Wednesday, May 18, 2016

திருமயிலை திருக்குடமுழுக்கு -5

சூரிய உதயத்தின் போது இராஜ கோபுரத்தின் அழகு

அனைத்து விமானங்கள்

சுவாமி விமானம்

சிங்கார வேலவர் விமானம் 


குடமுழுக்கைக் காண காத்திருக்கும் பக்தர்கள் 

அருணகிரிநாதர் சன்னிதி


சிங்கார வேலவர் சன்னதி

மேற்கு இராஜகோபுரம்

சுவாமி விமானம்


வாத்தியக்குழுவினர்

விமான கடங்கள் புறப்பாடு 







கடங்கள் விமானம் சேருதல்


மூலவர் கடங்கள் புறப்பாடு


குடமுழுக்கிற்கு தயாராக சிவாச்சாரியர்கள் 

குடமுழுக்கு காண வந்த கருடபட்சி


பூர்வாங்க பூஜைகள் 

கற்பகாம்பாள் விமானம் 

பச்சைக்கொடி காண்பிக்கப்படுகின்றது
சுவாமி விமானம் குடமுழுக்கு 

மேற்கு இராஜகோபுரம் - கொடி மரம்  குடமுழுக்கு


புனிதநீர் தெளிக்கப்படுகின்றது 

கற்பூர ஆரத்தி 

இவ்வாறு குடமுழுக்கு மிகவும் சிறப்பாக மங்களகரமாக நிறைவேறியது.  

Monday, May 16, 2016

திருமயிலை திருக்குடமுழுக்கு -4

 யாகசாலை காட்சிகள்  

பஞ்சாசனத்தில் கபாலீஸ்வரர் கும்பம் 

அம்பாள் கும்பம்


பஞ்சாசனத்தில் கற்பகாம்பாள் கும்பம் 

பின்புறம் 



சுவாமி -  அம்பாள் யாகசாலை முகப்பு


மூன்று பிரிவாக யாகசாலைகள் அமைத்திருந்தனர். கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் பிரதான யாக சாலை   கூர்மாசனம், நாகாசனம், சிம்மாசனம், யோகாசனம், பத்மாசனம்  ஆகிய பஞ்சாசன பீடத்தில்  ஒன்பது குண்டங்களுடன்  அமைந்திருந்தது. இரண்டாவது யாக சாலையில் விமானங்களின் கும்பங்கள் அமைத்திருந்தனர். மூன்றாவது யாகசாலையில்  பரிவாரதேவதைகள் மற்றும் உற்சவர்கள் கும்பங்கள் அமைத்திருந்தனர். 









பரிவார தேவதைகளின் யாக சாலை 



விமானங்களின் யாக சாலைகள் 




 பொன்னாக மிளிரும் சனீஸ்வரர் விமானம் 


அஷ்டபந்தன மருந்து  இடிக்கிறார்கள் 

சிறப்பாக 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இனி வரும் பதிவில் கும்பாபிஷேக காட்சிகளைக் காணலாம். 

Saturday, May 14, 2016

திருமயிலை திருக்குடமுழுக்கு -3


 
நர்த்தன விநாயகர் விமான சுதை சிற்பங்கள்


கி.பி 7-ஆம் நூற்றாண்டில் இந்தத் தலம், 'மயிலாப்பில்' 'மயிலாப்பு' என அழைக்கப்பட்டது. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திருமயிலை, 'மயிலாபுரி' என்று வழங்கப்பட்டதை, நந்திக் கலம்பகம் தெரிவிக்கிறது. சமணர்கள், இந்தத் தலத்தை பத்மநாதபுரம், வாமநாதபுரம் எனும் பெயர்களால் அழைத்தனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில், ஜயங் கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப்பரணி 'பண்டை மயிலை' என்று குறிப்பிடுகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த வெனிஸ் வணிகர் மார்கோபோலோ, 'மயில்கள் நிறைந்த பகுதி' என திருமயிலையைக் குறிப்பிடுகிறார்.

சிங்கார வேலவர் சன்னதி

சிங்காரவேலவர் விமானம் 

திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன ஸ்ரீகபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.


சிங்காரவேலவர் விமான சுதை சிற்பங்கள்


கற்பகவல்லியம்மை பதிகம்திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம்கற்பகவல்லி மாலைகற்பகவல்லியார் பஞ்சரத்தினம்ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள்கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம்திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலைதிருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள்.

திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ்திருமயிலைக் கோவைசிங்கார வேலர் மாலைதிருமயிலைக் குகன் பதிகங்கள்மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலைஅருட்புகழ்மயிலைச் சிங்காரவேலர்இரட்டை மணிமாலைதிரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்டவை.


தவிரதிருமயிலைப் பிள்ளைத் தமிழ்திரு மயிலைக் கோவைதிருமயிலை உவமை வெண்பாதிருமயிலை வெண்பாவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள்திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள்தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள்கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும். அதாவது சிவனாரையும் உமையவளையும் முருகக் கடவுளையும் போற்றிக் கொண்டாடியதற்கு ஏராளமான நூல்களே சான்றுகளாகத் திகழும் மிகப் புராதனமான திருத்தலம்மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்!