Friday, June 22, 2007

Ani Uthiram

திருச்சிற்றம்பலம்

அம்பல கூத்தனின் ஆனி உத்திர தரிசனம்

தில்லை அம்பலம்:

பஞ்ச பூதத்தலங்களிலே ஆகாயத் தலமாக விளங்குவதும், சைவர்களுக்கு கோவில் என்ற அளவிலே அறியப்படுவதும், முக்தி தலங்களிலே தரிசிக்க முக்தி தருவதும், ஆதாரத் தலங்களிலே அநாஹத(இருதய) தலமாகவும், வியாக்ர பாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் பெரும்பற்ற புலியூராகவும் , பஞ்ச சபைகளிலே பொற்சபையாக விளங்குவதும், அம்மை இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியாக காட்சி தருவதும், நடு இரவுக்கு பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானமாகவும் விள்ங்கும் தலம் எது? இத்தகைய பெருமைகளை பெற்றிருக்கின்ற தலம் எது என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள், அத் தலம்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்­றும்

இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!

என்று அப்பர் பெருமானை அடுத்த பிறவியே வேண்டாம் என்று கூற வைத்த எம் பெருமான் சிவன், எண்டோள் வீசி நின்று ஆனந்த தாண்டவமாடும் , அன்னம் பாலிக்கும் தில்லை எனப்படும் சிதம்பரம் தான்" அந்தத் தலம்.

நடராஜ தத்துவம் :

இறைவன் அரூபமாக எங்கும் நிறைந்திருக்கின்றான் ஆகாயமாக அண்ட வெளியாக என்பதே சிதம்பர ரகசியம், இவ்வாறு அரூபமாக உள்ள இறைவனே அரூப ரூபமாக உலகமெங்கும் லிங்க வடிவிலே காட்சி தருகின்றார், அவரே இத்தலத்திலே ரூபமாக அதுவும் ஆடுகின்ற ரூபத்திலே நமக்கு அருட்காட்சி தருகின்றார். அண்ட சராசரங்களையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் எம் பெருமான் இங்கே தானே ஆடுபவராக அருட் காட்சி தருகின்றார்.



அல்லலென் செயும் மருவிணையென் செயுந்

தொல்லை வல்வினை தொந்த்ந்தான் என் செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனாருக்கு

எல்லையில்லாததோர் அடிமை பூண்டேனுக்கே

என்று அம்பல வாணனின் அழகிலே மயங்கிய பக்தர்கள் இயற்றியுள்ள பாடல்களை கொண்ட நூல்களை எல்லாம் சேர்த்தால் ஒரு நூலகத்தையே அமைத்து விடலாம் அவ்வளவு பாடல்கள் தில்லை நடன சபாபதியை பற்றி பாடப்பட்டுள்ளன. இறைவனுடைய பெருமைகளையெல்லாம் அந்த ஆயிரம் நாவு படைத்த ஆதிஷேஷனாலேயே முழுதும் கூற முடியாது, நான் அறிந்த சில செய்திகளை எம் ஐயனின் ஆனி உத்திர தரிசன சமயத்தின் போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்காகவே இந்தக் கட்டுரை.

நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் முதலில் தாருகாவனத்தில்தான் நடந்தது. . தாருகாவனத்து முனிவர்கள் கடவுள் கிடையாது தாங்கள் செய்கின்ற வேள்விகளினாலேயே எல்லாபலன்களும் கிட்டுகின்றன எனவே கடவுளை வணங்க வேண்டியதில்லை என்று இறுமாந்திருந்தனர். முனி பத்தினிகளும் தங்கள் கற்பின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அகந்தை கொண்ட முனிவர்களை அஞ்ஞானத்தை போக்க எம்பெருமான் சுந்தர மூர்த்தியாகவும்(பிக்ஷ‘டணர்), மஹா விஷ்ணு மோகினியாகவும் தாருகவனத்துக்கு சென்றனர் ஐயனின் அழகைக் கண்ட முனி பத்னிகள் மதி மயங்கி, தன்னிலை இழந்து அவர் பின்னே செல்ல தொடங்கினர், முனிவர்களும், மோகினியின் மாய அழகிலே ஈர்க்கப்பட்டு அவள் பின்னே சென்றனர். பின் தாங்கள் தோல்வி அடைந்ததை உண்ர்ந்த அவர்கள் ஒரு யாகம் நடத்தி பிக்ஷாடனரையும் , மோகினியையும் கொல்ல முதலில் புலியை அனுப்பினர், அதை தோலாக்கி இடையிலே அணிந்தார் எம்பெருமான், மானின் கொம்புகளை உடைத்து அதை சாந்தமாக்கி வலக்கையிலே தாங்கினார், மழுவை இடக்கையிலே ஏந்தினார், வேள்வி குண்டத்தில் இருந்து வந்த பாம்புகள் ஆபரணமாகின, முயலகன் என்ற பூதம் அடக்கப்பட்டு காலிலே மிதிக்கப்பட்டான். வேத மந்திரங்களே ஐயனின் பாத சிலம்புகள் ஆயின. பிறகு அந்த வேள்வியியே அழித்து அந்த தீயை கையிலே எந்தி முனிவர்களின் அகந்தையை வென்ற பிறகு முதன் முதலில் ஆனந்த தாண்டவம் ஆடினார் செம்பவள மேனி எம்பெருமான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்நிகழ்ச்சியே ஆனி உத்திர திருவிழாவின் போது எட்டாம் நாள் நிகழ்ச்சி பிக்ஷ‘டணர் கோலமாக நடைபெறுகின்றது.



ஓரு தடவை மஹா விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் போது புன் முறுவல் பூத்தார், அப்போது அவரை தரிசித்துக் கொண்டிருந்த முப்பத்து முக்கோடி தேவர்களும், ''பெருமானே தங்கள் புன்முறுவல் பூத்ததன் காரணம் என்ன''? என்று வினவ பெருமாளும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை எண்ணி மகிழ்ந்து யாம் புன்னகை புரிந்தோம் என்று பதிலளித்தார். இதைக் கேட்ட பெருமாளின் பாம்பணையாம் ஆதி ஷேஷன், எம்பெருமானே யானும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்க வேண்டும் அதற்குரிய உபாயத்தை என்று வேண்டினார். பின் விஷ்ணுவின் ஆலோசணைப்படி பூவுலகிலே வந்து தில்லை மரங்கள் நிறைந்திருந்த இச்சிதம்பரத்தில் தவம் செய்து வந்தார். இதைப் போலவே, இறைவனின் பூஜைக்காக விரைவில் வில்வ தளங்களை பறிக்க ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் கால்களை புலியின் கால்களைப் போல மாற்றிக் கொண்ட வியாக்ர பாதர் என்ற முனிவரும் தவம் செய்து வந்தார். அவர்கள் இருவருக்காகவும் வேண்டி எம் பெருமான் ஒரு தைப்பூச நந்நாளில் தனது ஆனந்த தாண்டவத்தை இருவருக்கும் காட்டி அருளினார். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி பின் தில்லையிலேயே இருந்து இன்றும் இத்தலத்தில் அவரை தரிசிப்பவர்களுக்கு முக்தி அளித்து வருகிறார்.





தில்லை காளியுடன் நடனப்போட்டியில் ஊர்த்துவ தாண்டவராக தனது காதிலிருந்து விழுந்த குண்டலத்தை தனது இடது காலால் தூக்கி மீண்டும் காதுக்கே திரும்பி கொண்டு வரும் நிலையில் வானத்தை நோக்கி காலை தூக்கி ஆட அது போல ஒரு ஆடவனின் முன்னிலையில் காளி ஆட முடியாமல் நிற்க, காளி தோல்வி அடைந்து ஊர் எல்லைக்கு சென்று விட ஐயன் இங்கேயே கோவில் கொண்டார் என்றோர் வரலாறும் உள்ளது.



ஓம் என்ற பிரணவத்தின் வடிவமே நடராஜர். மாயா மலத்தை ஓட்டி, கன்ம மலத்தை சுட்டு, ஆணவ மலத்தை அதன் வலி கெடுமாறு அழுத்தி, ஆன்மாக்களை அருளாலே மேலே தூக்கி ஆனந்தக்கடலிலே மூழ்கியிருக்கச் செய்வதே இறைவன் ஆடும் தாண்டவத்தின் கருத்தாகும். எம் ஐயனின் திரு உருவம் அவர் ஐந்தொழில்களையும் புரிவதை குறிக்கின்றது.

அம்பல வாணனின் ஆறு திருமுழுக்குகள்:

அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கதிபதியை

நித்தனை அம்மை சிவகாம சுந்தரி நேசனை எம்

கத்தனை பொன்னம்பலத்தாடும் ஐயனை காண

எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றவே - பட்டினத்தார்

பூலோக வாசிகளாகிய நம்முடைய ஒரு வருடமே தேவர்களுக்கு ஒரு நாள், தேவர்கள் செய்கின்ற ஆறு கால பூஜைதான் தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு நம் ஒரு வருடத்தில் நடைபெறும் ஆறு திருமுழுக்குகள் ஆகும். அவையாவன

1. உஷ்த் காலம் : , மார்கழி திருவாதிரை : அருணோதய காலம்

2. காலை சந்தி : மாசி வளர் பிறை சதுர்த்தசி : நண் பகல்

3. உச்சிக்காலம் : சித்திரை திருவோணம் : நண் பகல்

4. சாய ரட்சை : ஆனி உத்திரம் : அருணோதய காலம்

5.இரண்டாம் காலம் : ஆவணி வளர் பிறை சதுர்த்தசி : நண் பகல்

6. அர்த்த ஜாமம் : புரட்டாசி வளர் பிறை சதுர்த்தசி : நண் பகல்




இந்த ஆறு நாட்கள் திருமுழுக்களின் போது மட்டுமே நாம் மஞ்சாடும் மங்கை மணாளனை சிற்றம்பலத்தை விடுத்து வெளியே தரிசிக்க முடியும்.மற்ற நாட்கள் தில்லை கூத்தனின் திரு மேனிக்கு அபிஷேகம் கிடையாது, காலையிலும், மாலையிலும் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்க்கும், காலை சந்தி நேரத்தில் ரத்ன சபாபதிக்கும் தான் நித்ய அபிஷேகம் நடைபெறுகின்றது. . மார்கழித் திருவாதிரை மற்றும் ஆனி உத்திரம் இரண்டும் பத்து நாள் திருவிழாக்கள் ஆகும். மற்ற நான்கு திருமுழுக்களும் மற்ற சிவாவாலயங்களிலெல்லாம் நண் பகலில் நடை பெற்றாலும் திருமூலட்டானம் என்பதால் தில்லையில் மட்டும் சாய ரட்சை பொற் சபையில் நடைபெறுகின்றது.

ஆனி திருமஞ்சன திருவிழா :

ஆனி உத்திர திரு விழா முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது . இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது. ஸ்ரீ விநாயகர் மூஷ’க வாகனத்திலும், என் அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, எம் ஐயன் 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி சுந்தரர் கோலத்தில் கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்தி தங்க ரதத்தில் எழிற் கோலம் காட்டுகின்றார். இன்றைய தினம் சித்சபையிலே நடராஜப் பெருமான் மற்றும் சிவக்கம சுந்தரியின் முக தரிசனம் மட்டுமே கிடைக்கும். 9ம் நாள் காலை நம்மை எல்லாம் உய்விக்க எம் கோனும் எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கொண்டருளுகின்றார்.

ராஜ சபை என்னும் ஆயிரம் கால் மண்டபம்(Thousand Pillared Hall)

ஆனி உத்திரத்தன்று அருணோதய காலத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன எம் அய்யனுக்கும் அம்மைக்கும். அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம்து துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம் பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித் சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது. பின் தீர்த்த வாரி கண்டருளிய பஞ்ச மூர்த்த்’களுடன் ஆனி திருமஞ்சன மஹா தெரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே எம்பெருமானின் ஜடா முடியை நாம் காண இயலும் எம் ஐயனின் இத்திருக்கோலத்தைக் காண உண்மையிலேயே நம் கண்கள் மேலே பட்டினத்தடிகள் கூறியது போலே கோடி யுகங்கள் தவம் செய்திருக்க வேண்டும் . சடோப பூசனைகள் முடித்து "ஆனந்த தாண்டவத்துடன்" பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலைச்சுற்றி வலம் வந்து என் ஐயன் சிற்றம்பலத்திற்க்கு எழுந்தருளூகின்றார். தரிசனத்தை காண்பதற்க்கு கூடிம் மக்கள் கூட்ட்ம் தான் எத்தனை கோவிலின் உள்ளே நிற்பதற்க்கு கூட் இடம் இருக்காது, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே அம்மை சிவகாமி நேசணை வெளியே தரிசிக்க முடியும் என்பதால் அவ்வளவு கூட்டம். 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் ஆனி திருமஞ்சன மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது.



வில்லை வட்டப் படவாங்கி அவுணர் தம்

வல்லை வட்ட மதில் மூன்றுடன் மாய்த்தவன்

தில்லை வட்டந் திசை கை தொழுவார் வினை

ஒல்லை வட்டங் கடந்தோடுடல் உண்மையே

என்று அப்பர் பெருமான் கூறியது தில்லை திசை நோக்கி தொழுதாலே நம் வினைகளை எல்லாம் நீக்கும் எங்கள் பிரான் தானாக வெளியே வந்து அருட்காட்சி தரும் போது சென்று தரிசித்தால் நமக்கு எல்லா நன்மைகளைகளையும் வழங்காமல் விடுவாரா. எனவே கிளம்பி விட்டீர்களா ஐயனின் ஆனி உத்திர தரிசினத்தை காண.

திருச்சிற்றம்பலம்

* * * * * *

Tuesday, June 19, 2007

Natarajar 4

Normally six ablutions are done to Lord Nataraja during a year, which signify one day of devas(celestials). Also during Brahmotsavams in temples the 10th day early morning uthsavam(festival) is Natarajar uthsavam. These photos are taken during those times in temples. Arudra Darisanam photos will be uploded in December during 10 day Arudra Darisanam festival please do visit during that time.
அம்பலத்தாடும் ஐயனுக்கு வருடத்தில் ஆறு திருமுழுக்குகள். பூலோகத்தின் ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்கள் செய்யும் ஆறு கால பூசையே இந்த ஆறு திருமுழுக்குகள் என்பது ஐதீகம். மேலும் பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் காலை நடராஜர் உற்சவம். இச்சமயங்களில் எடுக்கப்பட்ட ஐயனின் சில அருட்தரிசனங்கள் இவை .
மாற்றறியாத செழும்பசும் பொன்னே
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
கூற்றறியாத பெருந்தவருள்ளக்
கோயிலிருந்த குணப்பெருங் குன்றே
வேற்றறி யாதசிற் றம்பலக்கனியே
விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே
சாற்றறி யாதவென் சாற்றுங் களித்தாய்
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
Ani uthiram Vengeeswaram (2006)
சிவ சிவ என்கிலர் தீவிணையாளர்
சிவ சிவ என்றிட தீவிணை மாளும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! ... திருமூலர்


Karaneeswaram Natarajar and Sivakami Ambal

Masi chathurthasi ablution, Vengeeswaram
(Natarajar with Ambal and Manikavasagar)
வேங்கீஸ்வரம் மாசி வளர் பிறை சதுர்த்தசி திருமுழுக்கு
ஐயன் அம்மை மற்றும் மாணிக்க வாசகர்
பிறவாதிருக்க வரம்தரல்
வேண்டும் பிறந்துவிட்டால்
இறவாதிருக்க மருந்துண்டு
காண் இது எப்படியோ
அறமார் புகழ்தில்லைஅம்பல
வாணர் அடிக்கமலம்
மறவாதிரு மனமே அதுதான்
நன் மருந்துனக்கே. ....பட்டினத்தார்

Ananda Thandava Nataraja Murthi

Siva kama Sundari
Ani Uthira darisanam , Vengeeswaram (2006)
வேங்கீஸ்வரம் ஆனி உத்திர தரிசனம்
தெய்வ சிதம்பர தேவா உன்
சித்தம் திரும்பிவிட்டால்
பொய்வைத்த சொப்பனமாம் மன்னர்
வாழ்வும் புவியுமெங்கே
மெய்வைத்த செல்வமெங்கே மண்ட
லீகர்தம் மேடைஎங்கே
கைவைத்த நாடக சாலைஎங்கே
இது கண்மயக்கே!
.....பட்டினத்தார்.
Sivananda valli


Natarajar Uthsavam ,Karaneeswaram, Saidapet.
சைதை காரணீஸ்வரம் சித்திரை பிரம்மோற்சவம்
பத்தாம் நாள் காலை நடராஜர் உற்சவம்.
அத்தனை முப்பத்து முக்கோடி
தேவர்க்கதிபதியை
நித்தனை அம்மை சிவகாம
சுந்தரி நேசனை எம்
கத்தனைப் பொன்னம்பலத்தாடும்
ஐயனைக் காணக் கண்கள்
எத்தனை கோடி யுகமோ
தவம் செய்திருக்கின்றனவே!
Nataraja on 10th day morning , Vengeeswaram Brahmotsavam
வடபழனி வேங்கீஸ்வரம் பங்குனி பிரம்மோற்சவம்
பத்தாம் நாள் காலை நடராஜர் உற்சவம்

ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்
இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும்
முயன்ற வினை
காட்டுவிப்பானும் இருவினைப்
பாசக்கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவனுண்டே
தில்லை அம்பலத்தே!

பொருள்: இவ்வுலகத்தினர் அனைவருக்கும் அமுது படைப்பவனும், மாயையில் அழுத்துவிப்பவனும், உலகை இயக்குபவனும், ஜீவாத்மாவின் வினைகளுகேற்ப அவர்களுக்கு உரிய பலனை வழங்கி ஆட்டுவிப்பவனும் ஆகி பஞ்ச கிருத்திய பாராயணனாய் ஆனந்த தாண்டவம் செய்கின்றார் தில்லை அம்பலத்தே ஐயன் நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு.


Saturday, June 16, 2007

Natarajar 3 (Chidambaram)

THE COSMIC DANCE OF SIVA AT CHIDAMBARAM

Though Lord Siva is worshipped mainly in the formless form of LINGAM , he is also worshipped in 64 different forms, foremost of which is the NATARAJA. Siva in a dancing pose is known the world over as Nataraja - the king of dances. His dance embodies layers of symbolism. His form denotes centuries old Hindu thought on the eternity of life in the universe. The belief that life is a part of the great rythematic process of creation and destruction of death and rebirth, sparked the imagination of the devoted ancient people. Their saints painted words pictures of abstract thought using the cosmic dance of Siva to enlighten their devotees. The sculptors produced arrested moments of motion in stone and Bronze. Especially the Chola bronzes are known world over for their exclusive workmanship.

As sung by saint Appar " His arched brows meeting at the center of His forehead, His shaped lips, His golden smile, His flowing hair, His coraline skin tone, with white ash all over His body , His golden raised dancing feet .... to see this beatific vision is the very purpose of life... nothing else is worth seeing." This great vision of my Lord can be had at Chidambaram the foremost temple for saivaits. Let us see about this temple and the legends associated with this temple and festivals conducted in this temple in this article.


Chidambaram also known as Thillai, as it was once abundant with thillai (mangrove) forest is the Akhasa (Space) sthala among the five Pancha Bootha Sthlams ( temples representing the the five elements of Earth,Water,Wind,Fire and Ether). Here Siva is worshipped as Akasha Linga -the Linga of Space!. It is one of the five Sabhas ( Dance Halls ) of Lord Siva known as Panja sabhais. As its roof is plated with Golden tiles, this ambalm is called Kanaka Sabhai (Golden Hall) or Ponnambalam. The legend is that whoever witnesses the dance of bliss of Lord Shiva in this sacred place attains salvation so this place one of the seven mukthi sthalams. A lot of significance is associated with this temple and these are some of them.
The myth of Nataraja:
This dancing form of my Lord has inspired a billion words in saints, poets, singers, scholars, travelers and historians. In tamil alone the literature pertaining to Shiva in Chidambaram can fill an entire library. It is not surprising that to interpret the myth and mysticism of the dance of Nataraja to the world, writers from Ananda Coomaraswamy to the present day have delved into endless avenues of research and scholarship. Ananda Coomaraswamy writes " In the night of Brahman the Nature is inert, and cannot dance till Siva wills it. He rises from His rapture, and dancing sends through the inert matter pulsating waves of awakening sound and lo! matter also dances, appearing as a Glory round Him. Dancing, He sustains its manifold phenomena. In the fullness of time, still dancing, He destroys all forms and names by fire and gives rest."
The dance of Siva symbolizes the cosmic cycles of creation and destruction, birth and death.. But also reminds us of that the manifold forms in the world are Maya-not fundamental, but illusory and always keep changing as He keeps creating and destroying what He creates in an endless flow as He dances. Thus the dance of Siva is the dance of the Universe.
Each aspect of Nataraja is significant. The circular frame is the aura, while His hair flies in all directions. The whole universe is His body and the whirling swastika the life force. without His vibration the world cannot be sustained. All sound is music to His dance. All ornaments are all the celestial bodies and the beauty of nature, while the demon underfoot signifies the suppression of pride. The sound of His steps and the Damaru in one hand are the sounds of creation. The deer indicates purity and the fire the alchemy and transmutation. The hand pointing downwards shows the way to salvation and the raised foot is salvation itself. The whole signifies "OMkaram".

The purpose of the celestial never ending dance of Siva is further elaborated in Thirumoolar's Thirumanthiram. The dancer is called Koothan. The represents His five activities- Panchakritya. They are Shrishti (creation), Sthithi (preservation), samkara (destruction), tirobhava (illussion), Anugraha (salvation) . The drum held in the right upper hand, the abhaya right hand, the fire held in the left upper hand, the foot held aloft and fourth hand points to the foot which crushes the demon represent these five activities of my Lord.

The legends assocoated with temple:
The first legend of origin of Nataraja is that the rishis of Dharuka vanam questioned the relevance of God, arguing that karma (action) was everything., only action mattered. To remove their agnyana (ignorance), Siva took the form of a beautiful man-Sundaramoorthy and came as an alms taker Bikshadana along with Maha Vishnu who took the form of Mohini (enchantress) and came to the village. Enchanted all the woman followed Sundaramurthy and Lord Vishnu enticed the rishis with his Mohini form. The rishis, enraged that they had been fooled , conducted an Atharva Vedic "Homa" to destroy to destroy Siva. From the fire first came the demon Muyalagan, the cosmic dance of eternal bliss( Ananda Thandavam) began. Muyalagan was trampled under the foot. The snakes from the fire became Siva's garlands and ornaments. A deer with huge antlers was made small and held in one hand. A tiger was skinned and the skin became His waist cloth while the fire itself was captured in one hand. The sound of the mantras became His anklets and became beneficial. Thus Lord Siva and Vishnu taught the rishis a lesson. This act is enacted on the eighth day of the Annual festival held in this temple as Bikshadanar Utsavam.

The second legend is that Adhi Shesha the snake bed of Maha Vishnu saw Vishnu smiling one day and asked Him the reason . Vishnu replied that He visualised the Ananda Thandavam of Lord Siva at Dharukavanam and so He smiled. Adhi Sesha also wanted to have the vision of the Thandava. Vishnu advised him to penance at thillai. Adhi sesha came as saint Patanjali and was doing penance here. Another saint names Viyagra pada, he is so called because he asked for the legs of tiger with powerful claws which will allow him to climb the trees swiftly so that he can fetch flowers for the Lord was also doing penance at thillai. Pleased by the devotion of both the saints Lord Siva performed His Ananda Thandavam here and as requested by the saints stayed here at this sacred spot where the dance of Him was seen by the saints for the benefit of mankind.

The third legend is the dance duel between Siva and Kali. Kali a fierce form of Parvathi was sent to kill two demons who were troubling the people. Kali went to war with the demons. Blood flowed from the demons and the demons multiplied from the each drop of blood that touched the ground. Kali turned to Shiva. He gave Her a vessel (kapalam) to collect the blood. Not quite knowing what to do to prevent the blood from spilling , She drank the lot. Demonic blood, that transformed Her and she went on rampage attacking everything in sight. The Gods then appealed to Siva. You must come, they said to humble Kali. Kali on seeing Siva called for a dance duel. The two danced like thunder and lightning. Kali matched Siva step for step. He then let fall His left ear ring to the ground, and picked it up with His toe, tossed it up high in the air, and eventually restored to His ear. With that single breath-taking movement when the kinetics of dance reached an ultimate crescendo, Kali was humbled, because she could not match it. Tamed thus Kali was banished to a temple outside the forest and Nataraja stayed on there with Ananda Thandavam pose.

Six ablutions to Lord Nataraja:
What is one year for us human beings is one day for celestials. The six poojas they do in their one day is observed in this temple with abhisekhams (ablution) to Nataraja. The days in which these are done are
1. Margazhi ( Dec-Jan) on Thiruvaathirai asterix. - early morning Pooja
2.Masi ( Feb - Mar) day before full moon day - morning pooja
3. Chithirai (Apr-May) on Thiruvonam asterix - noon pooja
4. Ani (Jun-Jul) on uthiram asterix - evening pooja.
5.Avani (Aug- Sep) day before full moon day - second time pooja
6.Purattasi (Sep-Oct) day before full moon day - night pooja
.

Of these six days on days 2,3,5,6, . Lord and Mother are brought out of the sanctum sanctorum - Chit sabhai (Hall of truth) and ablutions are done in the evenings in the ponnambalam (Hall of Gold), the front portion and after that special poojas are done. Abishekams are not done daily to Nataraja and Mother but only to crystal Linga in the morning and evening and during noon to Rathna Sabapathy (Ruby Nataraja).

Ani Thirumanjana Darishanam & Arudra Dharisanam
Whereas 1 and 4 ten day festivals and Lord Nataraja and Mother Sivakama Sundari leave the sanctum sanctorum and give darshan to their devotees outside. The festival starts with hoisting of the Rishaba flag on the first day. In all the ten days procession of Pancha Murthis (five Gods) is held in the evening. Lord Siva as Somaskanda gives darshan in different mounts. Lord Ganesha in mooshikam(Rat) mount , Sivakami in swan mount , Lord Muruga along with His consorts Valli and Deva Sena in Peacock and Sandikeshwara in Rishabam(Bull) mount. The eighth day is celebrated as Bikshadanar Utsavam. The ninth day is Rathotshavam (Chariot) Lord Nataraja and Mother Sivakami leave their sanctum sanctorum and come out to give darshan to their devotees. Pancha Murthis give darshan in chariots and on the 10th day the Darishanam day early morning (before sunrise) He has abhisekham (special ablutions) in the front court of the thousand pillared hall also called Raja sabhai ( Hall of the King). We should have been blessed to see the ablutions to the Lord and Mother on that day. Then He gives Royal audience to His devotees at noon time inside the hall, He is adorned with the best of the Jewels and beautiful flower garlands befitting the Lord of the Universe. Specaial poojas are also done in the Hall. In the evening He returns to His sanctum sanctorum ( Sith sabhai- Hall of truth) with dance of bliss. Only on these two days we can have the darshan of Lord outside His sanctum. Lakhs of people congregate on these days in Chidambaram to have the Darshan of the Lord. These days are called Aruthra Darishanam in the month of Margazhi and Ani Thirumanjana darshanam the month of Ani. Let us visit Chidambaram and have the darshan of Lord Nataraja and attain salvation.

Wednesday, June 13, 2007

Natarajar 2 (Chidambaram)

தில்லை சிற்றம்பலம்


ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்றாட
பாதி மதி ஆட பாரண்டம் மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே




என்றபடி எம் ஐயன் ஆனந்த தாண்டவம் ஆடிய தலம் தான் தில்லைவனம் என்னும் சிதம்பரம்.சைவர்களுக்கு கோவில் என்றளவிலே அறியப்படுவது தில்லை. இங்கே எம்பிரான் எண்டோள் வீசி ஆனந்த திருநடனக் காட்சி தருகின்றார். ஆதாரத் தலங்களுள் அநாதகத் தலம் (இருதயம்) இது. நமது இதயத்தில் எப்போதும் அந்த இறைவன் ஆனந்த திருநடனம் புரிய வேண்டும் உணர்த்தும் விதமாக. எம் பெருமான் இத்தலத்திலே பிரமத்தின் ஸ்வருபமாக , ஹ’ருதய புண்டரீக வாச தகாரகாயத் தெய்வமாக , அண்ட பிண்ட பிரபஞ்ச இயக்க கருத்தாவாக, ஐந்தொழில் மூலமாக, யோகநெறி கண்ட இயங்கு பேரொளியாக சச்சிதானந்த ஸ்வரூபமாக ஆனந்த நடராசராக அம்மை சிவகாம வல்லியுடன் அருட் காட்சி தருகின்றார். பூலோக கயிலாயமான இத்தலத்திற்குத்தான் எத்தனை நாமங்கள் அவற்றுள் சில சத் , புரம், சபா , புண்டரீகம், சத்தியம், மகத்விவிக்தம், அற்புதம், குகை, ஞானாமிர்தம், பரவியோமம், பரமாலயம்,சத்தம், சத்திய மாய தளம், கோவில், தில்லை வனம், புண்டரீக வீடு, இவையெல்லாம் பல்வேறு உபநிடதங்கள் தில்லையை குறிப்பிடும் நாமங்கள். சிதம்பரம், புலியூர், பெரும்பற்றப் புலியூர், தென்புலியூர், புலீச்சுரம். மன்று, அம்பலம், சத்து, உம்பர், இரண்யமய கோசம், ஞான சுகோதயம், சிவாலயம், பரப்பிரமம் என்பன காரணப் பெயர்கள்.
ஆனந்த கூத்தாடும் ஒர் நாமம் ஓர் உருவம் இல்லாத எம் ஐயனுக்குத்தான் இத்தலத்திலே எத்தனை திருநாமங்கள் அவைகளுள் சில : தேவர்கள் தேவன், நடராஜர், நிருத்தர், நிருத்தரசர், கருமூலகரர், ஆனந்த ஒளி, நடமாடும் திருவாளர், ஆடவல்லான், நட்டம் பயின்றாடும் நாதன், கூத்தன், ஞானச் செவ்வொளி, அம்பல வாணன், சபா நாயகர், அம்பலத்தரசர், சித்சபேசன், நடன சபாபதி, நடன சிகாமணி, பிஞ்ஞகன். அம்மை : உமையம்மை. சிவகாமி, சிவகாம சுந்தரி, சிவானந்த வல்லி என்றும் அழைக்கப்ப்படுகின்றாள். இத்தலத்தின் தீர்த்தங்கள் : சிவ கங்கை, குய்ய தீர்த்தம்(பாசமறுத்த துறை), புலிமடு, வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி,பிரும்ம தீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல், பரமானந்த கூபம் ஆகியவையாகும் . தல விருட்சம் : தில்லை
மன்றில் நின்றாடும் எம்பெருமானின் பஞ்ச சபைகளுள் இது கனக சபை (பொன்னம்பலம்) ஆகும். இந்த கனக சபையிலேயே ஐந்து சபைகள் உள்ளன அவையாவன 1. ஸ்ரீ ஆனந்த நடராஜரும் பராசக்தி வடிவமும் ஆனந்த கூத்தாடும் சித்சபை (ஞான சபை) , 2. அதற்கு முன் உள்ள பொற்சபை (கனக சபை) இதிலே தான் வருடத்தில் நான்கு முறை மாலை வேளைகளில் ஐயனும் அம்மையும் அபிஷேகம் கண்டருளுகின்றனர். 3. எம்பெருமான் காளியுடன் போட்டியிட்டு ஊர்த்துவ தாண்டவமாடிய நிருத்த சபை (எதிரம்பலம்), 4.ஆருத்ரா தரிசனத்தன்றும், ஆனி உத்திரத்தன்றும் அபிஷேகம் கண்டருளி உலகுக்கே ராஜாவாக எம்பெருமான் காட்சி தரும் ராஜ சபை எனும் ஆயிரங்கால் மண்டபம். 5. பேரம்பலம் எனப்படும் தேவ சபை தேவர்கள் வந்து பெருமாளைப் தரிசித்து போற்றும் இடம்.


பஞ்சபூதத்தலங்களிலே இது ஆகாயத் தலம். ஆதாரத்தலங்களுள் அநாதகத்தலம் (இருதயம்). புலிக்கால் முனிவர் வழிபட்ட பஞ்சபுலியூர்களிலே இது பெரும்பற்ற புலியூர். முக்தி தலங்களிலே தரிசிக்க முக்தி அளிக்கும் தலம். பதஞ்சலி முனிவர் தன் ஆயிரம் நாவால் ஆயிரம் மாணவர்களுக்கு உபதேசித்த தலம். அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள், ஓவியங்கள் நிறைந்த தலம். இத்தலத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை கண்டு உணர ஒரு ஆயுள் போதாது.



தல ஆகமம் - முகுடாகமம், திருமூலட்டானம் என்றும் இத்தலம் வழங்கப்படுகின்றது ஏனென்றால் அர்த்த ஜாம பூஜைக்குப் பின் அனைத்து தலங்களின் சக்திகளும் லிங்க ரூபமாக உள்ள திருமூலட்டநாதரிடத்தில் வந்து ஒடுங்குகின்றன.சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது இத்தலம். 108 வைணவ திவ்ய தேசங்களுல் தில்லை சித்திரகூடமும் ஒன்று. தாருகாவனத்திலே எம்பெருமான் ஆடிய ஆனந்த நடனத்தை இன்றும் போக சயனத்திலே, கோவிந்த ராஜப்பெருமாளாக இன்றும் ஸ்ரீ மஹா விஷ்ணு ரசித்துக் கொண்டிருக்கிறார். திருமங்கை மன்னரும் இதை மூவாயிர நான் மறையனார் முறையால் வணங்க "தேவாதி தேவன் விளங்கும் தில்லை சித்திரக் கூடம் என்று பாடுகின்றார். ஒரே நேரத்தில் நடராஜப் பெருமானையும், கோவிந்த ராஜப்பெருமாளையும் தரிசிக்கும் வண்ணம் இரு சன்னிதிகளூம் தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பு. கோவிந்த ராஜரின் சபைக்கும் பொன் கூரை வேயப்பட்டுள்ளது.




இத்தலத்தில் வழிபட்ட அருளாளர்களுள் முதன்மையானவர்கள் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆவர். சிவபெருமானை வழிபட்டாலே வீடு பேறு கிட்டும் என்றறிந்த மத்தியந்த முனிவரின் மகன் இளமையிலேயே தில்லை வந்து சிவலிங்கம் நிறுவி வழிபட்டு வர, வண்டெச்சில் படும் முன்னே மலர் பறிக்க ஏதுவாக புலிக்கால்களும் புலி நகமும் பெற்றவர் வியாக்ரபாதர். ஆலமுண்ட கண்டனின் ஆனந்த நடனத்தை காண வேண்டுமென்ற ஆசையினால் பதஞ்சலியாக வந்து தில்லை வனத்திலே தவம் செய்தவர் ஆயிரம் நாவு படைத்த மஹா விஷ்ணுவின் படுக்கையாம் ஆதி சேஷன் எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் காண பதஞ்சலியாக வந்து தவம் செய்தார். இவர்கள் இருவரின் தவத்திற்கு மகிழ்ந்தே அந்த பசுபதி இந்த தில்லைத் தலத்திலே ஒரு தைப் பூச நன்னாளிலே தனது ஆனந்த நடனத்தை இருவருக்கும் காட்டியருளி அவர்கள் இருவரின் வேண்டுகோளுக்கிணங்கி ந'ம் எல்லோரும் உய்ய பொன்னம்பலம் கொண்டருளினார். தில்லை வாழ் அந்தணர்கள் சிவகணங்களே. அம்மையின் ஞானப்பால் உண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தரும், நீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்களை அவ்வாறே கண்டு வணங்கினர்.


என்று வந்தாய் என்னும் எம்பெருமான் திருக்குறிப்பைப் புலப்படுத்தி தில்லையில் பல பதிகங்களைப்பாடிய அப்பர் தில்லை நகரை அங்கப்பிரதட்சணம் செய்த தலம். எம்பெருமானே அசரீரியாக வண்தொண்டர் சுந்தருரருக்கு " தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் " என்று அடி எடுத்துக் கொடுத்த தலம் . அருள் மணிவாசகர் திருவாசகம் 600ம், திருக்கோவையார் 400ம் " வாதாவூரன் மொழி எழுதிய சிற்றம்பலமுடையான் கையெழுத்து " என்று எழுதி இறைவனே கைசாத்திட்ட பெருமை உடையது. "நான் எழுதிய இந்த தமிழ் நூலின் சாரம் எம்பெருமானே என்று கூறி தைப்பூச நன்னாளில் ஐயனுடன் மணிவாசகர் கலந்த தலம். சேரமான் பெருமாளுக்கு நாளும் சிலம்பொலி காட்டிய தலம் அவர் பொன்வண்ணத்தந்தாதி இயற்றிய தலம். தொண்டர் பெருமை பாட சேக்கிழாருக்கு " உலகெலாம்" என்று அடி எடுத்துக் கொடுத்த தலம். " எம்மையைத் தீண்டுவையோ திருநீலகண்டம் என்றவரை ஆட்கொள்ள வேண்டி சிவ கங்கை குளத்தில் மூழக வைத்து இளமையாக்கிய தலம். திருநாளைப்போவாரை தீக்குழியில் இறக்கி அந்தணராக்கி ஆட்கொண்ட தலம். உய்ய வந்த தேவ நாயனார் தாம் எழுதிய 'திருவுந்தியார்' என்ற நூலினை கோவில் கல் யாணை அருகே வைக்க அந்த கல் யாணை அந்நூலை படியில் வைக்க திருக்களிற்றுப்படியார் எனப் புகழ் பெற்ற தலம். கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியாருக்காக கொடியேறி அவர் கொடிக்கவி பாடிய தலம். ஆதி சங்கரருக்கு கேனோபநிடதத்தில் ஏற்பட்ட ஐயத்தினை எம் அம்மை சிவானந்த வல்லி தீர்த்தருளிய தலம். குமரகுருபரர் தம் அருள் வாக்கினை வெளிப்படுத்தி தமிழ் இலக்கிய தொண்டு புரிய அருளிய தலம். இராம லிங்க வள்ளலார் அம்பலத்தரசை ஆடையிலே தனை மணந்த மணவாளனாக பாவித்து வணங்கி பல அருட் பாடல்கள் இயற்றிய தலம். சேந்தனார் பல்லாண்டு பாட நின்ற திருத்தேர் ஓடிய தலம். மாணிக்க வாசகர், திருநாளைப்போவார் நாயனார், கூற்றுவ நாயனார்,கோச்செங்கணான், கணம் புல்ல நாயனார், மறை ஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர் முக்தி அடைந்த தலம்.





ஊர் நடுவே நான்கு ஒழுங்கான அகலமான தேர் வீதிகளுடன் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இக்கோவில். கோவில் தெற்கு வடக்காக நீண்டிருக்கிறது. —ந்டிதுயர்ந்த கோவில் மதில்களை மூன்றாம் குலோத்துஙக சோழன், மதுரை வீரப்ப நாயக்கர், பச்சையப்ப முதலியார் முதலியோர்களால் கட்டப்பட்டுள்ளன. கலையழகு நிறைந்திருக்கும் இத்திருக்கோவிலுக்கு ஐந்து பிரகாரங்கள் நான்கு கோபுரங்கள், ஒவ்வொரு கோபுர வழியாகவும் சைவ சமயக் குரவர்கள் நால்வரும் அம்பலக் கூத்தனின் அருட்தரிசனம் காண வந்தனர். எனவே அந்தந்த கோபுர வாயில்கள் அவர்கள் பெயரிட்டு அழைக்கப்படுகின்றான. இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம் வழியாக வந்து வழிபட்டவர் திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர். சொக்கžயன் என்னும் பல்லவ மன்னன் கட்டிய தெற்கு வாசல் வழியாக வந்து வழிபட்டவர் ஞான சம்பந்தப் பெருமான். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று பாடிய அப்பர் பெருமான் வந்த மேற்கு கோபுர வாயிலைக் கட்டியவர் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன். வண்தொண்டராம் சுந்தரர் வந்த வாயில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட வடக்கு வாயில். பரதக்கலையின் கரணங்களை விளக்கும் சிற்பங்களைக் கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களிலும் ஆயிரங்கால் மண்டபத்திதிலும் காணலாம்.






கிழக்கு வாயில் வழியே நாம் நுழைந்து வெளிப் பிரகாரத்தில் வலம் வந்தால் நெடிதுயர்ந்த மதிலும் மதிலின் மேல் நந்தியெம்பெருமான் அமர்ந்து காவல் செய்யும் அழகையும், மதிலின் உட்பகுதிகளிலில் இரு அடுக்ககாக தூண்கள் நிறைந்த மண்டபங்களாக அமைக்கப்பட்டு இருப்பதை கண்டு களிப்புறலாம். இத்திருச்சுற்றை வலம் வந்தால் சுதையால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நந்தியெம்பெருமானை நான்கு திசைகளிலும் கண்டு வணங்கலாம். வடக்கு பிரகாரத்தில் சிவகங்கைக் குளமும், அந்த சிவகங்கை குளக்க்கரையிலே சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி நின்ற கோலத்தில் எம் அம்மை சிவகாம சுந்தரி திருகாமக் கோட்ட பெரிய நாச்சியாராக கோவில் கொண்டிருக்கும் சிவகாமக் கோட்டம் என்றழைக்கப்படும்
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரம்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெடப் புகலியர்ககோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி

என்று உமாபதி சிவாச்சாரியாரல் போற்றப்பட்ட சிவகாமியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அம்மையின் திருக்கோவிலின் முன்மண்டபத்தின் கூரையில் எழில் விளங்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சித்ரகுபதனுக்கு ஒரு சன்னதி திருச்சுற்றில் உள்ளது. அம்மன் கோவிலை வலம் வரும் போது பரத நாட்டியத்தின் பல் வேறு கரணங்களை கவினுற சிற்பங்களாக செதுக்கியுள்ளதை கண்டு களிக்கலாம். சிம்மவர்மன், வியாக்ரப'தர் ஆணைப்படி தீர்த்தங்களுக்குள் நாயகமானதான சிவகங்கையில் மூழ்கி எழில் பெற்றான். பின் இரணியவர்மன் என்னும் பெயர் பெற்றான். திருநீல கண்டர் மூழ்கி எழுந்து இளமை பெற்றதும் இத்திருக்குளத்தில்தான். இத்திருக்குளத்தில் மூழ்கி நீராடினால் குட்டம் முதலான தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.





வ கங்கை திருக்குளம் அம்மனை வணங்கி வெளி வந்து சிவகங்கை குளத்தைக் கடந்தால் ராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது இதன் முகப்பிலேதான் அம்மையும் அப்பனும் தேரை விட்டு இறங்கி வந்து அமர்ந்து ஆனி உத்திரத்தின் போதும், மார்கழி திருவாதிரையின் போதும் உதயாதி நாழிகையில் பிரம்ம முகூர்த்தத்தில் அபிஷேகம் கொண்டருளுகின்றனர். பின்னர் உலகுக்கே ராஜாவாக திருவாபரண தரிசனமும் தந்து, ஆனந்த தாண்டவமிட்டு சித் சபைக்கு திரும்புகின்றனர். இந்த ராஜ சபையிலே தான் பதஞ்சலி தந்து ஆயிரம் நாவால் ஆயிரம் žடர்களுக்கு ஆகமம் போதித்தார், சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை அரங்கேற்றினார், திருமூலர், மணிவாசகர். உமாபதி சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோர் தத்தம் நூலை அரங்கேற்றியதும் இந்த ராஜ சபையிலேதான். ஆயிரங்கால் மண்டபத்தின் உட்கூரையிலும் தில்லையின் தல வரலாறு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இராஜ சபையின் முகப்பு யானைகள் தேரை இழுப்பது போன்று சக்கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
உள் பிரகாரத்தில் ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையார் சந்நிதி, திருமூலட்டானம் , இங்கே எம் ஐயன் அருவுருமாக லிங்கமாக எழுந்தருளியுள்ளார் ஆதி நாயகர் என்ற திருநாமம். திருமூலட்டானத்தை வலம் வரும் போது மேற் கூரையிலே எம் ஐயனின் 64 மூர்த்தங்களையும் அற்புதமாக ஓவியமாக வரைந் துள்ளதைக் கண்டு களிக்கலாம். இதற்கு அடுத்த சந்நிதி ஆலமர் கடவுள் சன்னதி ஆகும். பின் யாக சாலையை கண்டு வணங்கி நிருத்த சபையை அடையலாம். அழகிய சிறிய சிற்பங்களை தூண்களிலே தாங்கி நிற்கும் இந்த எதிரம்பலத்திலே எம் ஐயன் காளியை நடனப் போட்டியிலே வென்ற போது தனது காலை உயர்த்தி தனது காதில் உள்ள குண்டலத்தை கழற்றும் விதமான ஊர்த்துவ தாண்டவ கோலத்திலும், நரசிம்மரின் கோபத்தை சாந்தப்படுத்திய சரப மூர்த்தியாகவும் கண்டு வணங்கலாம். நிருத்த சபையின் ஒரு தூணிலே செதுக்கப்பட்டுள்ள மார்க்கண்டனுக்காக எம் ஐயன் எமனையே காலால் உதைக்கும் சிற்பம் மிகவும் அரிய ஒன்று. பாண்டிய நாயகம் என்னும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தமுருகன் கோவிலும், மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரர் சந்நிதியும், திருமுறைக்காய்பிள்ளையார் சன்னதி இவர் தான் அபய குல சேகரன் என்னும் இராஜராஜனின் தூண்டுதலால் நம்பியாண்டார் நம்பி மூலம் சைவ பொக்கிஷங்களாம் தேவாரத் திருமுறைகள் பூட்டிய அறையிலிருந்து நாம் எல்லோரும் உய்ய வெளிவரக் காரணமானவர். மற்றும் தேவர்கள் எல்லாம் வந்து எம்பெருமானை வணங்கும் தேவ சபை (பேரம்பலம்), நூற்றுக்கால் மண்டபம் , கொடி மரம் முதலியவை இச்சுற்றில் உள்ளன.



எம்பெருமான் எண்டோள் வீசி நின்றாடும் சித் சபை மற்றும் கனக சபை இரண்டும் அம்பல வடிவில் அமைந்துள்ளன. சித் என்றால் உண்மை, அந்த இறைவனே நமக்கு சதம் அவனுடைய குஞ்சித பாதத்தை பற்றினால் நமக்கு இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுதலை என்ற உண்மையை நமக்கு உணர்த்தும் விதமாக ஐம்தொழில்களையும் செய்யும் எம் ஐயன் அம்மை சிவகாம சுந்தரியுடன் ஆனந்த தாண்டவக்கோலத்தில் அருட் காட்சி தருகின்றார். அம்பலத்திற்கு ஒன்பது கலசங்கள் அவை ஒன்பது சக்திகளைக் குறிக்கின்றன. அம்பலத்தின் 18 தூண்கள் 18 புராணங்களை குறிக்கின்றது. 64 சந்தன கை மரங்கள் 64 கலைகளை குறிக்கின்றன. 2600 சிவாய நம என்னும் திருவைந்தெழுத்து பொறித்து செம்பொன்னால் செய்யப்பட்ட ஓடுகள் நாம் ஒரு நாளில் விடும் மூச்சு எண்ணிக்கையை குறிப்பிடுகின்றன. இவ்வோடுகளை பிணைக்கும் 76000 ஆணிகள் நமது சுவாசத்திற்கு உதவும் நாடிகளை குறிப்பிடுகின்றன. 224 அடைப்புப் பலகைகள் 224 எலும்புகளைக் குறிக்கின்றான. எவ்வாறு சுவாசம், நாடி, நரம்புகள் முதலியன இதயத்துடன் சம்பத்தப்பட்டுள்ளாதோ பூமி ஆகிய விராட புருஷனின் இருதய மாக விளங்கும் தில்லையின் நாயகன் நமது இதயத்ஹ்டிலும் உறைகிறான் என்பதை சூட்சமமாக விளக்குகின்றது இப்பொன்னம்பலம். பொன்னம்பலத்திலே கூத்தன் ஆட அண்டங்கள் ஆடுகின்றன. அவன் ஆடாது இருந்தால் அண்டங்கள் அனைத்தும் கலங்கிப் போகும், ஆட்டம் கண்டு விடும். ஆனந்த நடராச மூர்த்தியின் மூர்த்தம் ஸ்ரீ சக்கர வடிவிலும், ஓம் பிரணவத்தையும், நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது. வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறித்து


தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு
சாற்றிடும் அங்கையிலே சங்காரம்- ஊற்றமாய்
ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு
என்றபடி




பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவ கோலத்தில் தெற்கு நோக்கி நமக்கு அருட்காட்சி தருகின்றார். திருவடிவே பஞ்ட்சாட்சரம் திருப்பாதம் - ந , உதரம் -ம , தோள் - சி, முகம் - வ , திருமுடி -ய எனலாம். உடுக்கை - சி, வீசிய கரம் -வ அபய கரம் - ய , அக்னி - ந, முயலகன் - ம எனலாம். வலப்பக்கம் - சிவாய , இடப்பக்கம் - நம எனலாம். அகிலத்தை சிவமாகக் கொண்டால் கதிரவக் சக்தியாகின்றது. அணுவின் தத்துவமும் அண்டங்களின் தத்துவமும் அம்பலவாணரின் ஆனந்த க்கூத்தில் வைத்து விளக்கப்பட்டுள்ளன. திருவாசி ஓன் என்னும் பிரணவம். சடைமுடி- ஞானம். சடை விரித்தாடுவது ஞானத்தை வழங்குவதற்காக. வீசிய கரம் மாயையை உதறித்தள்ளுவதையும் ஊன்றிய பாதம் மலத்தினை நீக்குவதையுன், தூக்கிய திருவடி அருளை அளித்து ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் அழுத்துவதையும் குறிக்கும். ஒரு கையில் உடுக்கை ஒரு கையில் சிவந்த அக்னி ஒலி, ஓளிகளின் முக்கியத்தை குறிக்கின்றது. அதுவே துடிப்பு இதையே திருமூலர்


எங்கும் திருமேனி எங்கும் சிவ சக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம்
எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் விளையாட்டதே
என்றார்.
அம்பலமாவது அகில சராசரம். இது போல எம் ஐயனின் வடிவத்திற்கு ஆயிரம் விளக்கங்கள் தரலாம் நாம். சிற்ப சாஸ்திர முறைப்படி நவக்கிரகண்க்களை இணைத்து 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் 27 புள்ளிகளைக் கொண்டு பஞ்ச லோகத்தால், பஞ்ச பூதங்களை குறிக்கும் வண்ணம் எம் ஐயனின் சிலை வடிக்கப்படுகின்றது. பஞ்ச பூதத் தத்துவராகவும் எம் ஐயன் விளங்குகின்றார். மூக்கு காற்றையும் , முகம் பூமியையும், நெற்றிக்கண அக்னியையும், முகத்தின் காந்தி ஆகாயத்தையும், விரி சடை நீரையும் குறிக்கின்றது. 6 முக்கோணங்கள் கொண்ட சக்கரம் அல்லது சிவ சக்தி ஐக்யமான பிந்துவையும், அதைச் சுற்றி விளங்கும் 43 முக்கோணங்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ சக்ர வடிவமாக அமைந்துள்ளது ஐயனின் திரூஉருவம்.


நடராஜ மூர்த்தியின் திரூருவத்தில் சிவ பெருமானின் அனைத்து மூர்த்தங்களின் அம்சமும் உள்ளது. பிரம்ம கபாலம், பிரம்ம கபால மாலை - பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்பதையும், கூர்ம அவதார ஆமையின் ஓடு, வராக அவதாரத்தின் பன்றி பல் , வாமனரின் எலும்புகள், நரசிம்மரின் குருதித்தோல், திருமாலின் திருக்கண்களாகிய தாமரைகள், சூரியனின் பற்கள் ஆகியவற்றை தரித்திருப்பது அந்தந்த மூர்த்தியின் அம்சம். கங்காதரர் மற்றும் ஜடா முடி இவரின் யோகினம்சத்திஅயும். திங்கள் சந்திரசேகர அம்சம், தக்ஷன் யாகம் அழிப்பு முதலியவற்றை குறிக்கின்றது. தோடும் குண்டலமும் அர்த்த நாரீஸ்வர அம்சத்தையும், மயிற்பீலி கிருதார்சுன அம்சத்தையும், துடி ஓங்கார நாதம், ஐம்பூத அக்னி நிலை, அபய ஹஸ்தம் அனுக்கிரக மூர்த்தி அம்சம் , கஜ சம்ஹார, கால சம்ஹார, அந்தகாசுர சம்ஹார அம்சம் முயலகன் வீரட்ட நிலை, ஸ்தித பாதம் பதி நிலை, குஞ்சித பாதம் அருள் நிலை, கஜ ஹஸ்தம் சுட்டு நிலை. கொவ்வை குமிண் சிரிப்பு திரிபுர சம்ஹார மூர்த்தி அம்சம், அரவணிகள் குண்டலினி சக்தி. அருகும், எருக்கும், ஊமத்தம் பூவும் முடியிற்கொண்டு அறிவின் நுணுக்கம், அறிவின் விளக்கம், விருப்பு, வெறுப்பு நீங்கிய தன்மை என்ற மூன்றுக்கும் விளக்கமாக இலங்குகிறார்.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்று அப்பர் பெருமான் பாடிய படி ,அகிலத்தை எல்லாம் ஆட்டுவிக்கும் அம்பலவாணருக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள் , தேவர்கள் தங்களுடைய ஒரு நாளான நமது பூலோகத்தின் ஒரு வருடத்தில் செய்யும் ஆறு கால பூசையே இந்த ஆறு திருமுழுக்குகள். அவை


சித்திரை ஓணமும், žரானி யுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாளும் - பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீ சரபி டேக தினமாம்
.
என்றபடி சித்திரை திருவோணம், ஆனி உத்திரம் , மார்க ழி திருவாதிரை , ஆவணி, புரட்டாசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் எம் ஐயனும் அம்மையும் அபிஷேகம் கண்டருளும் நாட்களாகும்.அபிடேக காலங்களில் அம்மை சிவகாம சுந்தரிக்கு தோழிகளாக சரஸ்வதியும் , இலக்குமியும் விளங்கும் பாங்கினையும், ஐயனின் பூத கணங்களையும் நாம் காணலாம். இவ்வாறு அம்மை சிவகாமியுடன் தெற்கு நோக்கி ஆனந்த தாண்டவ கோலத்தில் அருட்காட்சி தரும் ஆனந்த நடராஜ மூர்த்தி சகள திருமேனி ( உருவ திருமேனி). ஸ்படிக லிங்க மூர்த்தி - அழகிய சிற்றம்பலமுடையார் சகள நிட்கள திருமேனி (அருவுருவ திருமேனி) இவருக்குத்தான் பொன்னம்பலத்தில் தினமும் காலையும் மாலையும் அபிஷேகம் நடைபெறுகின்றது மரகத நடராஜராம் ரத்ன சபாபதிக்கு காலையில் மட்டும் அபிஷேகம் நடைபெறுகின்றது, அன்னம் பாலிக்கும் தில்லை என்பதால் இவரின் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானது . இரகஸ்யம் நிட்கள திருமேனி (அருவ திருமேனி). சித்சபையில் சபாநாயகரின் வலப்புறம் உள்ளது ஒரு சிறு வாயில் இதில் உள்ள திரை அகற்றப்பெற்று ஆரத்திக் காட்டப்படும் போது அதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாமல் தங்கத்தால் ஆன விலவ மாலை திருவாசியுடன் தொங்கலிடப்பட்டு காட்சி அளிக்கும். மூர்த்தி இல்லாமலே விலவ மாலை தொங்கும். இதன் இரகசியம் அருகே உருவமாக எழுந்தருளியுள்ள எம்பெருமான் இங்கே அருவமாக ஆகாய ரூபமாக விளங்குகின்றார் என்பதே சிதம்பர ரகஸ்யம் என்பர். எனவே தான் இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் ஆகும். சிவ சக்தி ஐக்யமான, மந்திர சொருபமான திருவம்பல சக்கரமே இரகசியமாக விளங்குகின்றது அந்த ஜோதியை நாம் நமது ஊனக் கண்ணால் பார்க்க இயலாது எனவே தங்க வில்வ இலைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றது என்பாரும் உண்டு. மேலும் முகலிங்கம், சிவ பாதுகை, ஹஸ்தி ராஜர், மற்றும் சொர்ண பைரவரும் சித் சபையிலே காட்சி தருகின்றனர்.

பொன்னம்பலம் சித் சபையைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. பொன்னம்பலத்திலே தான் ஐயனும் அம்மையும் வருடத்தில் நான்கு முறை ,மாலை நேரத்தில் அபிஷேகம் கொண்டருளுகின்றனர். பொன்னம்பலத்தையும் சிற்றம்பலத்தையும் இனைக்கும் படிக்கட்டுக்கள் ஐந்து இவை பஞ்சாட்சர படிக்கட்டுக்கள் என்று வழங்கப்படுகின்றன. அம்பலத்தை சுற்றி வரும் போது தங்கக் கூரைகளை கண்டு களிக்கலாம். சிதம்பரத்தை பற்றி எழுதப்பட்டுள்ள நூற்களை கொண்டு ஒரு புத்தக சாலையையே அமைத்து விடலாம். அவற்றுள் முக்கியமானவை பெரிய புராணம், கோவில் புராணம், சிதம்பர புராணம், புலியூர் புராணம், தில்லை கலம்பகம், புலியூர் வெண்பா, சிதம்பர நாதர் பதிகம் முதலியன.


இத்திருக்கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானவை ஆருத்ரா தரிசனமும், ஆனி திருமஞ்சனமும் ஆகும். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்கள் செய்யும் ஆறு கால பூஜையே எம் அம்பலத்தாடும் இறைவன் கொண்டருளும் ஆறு திருமுழுக்குகள் அவ்ற்றுள் பிரம்ம மூகூர்த்த நேரமும், பிரதோஷ காலமும் தான் ஆருத்ராதரிசனமும் ஆனி திருமஞ்சனமும் ஆகும். இவை இரண்டும் பத்து நாள் திருவிழாக்கள் ஆகும். தினமும் பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடு உண்டு. ஒன்பதாம் நாள் நம்மையெல்லாம் உய்விக்க எம் ஐயனும் அம்மையுமே சித் சபையை விட்டு தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் முடித்து ராஜ சபையில் அடுத்த நாள் காலை அருனோதய காலத்தில் மஹா அபிஷேகம் கொண்டருளி, பின் தரிசனம் அளித்து ஆனந்த நடனத்துடன் சித் சபைக்கு திரும்புகின்றனர்.


வில்லை வட்டப் படவாங்கி அவுணர் தம்
வல்லை வட்ட மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லை வட்டந் திசைகை தொழுவார் விணை
ஒல்லை வட்ட்ங் கடந் தோடுதல் உண்மையே

என்ற அப்பரின் வாக்குப்படி , நம்முடைய வினைகளை எல்லாம் தீயினுள் தூசாக செய்ய வல்ல ,ஆனந்த நடராஜ மூர்த்தியும் சிவகாம சுந்தரியும் கோவில் கொண்டிருக்கும் இவ்வளவு பழம் பெருமையும் சிறப்பும் நிறைந்த திருக்கோவிலுக்கு சென்று அவர்களின் திருவருளைப் பெற கிளம்பி விட்டீர்களா இப்போதே.

Natarajar 1

NATARAJAR

Lord Shiva is one of the trinity of Hindu Gods who is the dissolver. But for Shaivaites ( followers of Shiva) He is the Supreme Lord. He is the creator, preserver, dissolver, bestower and ie He is the Lord of five acts represented by His five faces. Though He is primarily worshipped as a formless form of Shivalingam, he is also worshipped in 64 forms the foremost among them is as Nataraja , the Lord of Dance who by His "Dance of Bliss" ( Ananda Thandavam) keeps the whole universe in control. This blog site is dedicated to Lord Nataraja, in which you can read about His abodes mainly Chidambaram and other Dance Halls (Sabhas), including many pictures of the Lord.



குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்

இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே! ..... அப்பர்


To day is the beginning of Ani Uthiram festival at Chidambaram so adiyen is starting this blog dedicated to Lord Nataraja, the Lord of this Universe.


இந்த இணைத்தளம் ஆனந்தத் தாண்டவம் புரிந்து அகிலமனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும் அருளியும், அலகிலா விளையாட்டுடை பஞ்ச கிருத்திய பராயணராம் ஆனந்த நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் சமர்பிக்கப்படுகின்றது.