ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
(மண்டப அலங்காரம்)
ஐந்தாம் திருநாள் காலை சிவிகை உற்சவம்
அழகு முருகனின் அருட் கோலங்கள் அதிகமாக உள்ளதால் இந்த ஐந்தாம் நாள் பதிவுகளை மூன்று பாகங்களாக பதிவிட உள்ளேன். இப்பதிவில் உள்ள கோலங்கள் எல்லாம் மண்டப காட்சிகள். ஐந்தாம் நாள் இரவு தொண்டை மண்டலத்தில் எப்போதும் விசேஷ உற்சவம். பஞ்ச மூர்த்திகளும் தம்முடைய வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இவ்வாலயத்திலும் ஐந்தாம் நாள் இரவு, விநாயகர் மூஷிக வாகனத்திலும், பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்திலும், முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், தேவியர் இருவரும் பச்சை மயில் வாகனத்திலும். எல்லா நாட்களையும் விட சிறப்பு அலங்காரம் இன்றுதான்.
விநாயகர், சிவ சக்தி, வள்ளி நாயகி
தெய்வ நாயகி - சண்டிகேஸ்வரர்
சிவ சுப்பிரமணிய சுவாமி
தெய்வ நாயகி - சண்டிகேஸ்வரர்
சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கீழே உள்ள படம் அச்சிட ஏதுவாக திருத்தப்பட்ட படமாகும்.
ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....
5 comments:
என்னே படங்கள்... அலங்காரம் மிகவும் அருமை...
என்னே படங்கள்... அலங்காரம் மிகவும் அருமை...
இன்னும் வளரும் திண்டுக்கல் தனபாலன் வந்து தரிசனம் செய்யுங்கள்.
ஒரு புகைபடத்தில் உள்ள முருகனின் அலங்காரம் அடுத்த முருகனின் அலங்காரத்திற்கு போட்டியாக உள்ளது. இறுதியாக உள்ள முருகன் அலங்காரம் பூங்கா நகர் அருள்மிகு கந்த கோட்ட முருகனை நினைவு படுத்தும்படியாக அலங்கரித்து உள்ளார்கள். தங்களின் ஆன்மீக சேவைக்கு நன்றி ஐயா.
// இறுதியாக உள்ள முருகன் அலங்காரம் பூங்கா நகர் அருள்மிகு கந்த கோட்ட முருகனை நினைவு படுத்தும்படியாக அலங்கரித்து உள்ளார்கள்//
ஆம் ஐயா.
Post a Comment