Tuesday, June 19, 2007

Natarajar 4

Normally six ablutions are done to Lord Nataraja during a year, which signify one day of devas(celestials). Also during Brahmotsavams in temples the 10th day early morning uthsavam(festival) is Natarajar uthsavam. These photos are taken during those times in temples. Arudra Darisanam photos will be uploded in December during 10 day Arudra Darisanam festival please do visit during that time.
அம்பலத்தாடும் ஐயனுக்கு வருடத்தில் ஆறு திருமுழுக்குகள். பூலோகத்தின் ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்கள் செய்யும் ஆறு கால பூசையே இந்த ஆறு திருமுழுக்குகள் என்பது ஐதீகம். மேலும் பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் காலை நடராஜர் உற்சவம். இச்சமயங்களில் எடுக்கப்பட்ட ஐயனின் சில அருட்தரிசனங்கள் இவை .
மாற்றறியாத செழும்பசும் பொன்னே
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
கூற்றறியாத பெருந்தவருள்ளக்
கோயிலிருந்த குணப்பெருங் குன்றே
வேற்றறி யாதசிற் றம்பலக்கனியே
விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே
சாற்றறி யாதவென் சாற்றுங் களித்தாய்
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
Ani uthiram Vengeeswaram (2006)
சிவ சிவ என்கிலர் தீவிணையாளர்
சிவ சிவ என்றிட தீவிணை மாளும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! ... திருமூலர்


Karaneeswaram Natarajar and Sivakami Ambal

Masi chathurthasi ablution, Vengeeswaram
(Natarajar with Ambal and Manikavasagar)
வேங்கீஸ்வரம் மாசி வளர் பிறை சதுர்த்தசி திருமுழுக்கு
ஐயன் அம்மை மற்றும் மாணிக்க வாசகர்
பிறவாதிருக்க வரம்தரல்
வேண்டும் பிறந்துவிட்டால்
இறவாதிருக்க மருந்துண்டு
காண் இது எப்படியோ
அறமார் புகழ்தில்லைஅம்பல
வாணர் அடிக்கமலம்
மறவாதிரு மனமே அதுதான்
நன் மருந்துனக்கே. ....பட்டினத்தார்

Ananda Thandava Nataraja Murthi

Siva kama Sundari
Ani Uthira darisanam , Vengeeswaram (2006)
வேங்கீஸ்வரம் ஆனி உத்திர தரிசனம்
தெய்வ சிதம்பர தேவா உன்
சித்தம் திரும்பிவிட்டால்
பொய்வைத்த சொப்பனமாம் மன்னர்
வாழ்வும் புவியுமெங்கே
மெய்வைத்த செல்வமெங்கே மண்ட
லீகர்தம் மேடைஎங்கே
கைவைத்த நாடக சாலைஎங்கே
இது கண்மயக்கே!
.....பட்டினத்தார்.
Sivananda valli


Natarajar Uthsavam ,Karaneeswaram, Saidapet.
சைதை காரணீஸ்வரம் சித்திரை பிரம்மோற்சவம்
பத்தாம் நாள் காலை நடராஜர் உற்சவம்.
அத்தனை முப்பத்து முக்கோடி
தேவர்க்கதிபதியை
நித்தனை அம்மை சிவகாம
சுந்தரி நேசனை எம்
கத்தனைப் பொன்னம்பலத்தாடும்
ஐயனைக் காணக் கண்கள்
எத்தனை கோடி யுகமோ
தவம் செய்திருக்கின்றனவே!
Nataraja on 10th day morning , Vengeeswaram Brahmotsavam
வடபழனி வேங்கீஸ்வரம் பங்குனி பிரம்மோற்சவம்
பத்தாம் நாள் காலை நடராஜர் உற்சவம்

ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்
இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும்
முயன்ற வினை
காட்டுவிப்பானும் இருவினைப்
பாசக்கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவனுண்டே
தில்லை அம்பலத்தே!

பொருள்: இவ்வுலகத்தினர் அனைவருக்கும் அமுது படைப்பவனும், மாயையில் அழுத்துவிப்பவனும், உலகை இயக்குபவனும், ஜீவாத்மாவின் வினைகளுகேற்ப அவர்களுக்கு உரிய பலனை வழங்கி ஆட்டுவிப்பவனும் ஆகி பஞ்ச கிருத்திய பாராயணனாய் ஆனந்த தாண்டவம் செய்கின்றார் தில்லை அம்பலத்தே ஐயன் நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு.


No comments: