ஆறாம் திருநாள் - யானை வாகன சேவை
பாடி என்றழைக்கப்படும் திருவலிதாயம், குரு பரிகாரத்தலத்தின் பிரம்மோற்சவ காட்சிகள் தொடர்கின்றன. இன்றைய தினம் மூன்றாம் திருநாள் இரவு யானை வாகன சேவையை தரிசிக்கலாம் அன்பர்களே.
(படத்தை பெரிது படுத்தி வரலாற்றைப் படிக்கலாம்)
இறைவருக்கு வல்லீசர் என பெயர் வர ஒரு சுவையான வரலாறு உள்ளது. பிரம்மாவின் புதல்விகளான கமலை, வல்லி இருவரும் சிவபெருமானை மணாளனாக அடைய தவமியற்றினர். அம்மைக்கு தன் வாம பாகத்தை அளித்து விட்டதால் வேறு யாரையும் மணக்க முடியாது என்று ஈசன் கூற, சிவாபெருமானுக்கு புகழில் சிறிதும் குறையாத விநாயகப்பெருமானை அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே இறைவனின் திருநாமம் திருவல்லீசர் என்றானது.
அம்மையப்பர்
உள்
பிரகாரத்தின் வலது
புறம் தெற்கு
நோக்கிய அம்பாள்
ஜெகதாம்பிகை சன்னதி, அம்மனை தல புராணத்தில் தாயம்மை
என்று
அழைத்துப் பாடியுள்ளனர். அம்பாள்
சிறந்த வரப்பிரசாதி. சகல
ஜகத்தையும் காக்கத் தோன்றிய கருணை மிக்க அம்பிகையை புவன
நாயகி என்றும்
அழைக்கின்றனர். ஐயன் மற்றும்
அம்மை சன்னதி
ஒரே பிரகாரத்துடன்
அமைந்திருப்பது இத்தலத்தின்
தனி சிறப்பு.
தாயம்மை
அம்பாள்
சந்நிதிக்கு நேர்
எதிரே தெற்கு
வெளிப் பிரகாரத்தில்
சிம்ம வாகனம்
அம்பாளை நோக்கியவாறு
உள்ளது. ஈசன் கருவறையின்
உள்ளேயும் ஒரு அம்பாள்
திருவுருவம் உள்ளது. அம்பாள்
திருவுருவம் ஒரு
காலத்தில் பின்னப்பட, புதிய
மூர்த்தம் செய்து
அதை வெளியே
தெற்கு நோக்கி
இருக்குமாறு பிரதிஷ்டை
செய்து, பின்னமான
மூர்த்தத்தை ஈசன்
கருவறைக்கு உள்ளே
வைத்து விட்டதாக
சொல்லப்படுகிறது.
கோபுர வாசல் சேவை
யானை வாகன சேவை
இக்கோவில் காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30 இரவு மணி வரை திறந்திருக்கும். இத்தலத்தில்
பௌர்ணமி தினத்தில்
வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.
2 comments:
அழகான கோவில். படங்கள் மூலம் நாங்களும் தரிசித்தோம். நன்றி.
மிக்க நன்றி வெங்கட் ஐயா.
Post a Comment