சென்னை பாரத்வாஜேஸ்வரம் எனப்படும் வாலீஸ்வரத்தில் சொர்ணாம்பிகைக்கு நடைபெற்ற சென்ற வருட ஆடிப்பூர பத்து நாள் உற்சவத்தின் அருட்காட்சிகளை காணலாம் அன்பர்களே தொடர்ந்து வாருங்கள். இப்பதிவில் விநாயகர் உற்சவம் மற்றும் முதல் நாள் அம்பாள் சிவ பூஜை செய்யும் கோலம் கண்டு களியுங்கள்.
விநாயகர் உற்சவம்
நமது அனைத்து கர்மாக்களுக்கும் சாட்சியாக விளங்குபவர் சூரிய பகவான் அவர் தனது செல்லும் திசை மாறும் நாள் அயன நாள் ஆகும். தெற்கு நோக்கி பயணித்த சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் தைமாத முதல் நாள் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். ஆறு மாதங்கள் கழித்து ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கும் நாள் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆகும்.
2 கண்ணிமை - 1 நொடி
2கை நொடி - 1 மாத்திரை
2மாத்திரை - 1 குரு
2 குரு - 1 உயிர்
2 உயிர் - 1 சணிகம்
12 சணிகம் - 1 விநாடி
60 விநாடி - 1 நாழிகை
2 1/2 நாழிகை - 1 ஓரை
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
15 நாள் - 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு
60 ஆண்டுகள் - 1 வட்டம்
இது தான் நமது பண்டைய கால அளவுகள் ஆகும்.
மூஷிக வாகனத்தில் விநாயகர்
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது. தைமாதம் தொடங்கி ஆனி முடிய 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம், உபநயனம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.
அம்பாள் சிவ பூஜை செய்யும் கோலம்
ஆனால் இந்த மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை
வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், ஆடி மாதத்தில் இருந்து
வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. (ஆவணி - விநாயகர்
சதுர்த்தி, புரட்டாசி - நவராத்திரி, ஐப்பசி - தீபாவளி, கார்த்திகை - மஹாதீபம் ).
மேலும் நமது பித்ருக்கள்
என்னும் முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம். தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்
படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது. குறிப்பாக ஆடி மாதம்
தீர்த்தங்களைப் போற்றும் ஆடிப்பெருக்கு வருகின்றது. அம்மன் வழிபாட்டுக்கு மிகவும்
உகந்த மாதம் ஆடி மாதம், தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் நாளன்று
பாண்டிக்கொடுமுடியிலும், பவானி கூடு துறையில் ( காவிரி,
பவானி, அமுத நதி கூடும் முக்கூடலில்) புதுமணத்
தம்பதிகள் காவிரியில் நீராடி சிவபெருமானை சகல சௌபாக்கியங்களும் அடைவர் என்பது
ஐதீகம்.
அனைத்து புவனங்களையும் பூக்கும் அன்னை மஹா
திரிபுரசுந்தரி, ஜகத்ஜனனி,
ஜகன்மாதாவிற்கு , மானிடர்களாகிய நாம்
வளைகாப்பு நடத்தும் நாள்தான் திருஆடிப்பூரம். இந்த ஆடி மாதத்தில் மழை நன்றாகப்பெய்து பூமித்தாய்
சூல் கொள்ளும் காலம். நதியிலே புதுப்புனல் நுரையுடன் பொங்கி ஓடும் காலம். ஜகன்மாதா, ஜகத்ஜனனி
அம்பிகையே சூல் கொண்டதாக கருதி பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் காலம்.
4 comments:
ஆஹா ...அருமையான தரிசனம்
ஆடிப்பூர உற்சவம் படங்கள் செய்திகள் அனைத்தும் அருமை.
தொடர்கிறேன்.
வாருங்கள் அனுராதா அம்மா தொடர்ந்து தரிசனம் பெறுங்கள்.
வாருங்கள் கோமதி அம்மா. மிக்க நன்றி.
Post a Comment