Sunday, September 29, 2019
சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 9
சித்திரைத்திருவிழாவின் மூன்றாம் நாள் காலை அதிகாரநந்தி சேவையை இப்பதிவில் கண்டு அருள் பெறலாம் அன்பர்களே.
குறுங்காலீஸ்வரர் அதிகார நந்தி சேவை
இவ்வாலயத்தில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அது நின்று
போய் மொட்டையாக இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2000-ஆம் ஆண்டில் நூதன 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பக்தர்களின் நன்கொடையால் கட்டப்பட்டு, திருப்பணிகள் நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தூய்மையான- கம்பீரமான
ஆலயம். புராண- வரலாற்றுப்
பெருமைகளை தன்னகத்தே கொண்டு, கோயில்
என்ற இலக்கணத்துக்கு உட்பட்டு, பாங்காக
அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தலமாக குறுங்காலீஸ்வரர் ஆலயம்
விளங்குகின்றது. கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக 21 கல்வெட்டுகள் உள்ளன.
கற்பூர ஆரத்தி
நாற்பது தூண்களுடன் கூடிய பிரமாண்ட முன் மண்டபம். நுழையும்போது நமக்கு வலப் புறம் அருள்மிகு விசாலாட்சி சமேத
விஸ்வநாதர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும்
காணப்படுகின்றன. சோமாஸ்கந்தர் தியாகராஜர் கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இத்தூண்களில் ஏராளமான சிற்பங்கள் அழகாக
வடிக்கப்பட்டுள்ளன. அதில் யாகக் குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்த நிலையில்
காணப்படும் குச - லவர்களின் கம்பீரமான காட்சி, கலைநயம்
மிக்கது.இந்த மண்டபத்தில்தான் குசலவ புரீஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர்
சந்நிதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தனி
அம்மன் சந்நிதியும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. ஐயன் குள்ளமாக, லவ –குசர்களுக்காக தன்னை குறுக்கிக்கொண்ட குறுங்காலீஸ்வரராக
அருள் பாலிக்கின்றார். அவரை வணங்கி உட்பிரகார வலம் வநதால் துவக்கத்தில் தெற்கு நோக்கி நடராஜர், சூரியன், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். பிராகார வலம் வரும் போது சண்டிகேஸ்வரர் (கோமுக தீர்த்தம் விழும் இடத்தில்), விநாயகர், ஜுரகரேஸ்வரர், அகத்தீஸ்வரர், இன்னொரு விநாயகர், சாஸ்தா, சுப்ரமண்யர், சிவலிங்கம், லட்சுமி, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், ஞானசரஸ்வதி, நாகர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். பிரகார சுவற்றில் சுதர்சன அஷ்டகம், துர்கா ஸுக்தம், சிவப்புராணம், ஸங்காஷ்ட நாஸன கணேச ஸ்தோத்திரம் சலவைக்கல்லில் அமைத்துள்ளனர்
அடுத்து அம்மன் சன்னதி அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறோம். திருவையாறில் அருள் பாலிக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி எனும் தர்மசம்வர்த்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில், இடது திருவடியை முன் எடுத்து வைத்த பாவத்தில் பக்தர்களின் துயர் தீர்க்கப் புறப்படத் தயாராக இருக்கிறாள் இந்த அம்பிகை .அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணப் பேறு வாய்க்கும். தீராத
வியாதிகள், மனக் குழப்பங்கள் அகலும்.
லேபிள்கள்:
அதிகார நந்தி சேவை,
அறம் வளர்த்த நாயகி,
குறுங்காலீஸ்வரர்,
கோசை
Wednesday, September 25, 2019
சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 8
இவ்வாலயத்தின் சிறப்பு அம்சம் இவ்வாலயத்திற்கு முன்புறம் உள்ள 16 கால் மண்டபம். மண்டபத்தின் தூண்களில் மிகவும் அற்புதமான கற்சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளன. அவற்றுல் சிலவற்றை இப்பதிவில் காண்கின்றீர்கள்.
அவற்றுள் அபூர்வமாக அமைந்துள்ள ஒரு சிற்பம் ஆலிங்கன சரபேஸ்வரர். சரபேஸ்வரரும் நரசிம்மரும் ஒருவரை ஒருவர் தழுவிய கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். இவருக்கு ஞாயிறு மாலை இராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆலிங்கன சரபேஸ்வரர் உற்சவ மூர்த்தியாகவும் அருள் பாலிக்கின்றார். சைவ -வைணவ ஒற்றுமைக்கு ஒரு சிறந்த தலமாக கோயம்பேடு விளங்குகின்றது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.
சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர். இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.
லிங்கோத்பவர்
கஜசம்ஹார மூர்த்தி
பிக்ஷாடணர்
வீரபத்திரர்
ஐந்து தலையுடன் ஆதி பிரம்மன்
முருகர்( மகர குண்டலங்களின் அழகை கவனியுங்கள்)
ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு
அதிகார நந்தி
அர்ச்சுனன் தபசு
இராவணன்
சிவ பூசை
சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது.
சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள், அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.
நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோஷ்டத்தில், தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவர் எழுந்தருளியுள்ளனர்.
குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.
காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.
கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை
வடக்குப் பார்த்த சிவனும் இல்லை
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை - என்பார்கள்.
‘‘உலகத்தில் கோயம்பேடுங்கிற பேர் கொண்ட ஊர் இது ஒன்றுதான். பொதுவாக ஒரு ஊர்ல சிவபெருமானுக்கு இருக்கற பேரு, இன்னொரு
ஊருல இருக்கும். ஆனால், இந்த ஈஸ்வரனோட பேரு, வேறு
எங்கும் இல்லை! வடக்கு
நோக்கி, எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். அடுத்தது, மடக்குப் போன்ற லிங்கம். இங்குள்ள
ஈஸ்வரனின் லிங்க பாணம்- ஒரு
மடக்கையை (பானை மூடப் பயன்படும் மூடியை) கவிழ்த்தது
போல் இருக்கும். இதுவும்
இங்குள்ள சிறப்பம்சம்!’’
லேபிள்கள்:
ஆலிங்கன சரபேஸ்வரர்,
குறுங்காலீஸ்வரர்,
கோசை
Subscribe to:
Posts (Atom)