தோபா ஸ்வாமி கோயில் என்று வழங்கப்படும்
மஹேஸ்வரி அம்பிகா
சமேத மல்லிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்
அசோக் நகர் சென்னை
கூரையில் வரையப்பட்டுள்ள
ஸ்ரீ சக்தி விநாயகர் ஓவியம்
அஷ்டமா
சித்திகள் கைவரப்பெற்ற சித்தர்கள் நிஷ்டையிலிருந்த இடங்களும் அவர்கள் வணங்கி வழிபட்ட
கோயில்களும் மிகவும் மகிமை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
இவ்வாறு இப்புராதான ஆலயத்தில் ஹட யோகியும்
சித்த புருஷருமான ஸ்ரீதோபா சுவாமிகள் சில காலம் தங்கி தவம் செய்ததாகவும், ஸ்ரீமல்லிகேஸ்வரரை
பூசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. எனவே இத்திருக்கோயில் ஸ்ரீதோபா சுவாமி கோயில்
என்றழைக்கப்படுகின்றது. அரசு வருவாய் ஆவணங்களில்
இப்பெயரே உள்ளது.
நூதன இராஜகோபுரம்
இவ்வாலயத்திற்கு
உள்ள சிறப்புக்கள் இவ்வாலயத்தை தகர்க்க புல்டோசர்கள்
முயன்றபோது அவை அனைத்தும் பழுதாகி நின்று விட்டன. கோவில் இன்றும் அங்கேயே உள்ளது சுமார்
500 வருடங்கள் பழமையானது ஆதியில்
இவ்வாலயத்திற்கு 2 ஏக்கர் 21 சென்ட் நிலம் இருந்தது, 20 வருடங்களுக்கு
முன் தமிழக அரசு இந்நிலத்தை காவலர் பயிற்சிக் கல்லூரிக்கு இந்த இடத்தை ஆர்ஜிதம் செய்தது. காவலர் குடியிருப்பு கோவில் இருக்கும் இடத்தில்
வந்ததால் புல்டோசர் யந்திரம் கொண்டு இவ்வாலயத்தை இடிக்க முயன்றனர், ஆனால்
இறைவன் சித்தம் வேறு விதமாக இருந்தது. அகில உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும்,
மறைத்தும் , அருளியும் விளையாடும் அந்த பரமன் இந்த யந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தி
விட்டார். ஒருமுறை அல்ல பல முறை ஆலயத்தை தகர்க்க
முயன்றனர் ஆயினும் யந்திரத்தால் கோவிலை நெருங்கவே முடியவில்லை. இறைவன் இன்றும் இவ்வாலயத்தில் குடிகொண்டு அன்பர்களுக்கு அருளை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ தோபா சுவாமிகள் சுதை சிற்பம்
இராஜ கோபுர நுழைவாயிலில் உள்ள சிலை
இப்பதிவில் இவ்வாலயத்தின் மஹா மண்டபத்தின் உள் கூரையில் வரையப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இனி
வரும் பதிவுகளில் 11.05.2016 அன்று, நூதன மூன்று
நிலை இரஜகோபுரம் கட்டி முடித்த பின் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக நாளன்று, இரவு நடைபெற்ற திருக்கல்யாணம்
மற்றும் சுவாமி புறப்பாட்டின் காட்சிகள் இடம்பெறுகின்றன வந்து தரிசியுங்கள் அன்பர்களே.
ஆனந்த கூத்தன் சுதை சிற்பம்
பரமனிடம் விநாயகர் ஞானப்பழம் பெறுதல்
நடந்தாய் வாழி காவேரி
திருக்கயிலாயக்காட்சி
பார்வதி திருக்கல்யாணம்
சூர சம்ஹாரத்திற்காக சக்திவேல் வாங்குதல்
வள்ளி தெய்வாணையுடன் முருகர்
அவ்வைக்கு ஒரு பாடம்
பாற்கடலைக் கடைதல்
அன்னபூரணி
மெட்ரோ
இரயில் மூலம் பயணம் செய்பவர்கள் அசோக் நகர் நிலையத்தை அடையும் போது பறவைப் பார்வையாக இவ்வாலயத்தை கண்டு வணங்கலாம்.
இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்
4 comments:
அதிசயம் ஆனால் உண்மையா ?
இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் கோவில்.
பகிர்வுக்கு நன்றி.
ஆம் கோமதி அரசு அம்மா.
தாங்களே வந்து அருகில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளதைப் பார்த்துச் செல்லலாம் ஸ்ரீராம் ஐயா.
Post a Comment