Tuesday, June 28, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 4

மூர்த்திகள் வாகன சேவை 

மூஷிக வாகனத்தில் சக்தி விநாயகர் 
பின்னழகு 




பொதுவாக திருக்கல்யாணம் முடிந்தபின் சிவபெருமான் திருக்கயிலாய வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பார். 

திருக்கயிலாய வாகனத்தில் மல்லிகேஸ்வரர் 


அதிகார நந்தி வாகனத்தில் விஸ்வநாதர் 

காமதேனு வாகனத்தில் மஹேஸ்வரி அம்பாள் 


மயில் வாகனத்தில் முருகர் 
கருட வாகனத்தில் 
சத்ய நாராயணப்பெருமாள்

ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

பொதுவாக பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து அருள் பாலிப்பார்கள். இக்கோவிலில் மல்லிகேஸ்வரர் மற்றும் விஸ்வநாதர்  அருள் பாலிப்பதால் இருவரும்  திருவீதி எழுந்தருளி நயன தீட்சை தந்தருளினர். விஸ்வநாதர் அதிகார நந்தியிலும், மல்லிகேஸ்வரர் திருக்கயிலாய வாகனத்திலும் தரிசனம் தந்தருளினர்.   மேலும் இக்கோவிலின்  சத்ய நாராயணப்பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளி  அருள் பாலித்தார் என்பது ஒரு தனி சிறப்பு. 

இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்

Monday, June 27, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 3

பஞ்ச மூர்த்திகள்

விநாயகர் 

ஒரு பக்கம் காவலர் பயிற்சி பள்ளி மறு பக்கம் மெட்ரோ நிலையம் என்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்க,    நடுவில் உள்ள சிறு சந்தில் உள்ளே சென்றால்  மல்லிகேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். புதிய மூன்றடுக்கு இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது, கோபுரத்தில் அருமையான விநாயகர், முருகர், தோபாசாமி, ந்டராஜர்,  கண்ணப்பர் சுதை சிற்பங்கள் அருமை. இராஜ கோபுர நுழைவாயிலில் அற்புதமான பாவை கற்சிலைகள். இராஜ கோபுரத்தை தாண்டியவுடன் மஹா மண்டபம். மஹா மண்டப உட்கூரையில் அருமையான ஓவியங்கள். 


வள்ளி தேவசேனா சமேத முருகர்

மஹேஸ்வரி - மல்லிகேஸ்வரர் 

விஸ்வநாதர் 

பின்னழகு 

ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீமல்லிகேஸ்வரர், ஸ்ரீவிஸ்வநாதர்-ஸ்ரீவிசாலாக்ஷி சன்னதிகள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன, ஸ்ரீமஹேஸ்வரி அம்பாள் சன்னதி கிழக்கி நோக்கி இச்ச்ன்னதிகளை ஒட்டியே அமைந்துள்ளன. கோஷ்டத்தில் வீரபத்திரர், கணபதி, மஹாவிஷ்ணு, லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, அம்பாள் சன்னதி பின்புறத்தில் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவியர் அருள் பாலிக்கின்றனர்.  முன் பக்கத்தில் ஐயப்பன், வள்ளி தேவசேனா சமேத முருகர் கோஷ்டத்தில் அருள் பாலிக்கின்றனர் . தனியாக நவக்கிரக சன்னதி,  கோதண்ட இராமர் சன்னதி, சத்ய நாராயணப்பெருமாள், பக்த ஜன ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. 

விசாலாக்ஷி அம்பாள் 

சத்ய நாராயணப்பெருமாள் 

சண்டிகேஸ்வரர் 


விநாயகர் - முருகர் 

தீபாராதணை 

தோபாசாமி 

கருட வாகனம் 

அதிகார நந்தி வாகனம் 


திருக்கயிலாய வாகனத்தின் பின்னழகு

சக்தி விநாயக்ர், மல்லிகேஸ்வரர், விஸ்வநாதர், ம்ஹேஸ்வரி மூலமூர்த்திகள் சுமார் 500 வருடங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்ப்பட்டவை மற்றவை சமீப காலத்தில் வந்தவை. சுவாமி விமானமும் அம்பாள் விமானமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.


சமீப காலத்தில்  29.04.1984 அன்றும். பின்னர் மஹா மண்டபம்,  மல்லிகேஸ்வரர் புதிய விமானம் கட்டி 08.11.1992 அன்றும். அமபாள் விமானம் புதிதாக அமைத்து  பின்னர் 11.02.2015  அன்றும். புதிய மூன்று நிலை  இராஜகோபுர முடித்து 11.05.2016 அன்றும் குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது.  ஜகத்குரு காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,, சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீபாரதி  தீர்த்த மஹாஸ்வாமிகள், பழனி தங்கவேல் சுவாமிகள் ஆகியோர் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து ஆசிகள் வழங்கியுள்ளனர்.   
இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்

பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு காட்சிகள் தொடரும்  .  .  .   .   .  .

Saturday, June 25, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 2

திருக்கல்யாணம் 

மல்லிகேஸ்வர சுவாமி

மஹேஸ்வரி அம்பாள்

பொதுவாகவே கும்பாபிஷேகம் என்பது ஆலயம் அமைந்திருக்கின்ற கிராமத்தில் உள்ளவர்களின்   நன்மைக்காவும் செய்யப்படுகின்றது. ஹோமத்தில் இடப்படுகின்ற சமித்துக்களும் மூலிகைகளும் மக்கள் அனைவருக்கும் நன்மை பயப்பவை ஆகும். அதே போல மாலை நடைபெறும் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்கள்  சகல சௌபாக்கியங்களையும் அடைவர்  என்பது ஐதீகம், 


அம்மையும் அப்பனும் 

 திருமாங்கல்யம்

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களையும் உலகிற்கு உள்ளவாறு உணார்த்தி உய்யும் நெறியைக் காட்டும் மகா சித்தர்களுள் ஒருவர் ஸ்ரீதோபா சுவாமிகள். சித்தத்தை சிவமயமாக்கிச் செய்தல் தவம் அந்நெறியில் நின்றவர். தமது அருட்பண்பு கொண்டு அட்டமாசித்திகளை நிகழ்த்திக் காட்டியவர். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்தலை தமது பெருநெறியாகக் கொண்ட தயாளர்.

இனி தோபா சுவாமிகளின் சரிதத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா அன்பர்களே? சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளியில் வேளாளர் குலத்தில் சிவகுருபதம் பிள்ளை சிவகாமி தம்பதிகளுக்கு  இராமேஸ்வர பெருமானின் அருளால் மூன்றாவது பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு ராமலிங்கம் என்று திருநாமமிட்டனர். இவர் பிள்ளைப்பருவம் நீங்கி காளைப்பருவம் அடையும் முன்னரே பெற்றோர்கள் இருவரும் சிவனடி அடைந்தனர். இவருடைய நிலையைக் கண்ட ஆங்கில அரசு இவரது தந்தையார் பணி செய்த காவலாட்படையில் இவரை சேர்த்துக்கொண்டது. பயிற்சிக்குப்பின் இவரை சென்னைக்கு மாற்றினர். மற்ற காலாட்படை வீரர்களுடன் இவருக்கும் படைக்கல பயிற்சியும் அளித்தனர். போர் தொழிலை இவர் நிஷ்காமியமாகவே செய்து வந்தார். திருத்தணி முருகன் மீது அருட்பா பாடினார். தொடர்ந்து  பன்னிரு திருமுறைகள், உபநிடதம் ,கைவல்யம் முதலிய ஞான நூல்களையும் படித்து நித்தியம் எது? அநித்தியம் எது? என்று ஆராயலானார். திருஞானசம்பந்தரையே தமக்கு குருவாக  கொண்டு தியானத்தில் அமர்ந்தார். நிற்விகல்ப சமாதி எய்தும் நிலை பெற்றார். நிஷ்டை கலைந்து  வெளிமுகமாகும் போது தோ பா என்று இரு எழுத்துக்கள் பலமுறைகள் வெளிப்படும். எனவே இவர் தோபா சுவாமிகள் என்று அழைக்கப்படலானார். தோபா என்பதின் விளக்கம் தோவை முதலாகக் கொண்டு தோடுடைய செவியன் என்று பாட ஆரம்பித்த தன் குருமூர்த்தியாகிய ஸ்ரீ திருஞானசம்பந்தப் பெருமானை நினைவு கொள்வதைக்  குறிக்கும்.


திருமாங்கல்யத்துடன் பாகம் பிரியாள் 


ஸ்ரீதோபா சுவாமிகள் திருவொற்றீயூரில் தெரு ஓரமாக அமர்ந்து, அந்த வழியாக செல்பவர்களின் குணத்தைத் குறிப்பது போல, நாய் போகிறது, நரி வருகிறது, கழுதை கத்துகிறது, பேய் திரிகிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பாராம். ஒரு சமயம் வடலூர் இராமலிங்க அடிகளார் அந்த வழியே செல்லும் போது முதல் முறையாக மனிதர் வருகிறார் என்றாராம். வள்ளலாரும் தன்னைப் போல ஒரு மகான் இவர் என்பதை உணார்ந்து அங்குள்ளோர் அனைவரிடமும் தெரிவித்தார்.

தோபா சுவாமிகள் ஒரு நாள் ஒரு இல்லத்தின் வாயிலில் நின்று பிச்சை கேட்டார். அப்பெண்மணியோ மிகுந்த பக்தியுடன் பாதி வெந்து கொண்டிருந்த சாதத்தை அவசரமாக அவருக்கு அளித்தார். பிறகு உள்ளே சென்று பானை சாதத்தை கிளர முயன்ற போது சாதம் முழுமையாக வெந்திருந்ததாம், மகான் செய்த அற்புதம் இது என்கிறார்கள்.  

திருமாங்கல்ய தாரணம்  

பின்னர் இவர் திகம்பரராகி தன்னுடைய ஆடைகளை கழற்றி எறிந்து விட்டு, தனக்குரிய பொருட்களை எல்லாம் தானம் செய்துவிட்டு  திரிய ஆரம்பித்தார். இவர் திருவொற்றியூர், வேளச்சேரி மற்றும் சென்னையின் சில இடங்களில் தமது சித்துகளை  செய்தார். அனுமாஷ்யமான காரியங்களை செய்து   பலருக்கு அனுக்ரகும் செய்தார். சென்னையிலிருந்து வெல்லூருக்கு வந்தார் அங்கும் பல சித்துகளை செய்தார். பின்னர் . காரிவாகன சகாப்தம்  1772-ம் ஆண்டு கி.பி1850, சாதாரண வருடம், பங்குனி திங்கள், 27ம் நாள், புதன்கிழமை, பூர்வபட்சம் பிரதமை திதி ரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் இவருடைய தலைமை சீடர் சித்தநாத ஸ்வாமிகள் கட்டிய சமாதி அடக்க குகையுள் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து தமது இச்சைப்படி ஞான யோக  வலிமையினால் ஒடுக்கம் பெற்றார். அவரது சீடர்கள் ஸ்வாமிகளின் திருமேனியை ஆகமமுறைப்படி அபிஷேகம், சோடஷோபசாரங்களுடன் பூசித்து அக்குகையை மூடி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தனர். தினமும் மூன்று கால பூசை நடத்தி வந்தனர்.



தீபாராதனை 

ஸ்ரீதோபா ஸ்வாமிகளின் ஜீவ சமாதி வேலூரை சேர்ந்த சைதாப்பேட்டை பகுதியில் உள்ளது. இன்றும் அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். 


இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்
                                                                                                                      


                                                                                                                              சுவாமி புறப்பாடு காட்சிகள் தொடரும்  .  .  .   .   .  .

Wednesday, June 22, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 1

தோபா ஸ்வாமி கோயில் என்று வழங்கப்படும்

மஹேஸ்வரி அம்பிகா சமேத மல்லிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்

அசோக் நகர் சென்னை

கூரையில் வரையப்பட்டுள்ள 
ஸ்ரீ சக்தி விநாயகர் ஓவியம் 

அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்ற சித்தர்கள் நிஷ்டையிலிருந்த இடங்களும் அவர்கள் வணங்கி வழிபட்ட கோயில்களும் மிகவும் மகிமை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவ்வாறு இப்புராதான ஆலயத்தில் ஹட யோகியும்  சித்த புருஷருமான ஸ்ரீதோபா சுவாமிகள் சில காலம் தங்கி தவம் செய்ததாகவும், ஸ்ரீமல்லிகேஸ்வரரை பூசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. எனவே இத்திருக்கோயில் ஸ்ரீதோபா சுவாமி கோயில் என்றழைக்கப்படுகின்றது.  அரசு வருவாய் ஆவணங்களில் இப்பெயரே உள்ளது.  

நூதன இராஜகோபுரம் 

இவ்வாலயத்திற்கு உள்ள சிறப்புக்கள்  இவ்வாலயத்தை தகர்க்க புல்டோசர்கள் முயன்றபோது அவை அனைத்தும் பழுதாகி நின்று விட்டன. கோவில் இன்றும் அங்கேயே உள்ளது சுமார் 500 வருடங்கள்  பழமையானது  ஆதியில்  இவ்வாலயத்திற்கு 2 ஏக்கர் 21 சென்ட் நிலம் இருந்தது,  20  வருடங்களுக்கு முன் தமிழக அரசு இந்நிலத்தை காவலர் பயிற்சிக் கல்லூரிக்கு இந்த இடத்தை ஆர்ஜிதம் செய்தது.  காவலர் குடியிருப்பு கோவில் இருக்கும் இடத்தில் வந்ததால்  புல்டோசர்  யந்திரம் கொண்டு இவ்வாலயத்தை இடிக்க முயன்றனர், ஆனால் இறைவன் சித்தம் வேறு விதமாக இருந்தது. அகில உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும் , அருளியும் விளையாடும் அந்த பரமன் இந்த யந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தி விட்டார். ஒருமுறை அல்ல பல முறை ஆலயத்தை  தகர்க்க முயன்றனர் ஆயினும் யந்திரத்தால் கோவிலை நெருங்கவே முடியவில்லை. இறைவன்  இன்றும் இவ்வாலயத்தில் குடிகொண்டு  அன்பர்களுக்கு அருளை வழங்கிக்கொண்டிருக்கிறார்.  



ஸ்ரீ தோபா சுவாமிகள் சுதை சிற்பம்


இராஜ கோபுர நுழைவாயிலில்  உள்ள சிலை

இப்பதிவில் இவ்வாலயத்தின் மஹா மண்டபத்தின் உள் கூரையில் வரையப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள்  இடம்பெறுகின்றன. இனி வரும் பதிவுகளில் 11.05.2016 அன்று,   நூதன மூன்று நிலை இரஜகோபுரம் கட்டி முடித்த பின் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக நாளன்று,    இரவு நடைபெற்ற திருக்கல்யாணம் மற்றும் சுவாமி புறப்பாட்டின் காட்சிகள் இடம்பெறுகின்றன வந்து தரிசியுங்கள் அன்பர்களே.



ஆனந்த கூத்தன் சுதை சிற்பம் 

பரமனிடம் விநாயகர் ஞானப்பழம் பெறுதல் 

நடந்தாய் வாழி காவேரி 


திருக்கயிலாயக்காட்சி

 பார்வதி திருக்கல்யாணம் 

சூர சம்ஹாரத்திற்காக சக்திவேல் வாங்குதல் 

வள்ளி தெய்வாணையுடன் முருகர்

அவ்வைக்கு ஒரு பாடம் 


பாற்கடலைக் கடைதல் 

அன்னபூரணி

மெட்ரோ இரயில் மூலம் பயணம் செய்பவர்கள் அசோக் நகர் நிலையத்தை அடையும் போது பறவைப் பார்வையாக இவ்வாலயத்தை கண்டு வணங்கலாம். 



இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்


திருக்கல்யாணக் காட்சிகள் தொடரும்  .  .  .   .   .  .