Thursday, October 7, 2010

அன்னையின் அலங்காரங்கள் சுப வரம் பத்திரிக்கையில்

ஓம் சக்தி

மிக்க நன்றி சுப வரம் ஆன்மீக மாத இதழுக்கு

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுபவரம் என்னுன் தளர்வறியா மனம் தாரும் ஆன்மிக மாத இதழின் ஆசிரியர் குழு, அடியேனின் நவராத்திரி வலை தளத்தைக் கண்டு அடியேனை தொடர்பு கொண்டு அவர்களது நவராத்திரி சிறப்பிதழில் நடுப்பக்கத்தில் வண்ண படங்களால் அன்னையின் ஒன்பது அலங்காரங்களை பிரசுரித்துள்ளனர் அவர்களுக்கு அடியேனின் உளமார்ந்த நன்றிகள்.

வண்ணத்தில் நடுப்பக்கத்தில் அன்னையின் அலங்காரங்கள்
(படத்தை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்)

அரசுப்பொதுத்துறையில் பணி்யாற்றும் முருகானந்தம் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். கைலாயம், அஹோபிலம் தொடங்கி, சகலத் திருத்தலங்களுக்கும் பயணம் செய்து ஆனந்தம் அடைபவர். "இறைவன் புகழ் பரப்ப விழியும் ஒரு சிறுத்தொண்டன்" என்று தன்னைப்பற்றி சொல்பவர். நவராத்திரி தினங்களில் கோயில்களிலும் அன்பர்களின் இல்லங்களிலும் அம்மனுக்கு செய்யப்படும் பல்வேறு அலங்கரங்களைப் படமெடுப்பது இவரது பொழுபோக்கு. அவர் காமிராவில் பதிவான அம்பாள் அலங்காரங்களில் சில இந்தப் பக்கங்களில்.. என்று பிரசுரித்திருக்கிறார்கள் .

எந்த ஒரு படைப்பாளிக்கும் மற்றவர்கள் காட்டுகின்ற ஆதரவே மிகச்சிறந்த ஊக்க மருந்தாகும். அது போல அடியேன் வலைப்பூக்களில் இடம்பெறும் படங்களுக்காகவே வந்து பார்த்து விட்டு செல்லும் அன்பர்கள் ஆயிரம் பேர். அவர்களில் ஒருவராக வந்து தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள அன்பர்கள் பலரின் இல்லங்கள் வரை அடியேனது படங்களை கொண்டு சென்ற சுபவரம் பத்திரிக்கை மேன் மேலும் வளர்ந்து சாதனை புரிய எல்லாம் வல்ல அந்த அம்பிகையை வேண்டிக்கொள்கிறேன்.

மற்ற பத்திரிக்கைகளுக்கு அடியேன் கட்டுரைகளை அனுப்பி வைக்க அவற்றுள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரம் ஆகியுள்ளன. ஆனால் இவர்கள் தானாகவே வந்து அடியேனது வலைப்பூவை பார்த்து, ஒரு யாத்திரிக்காக சென்றிருந்த அடியேன் வரும் வரை காத்திருந்து பின்னர் இல்லம் வந்து படங்களை வாங்கிச்சென்ற பாங்கை என்னவென்று சொல்லி பாராட்ட, வார்த்தைகள் கிடைக்கவில்லை அனந்த கோடி நன்றிகள்.

அத்துடன் கூடவே அடியேனது வலைப்பதிவுகளைப் படித்து ஊக்கப்படுத்தும், KRS, kumaran, Tulasi, Nachiar, Jeeva, Vaduvur Kumar, Cheena, Kavinaya, Mouli , Vaduvur Kumar, Logan மற்றும் பல்வேறு அன்பர்களுக்கும் நன்றி மற்றும் இதயம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அன்னை அனைவருக்கும் தனது திருவருளை வாரி வழங்க பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.

கடந்த இரு வருடங்களாக நவராத்திரி சமயத்தின் போது பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டதால் அன்னையின் அலங்காரங்களை அன்பர்களாகிய தங்களுடன் பகிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை. இந்த வருடம் அன்னையின் தரிசனம் பெறும் வாய்ப்பு உள்ளது அப்படங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வழக்கம் போல வந்து தரிசனம் செய்து விட்டு செல்லவும்.

ஓம் சக்தி

4 comments:

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி கைலாஷி ஐயா! தங்கள் சேவை இன்னும் பலருக்கும் சென்றடையட்டும்!

Kailashi said...

மிக்க நன்றி குமரன் ஐயா. தாங்கள் அன்று best blog விருது கொடுத்தது இன்று சரிதான் என்று நிரூபணம் ஆகிவிட்டது.

Logan said...

வாழ்த்துக்கள் கைலாஷி ஐயா

Kailashi said...

தங்களைப்போன்றோரின் ஆதரவுதான் ஐயா அடியேனுக்கு பெரிய ஊக்கம். யாரோ ஒருவர் அடியேனுடைய வலைப்பூவையும் பார்க்கின்றார்கள் என்று தொடர்ந்து எழுத தூண்டியது.