ஆறு தேங்கா யவல்தூணி அதற்கு தகுந்த எள்ளுருண்டை
பொழுது விடிந்துபொழுது
பிள்ளையார் நம் பிள்ளைகளைப் போல் பள்ளிக்கு சென்றால் எப்படி இருக்கும் என்று கூறும் பாடல். அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.






26. குஞ்சித பாதம் : சிதம்பர மகாத்மியம், அருளல் தொழில்.
உற்சவர் அம்மன்
மூலவர் கும்பம் மற்றும் விமான கலச கும்பம் புறப்பாடு
விமான கலசங்களுக்கு மந்திர நீரால்
பால முருகருக்கு மஹா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் என்பது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வெறும் திருக்கோவிலை சீர்படுத்துவது மட்டுமில்லை. அந்த தெய்வத்தை வணங்கும் அனைவருக்கும் நன்மையை வேண்டியும் , அக்கோவில் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள அனைவரின் நன்மையும் வேண்டித்தான். எனவேதான் கும்பாபிஷேகம் நடந்த அன்று மாலை திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இதன் மூலம் கன்னிப் பெண்களுக்கு உள்ள தோஷங்கள் நீங்கி அவர்கள் விரைவில மணம் கூட இந்த உற்சவங்கள் நடைபெறுகின்றன.
ஆனந்தமாய் நடைபெறும் யாக சாலை பூஜை கண்டருளும் உற்சவர் அம்மன்
லலிதா சகஸ்ரநாம பூஜைக்காக அமைக்கப்ப்ட்ட லலிதா திரிபுர சுந்தரி
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி என்பதால் தானே அன்னை அங்காள பரமேஸ்வரி மஹா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகின்றள். அன்னை அற்புதமாய் பூரண அலங்லாரத்தில் கொலுவிருந்து அருள் புரியும் இக்கோலத்தை காணக் கண் கோடி வேண்டுமல்லவா.
நவ குண்டங்களில் நவ சக்திக்கு ஆனந்தமாய் ஹோமங்களும், அர்ச்சனையும், விசேஷ த்ரவ்யாகுதி நடக்கும் அற்புத காட்சி, இதை அடுத்து பூர்ணாகுதி நடைபெற்று உபசாரங்கள் சிறப்பாக நடைபெற்றது.
உபசாரம் என்பது ஒருவரை புகழ்ந்து கூறுதல் என்று பொருள் படும். இங்கே சகல புவனத்திற்கும் இராணியாக விளங்கும் அன்னைக்கு உபசாரங்கள் நடைபெறுகின்றன அதில் கவரி வீசி அன்னையை குளிர்விப்பதை தரிசனம் செய்கின்றீர்கள்.
யாக சாலையில் அங்காள பரமேஸ்வரியம்மன் கும்ப ரூபத்தில்உற்சவர் அம்மனை பற்றி கூறும் போது ஒன்றை கூறாமல் இருக்க முடியாது. 70களில் நடந்த சம்பவம். கிராமத்துக் கோவில் என்பதால் அதிக பாதுகாப்புக் கிடையாது. உற்சவ அம்மன் மூர்த்தி சிறிது தான் ஆனால் அம்மையின் கீர்த்தி பெரிது. அம்மையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, இடக்காலை மடக்கி வலக்காலை தொங்க விட்டு வீராசனத்தில் நான்கு கரங்களில், சூலம், கபாலம், உடுக்கை, பாசம் தாங்கி அக்னி ஜுவாலையுடன், திருவாசியில் உள்ள கோலங்கலும், ஓம் என்னும் பிரணவமும், ஐந்து தலை நாகம் குடைப் பிடிக்க மிகவும் எழிலாக வீற்றிருக்கும் அம்மையின் அழகை நேரில் காண்கின்றீர்கள். ஒரு பக்கம் இருந்து பார்த்தால் அன்னை உக்ர ரூபிணியாய் காட்சி தருவாள் அந்த ஆதி பராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அதே நாம் மனக் கனிந்து தாயே நான் உன் பிள்ளையல்லாவா? லோக மாதாவே என்று பார்த்தால் அப்படியே சாந்த சொரூபியாக காட்சி தருவாள் அன்னை திரிபுர சுந்தரி இராஜ ராஜேஸ்வரி இவ்வாறு ரௌத்ரமும் சௌந்தர்யமும் இனைந்த மூர்த்தம் அன்னை அங்காள பரமேஸ்வரி.
அன்னையின் அழகில் மயங்கிய சில துஷ்டர்கள் அந்த லோக மாதாவையே திருட முயற்சி செய்துள்ளனர். அம்மை தன்னை கோவிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதித்தாள், திருடர்களும் மனம் மகிழ்ச்சி கொண்டு கோவிலின் வெளியே சென்றனர். அங்கு தான் அன்னை தன் சக்தியை அவர்களுக்கு காண்பித்தாள் அக்னி ஜுவாலையையே மகுடமாக கொண்ட அந்த அங்காள பரமேஸ்வரி, ஆதி சக்தி தீப்போல தகித்தாளோ? அல்லது ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்த அம்மை எவ்வாறு கனந்தாலோ? அல்லது அவர்கள் முன் தன் நாக ரூபத்தைக் காட்டி மிரட்டினாளோ? என்ன சோதனை கொடுத்தாள் என்று தெரியவில்லை, துஷ்டர்களை கருவறுக்கும் அம்மனின், துர்கா தேவியின், காளியின் உக்கிரம் தாங்க முடியாமல் , அன்னையை திருடிய அந்த கயவர்களால் அப்படியே அருகில் இருந்த வேலியில் அம்மனைப் போட்டு விட்டு ஓடி விட்டனர். அடுத்த நாள் காலை பூசை செய்ய வந்த பூசாரி, உற்சவ அம்மனைக் காணாது திகைத்தார். அம்மை தன் இருந்த இடத்தை உணர்த்த கோவிலை சுற்றி தேடிய போது வேலியில் அன்னை கிடைத்தாள். இது தாய் நடத்திய ஒரு திருவிளையாடல்.
முதற்கால யாக பூஜை முடிந்து தீபாராதனை
எந்த மனிதனுக்கும் மூன்று வித கடன்கள் உள்ளன அவையாவன தங்களுடைய மூதாதையர்களுக்கு செலுத்த வேண்டிய பித்ரு கடன், ரிஷிகளுக்கு செலுத்த வேண்டிய ரிஷி கடன், மூன்றாவது தேவர்களுக்கு செலுத்த வேண்டிய தேவ கடன், குல மக்கள் சார்பாகவும், கிராம மக்கள் அனைவருக்காவும் சிவாச்சாரியார்கள், இரண்டாம் கால யாக பூஜைக்கு பூர்வாங்கமாக இம்மூன்று கடன் தீர்க்கும் சடங்குகளை செய்கின்றனர்.
தாங்கள் காண்பது பிம்ப சுத்தி எனப்படும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படும், பால முருகன் விக்ரகம், பலி பீடம் மற்றும் விமான கலசங்கள் ஆகியவற்றிக்கு முதலில் அபிஷேகம் நடைபெற்று பின் பூஜைகள் நடைபெற்று நூதன ஸ்தூபி ஸ்தாபனம் என்னும் கலசங்கள் விமானத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நவ யாக குண்டங்கள்
இங்கே மூலவர் அம்மன், விமான கலசம் மற்றும் விநாயகர்
பாரத தேசத்தின் அடி முதல் முடி வரை உள்ள தீர்த்தங்கள் நிரப்பப்பெற்று கும்ப அலங்காரம் நிறைவு பெற்று கலாகர்ஷணம் இனிதே நிறைவு பெற்றது.
அடுத்த பதிவில் நான்கு கால யாக பூஜை நிகழ்ச்சிகளையும் மற்றும் நிறைவாக கும்பாபிஷேகம் காட்சிகளையும் வந்து தரிசியுங்கள்.
புதுப் பொலிவுடன் வர்ண கலாபங்களுடன் மின்னும்
அம்மன் விமானத்தில் அமைக்கப்பட்ட கலசங்கள்
விமானத்தின் முன் பக்க தோற்றம்
விமானத்தின் தெற்கு தோற்றம்
விமானத்தின் பின் பக்க தோற்றம்
விமானத்தின் தெற்கு பக்க தோற்றம்
யாக சாலை பீடத்தின் முன் பக்க தோற்றம்