Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் - 7

நவராத்திரி ஏழாம் நாள்

வடபழனி சாந்தநாயகி
மீனாக்ஷி அலங்காரம்


நவராத்திரியின் ஏழாம் நாள் அன்னையை எட்டு வயது குழந்தையாக பாவித்து சாம்பவி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் க்ஷேம விருத்தி ஏற்படும் . இன்றைய ஸ்லோகம்

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை பரிகீர்த்திதா யஸ்யாஸ்தாம்
ஸுகதாந் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||


(மிகுந்த ஒளிமயமான பரமாத்மாவின் இச்சைப்படி எந்த சக்தி திரு உருவங்களைத் தரிக்கின்றதோ அந்த சாம்பவியாகிய சக்தியை வணங்குகிறேன்.)


காலராத்ரி துர்க்கா

அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலதாத்ரி தேவி அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி , கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில் ,காலதாத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள்.

இரவு நேரத்தில் இறந்த உடலான சவத்தின் மேல் அமர்ந்து, மின்னல் போன்ற ஒளி வீசும் ஆபரணத்தை அணிந்துகொண்டு, நெருப்பைக் கக்கும் வாயுடன் பவனி வருவாள் என்றும் கூறுவர். சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள் .

பொன்னிறமான கௌரி (பார்வதி) அசுரர்களை அழிக்க பொன்னிறத்தை மாற்றி கருப்பு வர்ணத்தவளாக காட்சி தருகின்றாள். சும்ப நிசும்பர்கலை அழிக்க அன்னை காளியாக தோன்றினாள்.



வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |

வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||


(கழுதை வாகனத்தில் பெரிய உதடுகளுடன், பளபளக்கும் ஆபரணங்கள் அணிந்து பிரகாசமாக பவனி வரும் பயங்கரீ துர்கா என்னுடைய அறியாமையை போக்கட்டும்.)


மாங்காடு காமாக்ஷியம்மன்



சைதாப்பேட்டை காமாக்ஷியம்மன்




திருமயிலை மயூரவல்லித்தாயார்
கிளி வாகன சேவை


சொர்ணாம்பாள் மீனாக்ஷி அலங்காரம்

சாந்தநாயகி மீனாக்ஷி அலங்காரம்

ரோக நிவாரணி அஷ்டகம்

கோவுரை ஜோதி கோமள ஜோதி

கோமதி ஜோதி துர்க் கையளே |

நாவுரை ஜோதி நாற்றிசை ஜோதி

நாட்டிய ஜோதி நாச்சியளே ||

பூவுறை ஜோதி பூரணி ஜோதி

பூதநல் ஜோதி பூரணையே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநி வாரணி ஜெய துர்க்கா || (7)


அம்மன் அருள் வளரும்

No comments: