வேடுவர் பறி உற்சவம்
செங்குந்த கோட்டத்தில் மாசி மகப் பெருவிழாவின் பதினோராம் திருநாள் இரவு பழனி ஆண்டவருக்கு உபநயன உற்சவம். இவ்வாறு இத்திருக்கோவிலின் அனைத்து முருக திருமேனிகளுக்கும் பெருவிழாவின் போது உற்சவம் நடைபெறுகின்றது.
பழனி ஆண்டவரின் அருட்கோலங்கள்
பன்னிரெண்டாம் திருநாள் காலை வேடுவர் பறி உற்சவம். அன்று காலை ரங்கபாஷ்யம் செட்டி வீதியில் உள்ள வேடுவர் பறி பந்தலுக்கு எழுந்தருளி மகாபிஷேகம் கண்டருளுகிறார். பிறகு இரவு வேடுவர் பறி உற்சவம் சுவாமி வேடுவர் கோலத்தில் எழுந்தருளும் அழகைக் காணுங்கள்,
வள்ளி நாயகி
(மயிலை அனைத்த கோலத்தில்)
வேடன் கோலத்தில் முருகப்பெருமான்
கோபுர வாசல் தரிசனம்
வள்ளி மலையில் தினைப்புனைத்தில் ஆலோலம் பாடிக்கொண்டு பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த வள்ளி நாயகியை, வேடனாகவும், விருத்தனாகவும் வந்து ஆண்டு கொண்ட அந்த வள்ளலின் வேடுவர் கோலம் இது. பின்னர் மூத்தவன் விநாயகரின் அருளால் வள்ளி திருமணம் நடைபெறுகின்றது.
அறியாமையால் வேடர்கள் தங்கள் குலக்கொடி வள்ளியை கவர வந்த வேடனுடன் சண்டை போடுவதே வேடுவர் பறி உற்சவம்.
மறுநாள் வள்ளி நாயகி திருக்கல்யாணம், மயில் வாகன சேவை. பதினான்காம் திருநாள் புஷ்ப பல்லக்கு. பதினைந்தாம் நாள் உத்ஸவருக்கு உத்ஸவ சாந்தி 108 சங்காபிஷேகம், அன்று மாலை மூலவருக்கு விசேஷ புஷ்ப அங்கி அலங்காரம் என்று பெருவிழா நிறைவடைகின்றது.
இத்தொடரும் இப்பதிவுடன் நிறைவு பெறுகின்றது, சுமார் ஐந்து வருடங்களாக எடுத்த படங்களின் தொகுப்பே இப்பதிவுகள், ஆயினும் அனைத்து உற்சவங்களையும் முழுதுமாக தரிசனம் இதுவரைச் செய்யவில்லை.
இது வரை வந்து தரிசனம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி இமய மலையின் இந்த வருட தரிசனத் தொடர் துவக்கம் அதையும் வந்து தரிசனம் செய்யுமாறு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
4 comments:
வேடுவர் பறி உற்சவம் அருமை ஐயா...
இமய மலையின் இந்த வருட தரிசனத் தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
வாழ்த்துக்கள் பல...
நன்றிகள் பல...
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.
முருகனின் பல அலங்காரங்களை அற்புதமாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி ஐயா
தொடர்ந்து வந்து தரிசனம் செய்ததற்கு மிக்க நன்றி LOGAN ஐயா.
Post a Comment