Monday, March 18, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -17

பத்தாம் திருநாள் 

மாசி மக தீர்த்தவாரி

காலை நடராஜர் உற்சவம் 

விநாயகர் 

இந்த பத்தாம் திருநாள் தான் பெருவிழாவின் நிறை நாள் இன்றுதான் சுவாமி தீர்த்தம் வழங்குவார்( அருள் பாலித்தல்). இத்திருக்கோவிலில் மாசி மகம் நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு திருவிழா நடைபெறுகின்றது. 

ஆனந்த  நடராஜர்

தீர்த்தவாரியன்று காலை நடராஜர் உற்சவம். அம்மை சிவகாம சுந்தரியுடன் ஆனந்த தாண்டவக்காட்சி தந்தருளுகின்றார்.  இது முருகன் ஆலயம் என்பதால்  அம்மையப்பருடன் சண்முகரும் வலம் வந்தருளுகின்றார். 



அம்மை சிவானந்தவல்லி

மயில் வாகனத்தில் ஆறுமுகபபெருமான்
  எழுந்தருளும் அழகு  


ஆறுமுகப்பெருமானின் பின்னழகு

சண்முகருக்கு முன்னும் பின்னும் அலங்காரம் செய்கின்றனர். 

 பின் வருபவை முந்திய ஆண்டின் காட்சிகள் 
ஆனந்த கூத்தனின் அருட் கோலம் 

பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர்களையும்  ஐயனுடன் காணலாம்.

சிவகாம சுந்தரி அம்பாள் 

ஆறு முகரின் அருட்கோலம் 

பின்னழகு 


சுப்ரஹ்மண்யம்  சுப்ரஹ்மண்யம்
சண்முக நாதா 
சுப்ரஹ்மண்யம்

சுப்ரஹ்மண்யம்  சுப்ரஹ்மண்யம்
சண்முக நாதா 
சுப்ரஹ்மண்யம்


மதியம் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வந்து தீர்த்தம்  கொடுக்கின்றனர். உச்சிக் காலத்தில் யாக சாலையில் இந்த பத்து நாட்கள் பூசை செய்யப்பட்ட தீர்த்தத்தினால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. மாலை சிவ சுப்பிரமணீய சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அன்ன வாகனத்திற்கு என்ன அலங்காரம் செய்திருந்தனர் என்று யூகியுங்கள் அன்பர்களே. அந்த கந்தரலங்காரத்தை அடுத்த பதிவில் காணலாம்.  

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பரிபூர்ண தரிசனம் கிடைத்தது... நன்றி ஐயா...

S.Muruganandam said...

மிக்க மகிழ்ச்சி தனபாலன் ஐயா, பதிவிட்டவுடன்வந்து தரிசனம் செய்து உடனே பின்னூட்டமும் இடுவதற்கு. மிக்க நன்றி

Test said...

மயில் வாகனத்தில் ஆறுமுகபபெருமான் மிக அழகாக உள்ளார் அய்யா

S.Muruganandam said...

முருகன் அழகன் தானே LOGAN ஐயா.