நவராத்திரி இரண்டாம் நாள்
நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை மூன்று வயது குழந்தையாக பாவித்து த்ரிமூர்த்தியாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் தனதான்ய வளம் கிட்டும். இன்றைய ஸ்லோகம்
சத்வாதிபிஸ் திரிமூர்த்தியர்த்திர்யா தெளர்ஹி நாதா ஸ்வரூபிணி த்ரிகால வாபினிசக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||
(சத்துவம் போன்ற குணங்களால், அனைத்து ரூபமாக, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முக்காலங்களிலும் எந்த சக்தி வியாபித்திருக்கிறதோ அந்த த்ரிமூர்த்த்தியாகிய சக்தியை வணங்குகிறேன்.)
இன்று நாம் காணப்போகும் அன்னையின் அலங்காரங்கள் மயிலை வெள்ளீஸ்வரம், மயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம், மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அசோக்நகர் சித்திவிநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களின் அம்மனின் அலங்காரங்கள்.
ப்ரம்ஹசாரிணி துர்கா
நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை, இமவான் மகளாக பிறந்து சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காக தவம் செய்யும் பருவத்தில் கன்னியாக, யோகினியாக, தபஸ்விணியாக ப்ரும்மசாரிணியாகவும் வழிபடலாம். சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் ப்ரம்ஹசாரிணி எனப் போற்றப் பட்டாள். நீல வடிவினாளாக அதாவது பக்தி வசமானவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.
ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||
என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.
இன்று நாம் காணப்போகும் அன்னையின் அலங்காரங்கள் மயிலை வெள்ளீஸ்வரம், மயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம், மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அசோக்நகர் சித்திவிநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களின் அம்மனின் அலங்காரங்கள்.
திருமயிலை வெள்ளீஸ்வரம் காமாக்ஷியம்மன்
அன்னவாகன கொலு
அன்னவாகன கொலு
மாம்பலம் முத்துமாரியம்மன்
கருமாரி அலங்காரம்
மஹாலிங்கபுரம் ப்ருஹத் சுந்தர குஜாம்பாள்
காமாக்ஷி அலங்காரம்
அசோக்நகர் சொர்ணாம்பாள்
கருமாரி அலங்காரம்
மஹாலிங்கபுரம் ப்ருஹத் சுந்தர குஜாம்பாள்
காமாக்ஷி அலங்காரம்
அசோக்நகர் சொர்ணாம்பாள்
ஸ்ரீநிவாசர் அலர்மேல் மங்கையுடன்
கண்ணாடியறை கொலு
No comments:
Post a Comment