Tuesday, May 10, 2016

திருமயிலை திருக்குடமுழுக்கு -2

கபாலீஸ்வரம் 
கபாலீஸ்வரர் மேல் பக்தர்கள் வைத்திருக்கின்ற அன்பிற்கு, பக்திக்கு ஒரு அளவே இல்லை. கபாலி, கபாலி என்று அவர்கள் உருகுவதைப் பார்த்தால் நாமும் நிச்சயம் உருகுவோம் அந்த கபாலீஸ்வரரின் குடமுழுக்கு   காட்சிகள் தொடர்கின்றன. 

உமையம்மை மயில் உருவில் சிவ பூஜை செய்தல் 

மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில், ஆர்ப்பு, ஊர் இதுவே மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

ஸ்ரீபார்வதிதேவி, மயிலாக வந்து, இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை, சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால்- வேதபுரி என்றும், சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால்- சுக்ரபுரி என்றும், மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால்- கபாலீச்சரம் என்றும் போற்றப்படுகிறது திருமயிலை. திருவள்ளுவர் அவதரித்த தலம், ஆழ்வார்களில் பேயாழ்வார் அவதாரத்தலம் திருமயிலை. 63 நாயன்மார்களுள் வாயிலார் நாயனார் இத்தலத்தில் ஐயனை வழிபட்டு முக்தி அடைந்தார். 


கிழக்கு இராஜகோபுரத்தின் தெற்குப்பக்கம் 

தக்ஷிணா மூர்த்திகள்

இராஜகோபுரத்தின் சில அழகிய சுதை சிற்பங்கள்

இராமர் குகனுடன் கங்கையை கடக்கும் காட்சி 

ஆளுடைய பிள்ளையை
 அப்பர் சுமந்து செல்லும் காட்சி

 ஆகாய கங்கையை
 பூமிக்கு இறக்கும் கங்காதரர்



கபாலீஸ்வரர் விமானம் 





சுவாமி விமானத்தின் அழகிய சுதை சிற்பங்கள் 


லிங்கோத்பவர்
 வள்ளி தெய்வானை உடனுறை சிங்காரவேலவர்


சுகாசன மூர்த்தி 

கௌரி சங்கர்

மாப்பிளை சுவாமி



மஹா விஷ்ணு


பிச்சாண்டவர்

ஆடல் வல்லான் 



மேற்கு இராஜ கோபுரம் 


நவராத்திரி மண்டபம் முகப்பு 



ஊஞ்சல் மண்டபம் சுதை சிற்பங்கள் 



No comments: