Monday, December 30, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 78

பத்ரிநாதரை தரிசித்த பின்னர் இவ்வாண்டு ஜோஷிர்மடத்தில் கற்பக விருட்ச மற்றும் ஸ்படிக லிங்க தரிசனம் பெற்று, கேபிள் காரில் குளிர் கால விளையாட்டிற்கு புகழ் பெற்ற அவுலி சென்று திரும்பி ஹரித்வார் வந்து மத்வாஸ்ரமத்தில் தங்கினோம். அதிகாலை எழுந்து அருகில் உள்ள படித்துறைக்கு சென்று கங்கையில் நீராடினோம். மத்வாச்ரமத்தினரால் கட்டபட்டுள்ள உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் சென்று கிருஷ்ணரையும், மத்வாச்சாரியாரையும் சேவித்தோம்.



ஹரித்வார் மத்வாஸ்ரமம்




கங்கையில் நீராடிய படித்துறை


புனித கங்கை


உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்


மத்வாச்சாரியார் சரிதம்


கருடன்

காலை உணவிற்குப்பின்  முதலில் ரிஷிகேசம் தரிசிக்க சென்றோம்அன்றைய தினம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் நேராக லக்ஷ்மண்ஜூலா சாலையில்
 அமைந்துள்ள  திருமலை-திருப்பதி   தேவஸ்தான   வேங்கடேசர் ஆலயம் சென்றோம்திருவேங்கடவனையும்அலர்மேல்  மங்கைத்தாயாரையும் சேவித்தோம்விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்அருகில் அமைந்துள்ள கங்கா கௌரி சமேத சந்திரமௌலீஸ்வரரையும் தரிசித்து அருள்   பெற்றோம்இவ்விரண்டு ஆலயங்களும் நமது தென்னாட்டு இராஜகோபுரத்துடன்    அமைந்துள்ளனபூசைகளும் நமது முறைப்படி நடைபெறுகின்றதுஅடுத்து

 இராம்ஜூலா வரை     ஆட்டோவில் சென்று கங்கைக் கரையில் லக்ஷ்மண்ஜூலா வரை நடந்து வந்து
 வழியில்   உள்ள சில ஆலயங்களை தரிசித்தோம்இவ்வாறு ரிஷிகேசத்தை சுற்றிப் பார்த்துவிட்டு    ஹரித்வார் வந்தடைந்தோம்.


ரிஷிகேஷ் வெங்கடேசர் ஆலயம்



பெருமாள் - தாயார் விமானங்கள்





சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் 




இராம் ஜூலா பாலம்







ரிஷிகேசத்தில் கங்கை நதி





ஹரித்வாரத்தில் கங்கை அம்மன் ஆலயம் 


புது வர்ணத்தில் மணிக்கூண்டு




ஹரித்வார் புகைவண்டி நிலையம்


பழைய டெல்லி புகைவண்டி நிலையம்



அடியோங்களை இந்த யாத்திரைக்கு அழைத்து சென்ற திரு.தேஷ்பாண்டே அவர்கள்யோகாதியானம் முறையாக செய்பவர் என்பதால் பாபா ராம்தேவ் அவர்களின் மருத்துமனைக்கு அழைத்து சென்றார்அங்கு ஒரு அன்பர் யோகாசனங்களைப் பற்றி விளக்கினார்யோகாசனத்தால் எவ்வாறு பல்வேறு வியாதிகள் குணமாகின்றன என்றும் விவரித்தார்அங்கிருந்து ஹரி-ஹா- பௌரி வந்து கங்கா ஆரத்தி தரிசித்தோம்.
 கங்கையின் புனித நீரை சேகரித்தோம்கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினோம்ஹரித்வாரிலிருந்து இரவு கிளம்பும் முசோரி விரைவு வண்டியில் பயணம் செய்து    டெல்லி வந்தடைந்தோம்அங்கு வசந்த்குஞ்ச்சில் உள்ள மத்வாஸ்ரமத்தில் தங்கினோம்மாலை பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தோம்இவ்வாறு அவன்    அருளால் அவன் தாள் வணங்க முடிந்ததுஎவ்வித சிரமமும் இல்லாமல்  திட்டமிட்டதை விட   அதிகமாக தரிசனம் கிட்டியதும் அவனருள்தான்இவ்வாறு இவ்வருட யாத்திரை மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றதுஇத்துடன் இத்தொடரின் பதிவுகள் நிறைவடைகின்றன.   வந்து தரிசித்து ஊக்கமும் அளித்து சென்ற அனைவருக்கும் நன்றிஅனைவரும்  
வாழ்க வளமுடன்.    

சுபம்

Thursday, December 26, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 77


மறு நாள் காலை இழுவை வண்டி நிலையம் சென்று ரோப் கார்  சேவை ஆரம்பமாவதற்காக காத்திருந்தோம். சேவை துவங்குவதற்கு முன்னர் அவலி நகரைப் பற்றியும் இழுவை வண்டி சேவையைப் பற்றி சிறிது காணலாமா அன்பர்களே.



ஜோஷிர்மட் GMVN தங்கும் விடுதி


அவுலி (Auli) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு
 மலைவாசஸ்தலமாகும்.  இமயத்தில் 3050 மீட்டர் உயரத்தில் அமைந்த அவுலி,  
அல்பைன் தட்பவெப்ப புல்வெளிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட இயற்கை அழகு கொஞ்சும் சமவெளியாகும்இங்கு சூன் முதல் அக்டோபர் வரை 520 வகையான பூக்கள் கொண்ட செடிகொடிகள் பூத்துக் குலுங்குகின்றதுஅவுலி மலையேற்றப் பயிற்சிக்கான சிறந்த சுற்றுலாத் தலமாகும்இப்பகுதியைச் சுற்றிலும் ஓக்  (oak) மற்றும் பைன் (pine)   மரக்காடுகளையும்இமயமலையின் பல  பனிக் கொடுமுடிகளையும் காணலாம். அவுலி மற்றும் ஜோஷிர்மடத்தை இணைக்கும் 4 கிமீ நீளமுள்ள கேபிள் கார்கள் இயங்குகிறது.


உறங்கும் அழகி (Sleeping Beauty) மலை

நம் நாட்டின் பெயர் பெற்ற பனிச்சறுக்கு இடங்களுள் ஒன்றான குல்மார்க்கிற்கு அடுத்து விளங்கும் இடம் அவுலியாகும்குளிர்க்காலமானது வரபனி பொழிய இப்பள்ளத்தாக்கில்பனி நிறையபனி சறுக்கு ஆர்வலர்கள் அவுலியை நோக்கி படையெடுக்கின்றனர்.  அவர்களுடைய  சந்தோஷத்திற்கு டாப் கியர் போட்டு வானில் பறக்கிறார்கள்இவ்விடமானது பனிச்சறுக்கு (Skiing), மற்றும் சாகச விளையாட்டு (Paragliding) ஆர்வலர்களுக்கு ஏற்ற இலக்காக உள்ளதுமலையேற்றத்தில் (Trek) விருப்பம் உள்ளவர்களும் இங்கு வருகின்றனர்கொண்டோலா கேபிள் கார் (Gondola Cable Car) சவாரி பயணத்தையும்அல்லது ஓக் காடுகள் வழியான பயணத்தையும்,  இங்கே  காணப்படும் உயரிய சிகரத்திலிருந்து அழகிய சூரிய உதயத்தையும் பார்த்து இரசிக்கின்றனர்அதுவே மற்ற காலங்களில் ரோப் காரில் பயணம் செய்து புல்வெளிகளயும் உயரிய சிகரங்களையும் இரசிக்கின்றனர்.



அழகிய இரட்டை வெள்ளை ரோஜா மலர்கள்  


ஜோஷிர்மட்டிலிருந்து அவுலிக்கு சாலை மார்க்கமாகவும் செல்ல முடியும்ஆயினும் பெருமபாலான சுற்றுலாப்பயணிகள் கேபிள் கார் மூலமாக செல்ல விழைகின்றனர்.  அவுலி மற்றும் ஜோஷிர்மடத்தை இணைக்கும் கேபிள் கார் உலகத்தின் நீளமான மற்றும் உயரமான் கேபிள் கார் சேவை என்பது இதன் சிறப்புஇதன் நீளம் 4.4 கி.மீ தூரம் ஆகும்,  இதன் அதிகபட்ச உயரம் 3010 அடி ஆகும்சுமார் 1100 அடி உயரம் பயணிக்கின்றனர் பயணிகள்.  மொத்தம் 10  உயர் கோபுரங்கள் அமைத்துள்ளனர்இவற்றின் இடையே கேபிள்கார்கள் இயங்குகின்றனபயண நேரம் சுமார் 25 நிமிடங்கள்ஒரு பெட்டியில் 25  பயணிகள் 
நின்றவாறு பயணிக்கலாம்அமரும் வசதி இல்லைகட்டணம் இரு வழிக்குமாகவும் 
செலுத்தலாம்.




இழுவை வண்டி  விவரங்கள் 



கேபிள் கார் சேவை துவங்குவதற்கு முன்னரே சென்று GMVNன் அலுவலகத்தில் அருமையான மலர்த்தோட்டத்தை கண்டு களித்தோம்அதன் ஒரு ஊழியர் ஜெய விஜயர்கள்   மலைகளான யானை மற்றும் குதிரை மலைகளைப் போலவே உறங்கும் அழகி (Sleeping Beauty) என்றொரு மலையைக் காட்டினார்ஒரு பெண்ணின் முகத்தைப் போலவே முகம்மூக்குவாய்  மற்றும் தனங்களுடன் அமைந்துள்ள அமைப்பைப் பார்த்து வியந்தோம்.   எங்கள் குழுவினர் 40 பேர் இருந்ததனால் இரு குழிவினராக கேபிள் காரில் பயணித்தோம்மேலே செல்ல செல்ல அருமையாக ஊசியிலைக் காடுகளை பார்த்தோம்சிறு வயதில் பள்ளியில் படித்த பாடம் ஞாபகத்திற்கு வந்தது.  மேலும் அவுலியின் அழகையும்   மேலிருந்து கண்டோம்அதன் பள்ளத்தாக்குகள் தற்போது பச்சைக் கம்பளம் போர்த்தியது போல புல் வெளியாக காட்சி தந்ததுஇதுவே குளிர் காலத்தில் பனி பொழிந்து வெள்ளிக் கவசமாக மாறி விடுமாம்சுமார் ஆறடிக்கு பனி நிறையும் என்றார்கள்.  சரிவானது மொத்தம் 3 கி.மீ தூரம் என்பதால் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல தேசிய மற்றும் உலக அளவிலான பல பனி சறுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன.    பனிச் சறுக்கு கற்றுக்கொள்பவர்களும் அச்சமயத்தில் அவுலி வருகின்றனர்.


கீழ்த்தளம் - ஜோஷிர்மட்



உயரத்தில் இருந்து யானை மலை


கேபிள் காரின் வேகம் நிமிடத்திற்கு 3 மீ என்பதால் மெதுவாகவே செல்கின்றதுஅனைவரும் குழந்தைகள் போல இது வரை எத்தனை கோபுரங்களைக் கடந்தோம் என்று எண்ணிக்கொண்டே பயணித்தோம்மேலே செல்ல செல்ல உசியிலைக்காடுகளின் உச்சிகளைக்
 கடந்தோம் சிகரங்களில்  அன்றைய தினம் மேகம் படர்ந்திருந்ததனால் அனைத்து சிகரங்களையும் காண இயலவில்லைஅவுலி செல்லும் போது உயரமான நந்தா தேவிமானாகாமெட்பஞ்சசூலி ஆகிய பனி மூடிய இமயத்தின் கொடுமுடிகளை காண முடியும்
உற்சாகத்துடன்  மேலே பயணித்தோம்பலருக்கு இது ஒரு புது அனுபவம்கீழே அவுலியின் செயற்கை ஏரியைப் பார்த்தோம்ஆனால் அதில் தண்ணீல் இல்லாமல் வறண்டிருந்ததுஇவ்வாறு இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே இறுதி கோபுரத்தை அடைந்து  கீழே இறங்கி வந்தோம்.







ஊசியிலைக் காடுகள் 


 அவுலியின் செயற்கை ஏரி


மேல் தளம்  - அவுலி








 குழுவினர்




திரும்பிச் செல்ல ஒரு மணி நேரம் இருந்ததால் அவ்விடத்தில் இருந்த விடுதியில் அனைவரும் தேநீர் அருந்தினோம்குழுவாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  அருகில் உள்ள புல்வெளிகளுக்கு குதிரையில் அழைத்துச் செல்கிறோம் வாருங்கள் என்று குதிரைக்காரர்கள் அழைத்தனர்சென்று வந்தால் காலதாமதம் ஆகும் என்பதால் வேண்டாம் என்றோம்உங்களைப் போன்ற சுற்றுலாப்பயணிகள் எங்களை ஆதரித்தால் தானே எங்களுக்கும் எதோ வருமானம் கிட்டும் என்றார்கள் எனவே அனைவரும் குதிரையில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தோம்இன்னும் மேகக்கூட்டம் கலையாததால் சிகரங்களை காண முடியவில்லைஅங்கு ஒரு மணி நேரத்தை கழித்துவிட்டு கீழிறங்கி வந்து பயணத்தைத் தொடர்ந்தோம்வழியெங்கும் சாலை மேம்பாட்டுப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தால் மெதுவாகவே பயணிக்க வேண்டியிருந்ததுரிஷிகேசிற்குள் நுழையும் போது இருண்டு விட்டதுலக்ஷ்மண் ஜூலா என்னும் பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சி அளித்ததுபாலம் பழைய பாலம் என்பதால் வாகன போக்குவரத்தை நிறுத்தி விட்டனர்,  தற்போது நடைப்பயணிகளை மட்டுமே அனுமதிக்கின்றனர்இப்பாலத்த்திற்கு மாற்றாக புதுப்பாலம் ஒன்றை கங்கையின் குறுக்கே கட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டோம்.


குதிரைப் பயணம் 

 ரிஷிகேசம் பாலம் மின்னொளியில்

இவ்வாறாக இமயமலையின் இன்னொரு பயணத்தின் நிறைவு கட்டத்தை அடைந்தோம்,  அடுத்து எவ்வாறு யாத்திரையை நிறைவு செய்தோம் என்பதை அடுத்த பதிவில்   காணலாம் அன்பர்களே.