கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியன்று "கயிலையே மயிலை - மயிலையே கயிலை" என்றழைக்கப்படும் திருமயிலைப்பதியின் திருக்குடமுழுக்கு மிகவும் சிறப்பாக நடைந்தேறியது. "அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும்" எனவே அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரின் மாப்பெருங்கருணையினால் அந்த வைபவத்தை கண்ணுறும் பாக்கியம் கிட்டியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றபடி அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள்.
உமையம்மை(கற்பகாம்பாள்) மயில் உருவில்
இறைவனை வணங்கும் காட்சி
நீதியரசர்கள், அமைச்சர்கள் என்று முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு மிகவும் பலமாக இருந்தது. குடமுழுக்கு நாளன்று A அனுமதி சீட்டு (Pass) உள்ளவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமே குடமுழுக்கு நிறைவு பெற்ற பிறகு சுவாமி அம்பாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அனுமதி சீட்டுக்காரர்கள்( B, C) திருக்கோவிலின் மண்டபங்களின் மேல் இருந்து குடமுழுக்கை மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். ஆலயத்தின் உள்ளே பக்தர்களை விட காவல்துறையினரே அதிகமாக இருந்தது போல தோன்றியது.
சந்திரசேகரர்
பல ஆயிரம் பக்தர்கள் திருக்கோவிலின் வெளியே நின்றுதான் குடமுழுக்கை தரிசித்தனர். மாலை அடியேன் சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது பக்தர் வரிசை கிழக்கு மாடவிதி நிறைந்து, தெற்கு மாத வீதியில் வெள்ளீஸ்வரர் ஆலயம் வரை நீண்டிருந்தது.
நர்த்தன விநாயகர் முகப்பு
உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
பூம்பாவையே! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி ( குடமுழுக்கு) விழாவைக் காணாது செல்வது முறையோ என்று ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் பதிகம் பாடி அங்கமான( எலும்பு) பூம்பாவையை உயிருடன் வரச்செய்து கபாலிப்பெருமான் அருளால் அற்புதம் புரிந்த வரலாற்றை மனதில் கொண்டு இந்த குடமுழுக்குக் காட்சிகளைக் காணுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
சிங்காரவேலவர் முகப்பு
அண்ணாமலையார் சன்னதி முகப்பு
கிழக்கு இராஜகோபுரம்
தொடரும்...............
2 comments:
குடமுழுக்குக் காட்சிகளைக் கண்டு களித்தேன்.
தொடர்கிறேன்.
படங்கள் எல்லாம் அழகு.
தொடர்ந்து வாருங்கள் கோமதி அம்மா.
Post a Comment