Friday, September 30, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 2

எந்தக்கோவில்? எந்த அம்பாள்? எடுத்தவர் யார்? என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு புகைப்பட நிலையத்தில் பார்த்த அம்மனின் படங்களைப் பார்த்த போது நவராத்திரி அலங்காரப்படங்களாக உள்ளனவே என்று அவர்களிடம் கேட்டு வாங்கிய படங்கள் இவை. எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகள் உங்கள் மூலமாக அன்னையின் இந்த அற்புத தரிசனத்தை அன்பர்களுக்கு அளிக்க ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது





சந்தனக் காப்பு அலங்காரம் ( மூலவர் )










இராஜராஜேஸ்வரி




ஜ்வாலாமகுடத்துடன் அம்பாள்



உற்சவர் மீனாக்ஷி அலங்காரம்






ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய



துக்க நிவாரணி அஷ்டகம்






கானுறு மலரென கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரொளி மதியொளி
தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (2)




அம்மன் அருள் வளரும் .........


2 comments:

Test said...

நன்றி ஐயா, "ஜ்வாலாமகுடத்துடன் அம்பாள்" அலங்கரித்தவர் மிகுந்த சிரத்தையுடன் செய்தவர் போலும், பெரிதுபடுத்தி பார்த்தபோது சிலிர்த்தேன்.

S.Muruganandam said...

ஓம் சக்தி ஓம் சக்தி
சகலம் ஜகதம்பார்ப்பணமஸ்து