருத நிலத்தில் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும். அத்தாமரை மலரைப் போல் உலகப் பற்றுக்களில் மூழ்கி விடாமல் நாம் மேலெழுந்து   இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்று சொல்லும் நடனம் இத்தலத்தின் கமல டனம். இதுவரை சப்தவிடங்கதலங்களில் ஐயன் ஆடும் டனத்தின் தாத்பர்யம் என்னவென்றும் அவை   இயற்கையோடு இணைந்துள்ளன என்று கண்டோம் வாருங்கள் இனி ஒவ்வொரு தலமாக சென்று அமர்ந்தாடும் அழகரைத் தரிசிக்கலாம்.

                                                                     தரிசனம் தொடரும் . . . . . .

4 comments:

கோமதி அரசு said...

சப்தவிடங்க தலங்களை தரிசனம் செய்து பல வருடம் ஆச்சு.
மூண்டும் உங்கள் பதிவில் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது.
அவரின் நடனத்தின் தாத்பர்யம் தெரிந்து கொள்ள தரிசனம் செய்ய தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

//ஐயன் ஆடும் நடனத்தின் தாத்பர்யம் என்னவென்றும் அவை இயற்கையோடு இணைந்துள்ளன என்று கண்டோம்//

உலக பற்றுகளில் மூழ்கி விடாமல் இறைவனை அடைய அவரை அறிந்து கொள்ள முயலவேண்டும் என்று சொன்னது அருமை.

தாத்பர்யம் தெரிந்து கொண்டேன். இனி தரிசனம் செய்ய தொடர்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

சப்தவிடங்கத் தலங்களை தரிசனம் செய்ய ஆசை உண்டு. அவன் அருள் இருந்தால் தரிசிப்பேன்.

தகவல்கள் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

S.Muruganandam said...

தியாகராஜர் அருளால் தாங்கள் சப்த விடங்கத்தலங்கள் தரிசனம் சித்திக்க அவரிடம் பிரார்தித்துக்கொள்கிறேன் ஐயா.