திருப்போரூர் முருகன் கோவிலில்
கார் மயிலின் ஆட்டம்
கார் மயிலின் ஆட்டம்

என் முருகனின் கந்தர் சஷ்டி வந்து விட்டது என்று கார் மயில் தோகை விரித்து ஆடுகின்றதோ?
ஆறுமுகம் வாழி ஆறிரண்டு தோள் வாழி
தேறு பதம் வாழியிரு தேவிமார் - வீறுடை
வாழி வேல் வாழி மயில் வாழிபோ ரூரா
வாழி சகம் வாழி மகிழ்ந்து.
***********************
சென்னை சைதாப்பேட்டை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணியர் ஆலயம்
சிவசுப்பிரமணியர் ஆலயம்

பிரதமை முதல் பஞ்சமி வரை தினமும் காலை மங்கள கிரி விமானத்தில் வீரபாகுத்தேவருடன் எழுந்தருளுகின்றார் சுப்பிரமணிய சுவாமி. மாலை தொட்டி உற்சவம் சுப்பிரமணியருக்கு.
தினமும் திருக்கோவிலில் காலையும் மாலையும் சிவசுப்பிரமணிய சுவாமி, சண்முகசுவாமி மற்றும் உற்சவருக்கு லக்ஷார்ச்சணை நடைபெறுகின்றது.
தினமும் திருக்கோவிலில் காலையும் மாலையும் சிவசுப்பிரமணிய சுவாமி, சண்முகசுவாமி மற்றும் உற்சவருக்கு லக்ஷார்ச்சணை நடைபெறுகின்றது.

சக்தி வேல் வாங்கி புறப்படும்
சுப்பிரமணீய சுவாமி


சிவ சுப்பிரமணிய சுவாமி

( வேல் இருக்கும் நிலை மயில் மற்றும் சேவற் கொடியை கவனியுங்கள்)
முருகப்பெருமான் கருணை வள்ளல் அவர் சூரனை கொல்லவில்லை. ஞான வேல் பட்டதும் சூரனின் ஆணவம் மாண்டது அவன் மயிலும் சேவலுமாக மாறினான். மயில் முருகருக்கு வாகனமானது. சேவலை கொடியில் கொண்டார் குமரர்.

சிவ சுப்பிரமணீய சுவாமி

சப்தமியன்று மாலை வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் பின் பச்சை மயில் வாகனத்தில் பாகம் பிரியா அம்மைகளுடன் சுவாமியும். வள்ளி தெய்வாணை தனித் தனியாகவும் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கும் காட்சி



********************************
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம்
சிவசுப்பிரமணிய சுவாமி உற்சவம்

பிரதமை முதல் பஞ்சமி நாள் வரை தினமும் காலை சுப்பிரமணிய சுவாமிக்கும் வீரபாகு தேவருக்கும் சிறப்பு அபிஷேகம் மாலை உள் புறப்பாடு
சக்திவேல் வாங்கிய சுப்பிரமணிய சுவாமி
(படத்தின் மீது கிளிக்கி பெரிதாக தரிசிக்கலாம்)
மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பார்த்திருக்கின்றோம் இங்கோ உற்சவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம். சிவிகையில் சந்தனக் காப்புடன் சக்தி வேல் தாங்கி வலம் வரும் சுப்பிரமணியர். உடன் நவ வீரர்களும் உலா வருகின்றனர்.
(படத்தின் மீது கிளிக்கி பெரிதாக தரிசிக்கலாம்)
மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பார்த்திருக்கின்றோம் இங்கோ உற்சவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம். சிவிகையில் சந்தனக் காப்புடன் சக்தி வேல் தாங்கி வலம் வரும் சுப்பிரமணியர். உடன் நவ வீரர்களும் உலா வருகின்றனர்.
திருக்கல்யாணக் கோலத்தில் வள்ளி தெய்வாணையுடன் பச்சை மயில் வாகனத்தில் பவனி வரும் சிவசுப்பிரமணிய சுவாமி
*****************************
*****************************
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவில்


சூரனுக்கு பெருவாழ்வு நல்க வரும் வடபழனி ஆண்டவர்.
தொண்டை மண்டல ஸ்கந்த தலங்களில் சுவாமி சூர சம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளுவது வழக்கம் இங்கு சண்முகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றார். 21 நாதஸ்வரங்கள் மங்கல கீதம் ஒலிக்க, வாண வேடிக்கைகளுடன் சுவாமி எழுந்த்ருளும் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு கொண்டா ஆதி சேஷனுக்கும் கூட அரிது. சூர சம்ஹாரத்தின் போது அப்படியே கந்த புராணத்தின் சாரத்தை வர்ணனையாக கூறும் அற்புதத்தை என்னவென்று சொல்ல. முடிந்தால் நிச்சயம் ஒரு தடவை வடபழனி வந்து பாருங்கள், வடபழனி ஆண்டவர் அருள் பெறுங்கள்.

சப்தமியன்று திருக்கல்யாணம்
2 comments:
சஷ்டி உற்சவப் படங்கள் அத்தனையும் அழகு. செந்தூர்க் கந்தனின் சஷ்டி உற்சவம் நினைவில் வந்தது.
வாருங்கள் சுந்தரா. செந்தூர் வேலவன் அனைவரையும் காக்கட்டும்.
Post a Comment