Monday, June 27, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 3

பஞ்ச மூர்த்திகள்

விநாயகர் 

ஒரு பக்கம் காவலர் பயிற்சி பள்ளி மறு பக்கம் மெட்ரோ நிலையம் என்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்க,    நடுவில் உள்ள சிறு சந்தில் உள்ளே சென்றால்  மல்லிகேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். புதிய மூன்றடுக்கு இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது, கோபுரத்தில் அருமையான விநாயகர், முருகர், தோபாசாமி, ந்டராஜர்,  கண்ணப்பர் சுதை சிற்பங்கள் அருமை. இராஜ கோபுர நுழைவாயிலில் அற்புதமான பாவை கற்சிலைகள். இராஜ கோபுரத்தை தாண்டியவுடன் மஹா மண்டபம். மஹா மண்டப உட்கூரையில் அருமையான ஓவியங்கள். 


வள்ளி தேவசேனா சமேத முருகர்

மஹேஸ்வரி - மல்லிகேஸ்வரர் 

விஸ்வநாதர் 

பின்னழகு 

ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீமல்லிகேஸ்வரர், ஸ்ரீவிஸ்வநாதர்-ஸ்ரீவிசாலாக்ஷி சன்னதிகள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன, ஸ்ரீமஹேஸ்வரி அம்பாள் சன்னதி கிழக்கி நோக்கி இச்ச்ன்னதிகளை ஒட்டியே அமைந்துள்ளன. கோஷ்டத்தில் வீரபத்திரர், கணபதி, மஹாவிஷ்ணு, லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, அம்பாள் சன்னதி பின்புறத்தில் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவியர் அருள் பாலிக்கின்றனர்.  முன் பக்கத்தில் ஐயப்பன், வள்ளி தேவசேனா சமேத முருகர் கோஷ்டத்தில் அருள் பாலிக்கின்றனர் . தனியாக நவக்கிரக சன்னதி,  கோதண்ட இராமர் சன்னதி, சத்ய நாராயணப்பெருமாள், பக்த ஜன ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. 

விசாலாக்ஷி அம்பாள் 

சத்ய நாராயணப்பெருமாள் 

சண்டிகேஸ்வரர் 


விநாயகர் - முருகர் 

தீபாராதணை 

தோபாசாமி 

கருட வாகனம் 

அதிகார நந்தி வாகனம் 


திருக்கயிலாய வாகனத்தின் பின்னழகு

சக்தி விநாயக்ர், மல்லிகேஸ்வரர், விஸ்வநாதர், ம்ஹேஸ்வரி மூலமூர்த்திகள் சுமார் 500 வருடங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்ப்பட்டவை மற்றவை சமீப காலத்தில் வந்தவை. சுவாமி விமானமும் அம்பாள் விமானமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.


சமீப காலத்தில்  29.04.1984 அன்றும். பின்னர் மஹா மண்டபம்,  மல்லிகேஸ்வரர் புதிய விமானம் கட்டி 08.11.1992 அன்றும். அமபாள் விமானம் புதிதாக அமைத்து  பின்னர் 11.02.2015  அன்றும். புதிய மூன்று நிலை  இராஜகோபுர முடித்து 11.05.2016 அன்றும் குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது.  ஜகத்குரு காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,, சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீபாரதி  தீர்த்த மஹாஸ்வாமிகள், பழனி தங்கவேல் சுவாமிகள் ஆகியோர் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து ஆசிகள் வழங்கியுள்ளனர்.   
இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்

பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு காட்சிகள் தொடரும்  .  .  .   .   .  .

2 comments:

ஸ்ரீமலையப்பன் said...

தகவலுக்கு நன்றி

S.Muruganandam said...

நன்றி ஸ்ரீராம்.