Sunday, August 4, 2019

ஆடிப்பூர அம்பாள்

ஆடிப்பூரத்தை ஒட்டி பல் வேறு அம்பாள் ஆலயங்களில், அம்மனுக்கு பத்து நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. சென்னை கோடம்பாக்கம் புலியூர் கோட்டம் , வாலீஸ்வரம் என்றழைக்கப்படும் பாரத்வாஜேஸ்வரம் ஆலயத்தில் அருள் பாலிக்கும் சொர்ணாம்பிகைக்கு நடந்த ஆடிப்பூர உற்சவத்தின் இரு நாட்களின் தரிசனம்.

ஆடி கிருத்திகையன்று




தேவியருடன் முருகப்பெருமான் 


ஆடிப்பூரத்தன்று 






பின்னழகு


 கண்ணாடி சேவை(பின்னழகு)

பூமிப்பிராட்டியின் அம்சமாக பூவுலகில் திருவாடிப்பூரத்தன்று பெரியாழ்வாரின் குமாரத்தியாய் அவதரித்தவள் ஆண்டாள்.  அக்கோதைப் பிராட்டியை பற்றிய சில தனியன்கள்


பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த  
திருவாடிப்பூரத்தின் சீர்மை - ஒரு நாளைக்
குண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு 
குண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு 

மணவாள மாமுனிகள்

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம்
மேன்மேலும் விளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய் மாலை முடிசூடிக் கொடுத்த மாதே

வேதாந்த தேசிகர்

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகந்தன்னை யிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

********

4 comments:

கோமதி அரசு said...

//சென்னை கோடம்பாக்கம் புலியூர் கோட்டம் , வாலீஸ்வரம் என்றழைக்கப்படும் பாரத்வாஜேஸ்வரம் ஆலயத்தில் அருள் பாலிக்கும் சொர்ணாம்பிகைக்கு நடந்த ஆடிப்பூர உற்சவத்தின் இரு நாட்களின் தரிசனம்.//

தரிசனம் செய்து மகிழ்ந்தேன். படங்கள் நேரில் பார்த்த உணர்வை தந்தது.
நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஆடிப்பூரம் காட்சிகள் வெகு அழகு.

அலங்காரம் அசத்தலாக இருக்கிறது. படங்கள் மூலம் எங்களுக்கும் காணத் தந்தமைக்கு நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட்.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அம்மா.