Showing posts with label திருக்கயிலாய வாகனம். Show all posts
Showing posts with label திருக்கயிலாய வாகனம். Show all posts

Saturday, November 12, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -16

சிவமயம்
திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

மாலை நாம் ஐயன் அம்மை திருக்கல்யாணம் பத்தாம் திருநாளில் சகலருக்கும் சர்வ மங்களம் உண்டாக நடைபெறுகின்றது. இத்திருக்கல்யாணத்தை காண்பவர்கள் மனக்குறைகள் எல்லாம் நீங்குகின்றன. எல்லா நன்மைகளும் உண்டாகின்றது.

மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர்


திருக்கல்யாணக் கோலத்தில் அகத்தீஸ்வரர்



திருக்கல்யாணக் கோலத்தில் அகிலாண்டேஸ்வரி



தேவியருடன் முருகப்பெருமான் (2010)



அகிலாண்டேஸ்வரியும் பாகம் பிரியா அம்மையும்
ஐயனுடன் சேவை சாதிக்கும் திருக்கோலம் (2011)



முருகர் (2011)


சண்டிகேஸ்வரர் (2010)


முருகருடன் சண்டிகேஸ்வரர் (2011)


திருக்கல்யாணத்திற்கு பிறகு ஐயன் திருக்கயிலாய வாகனத்திலும், அம்மை வெள்ளி ரிஷப வாகனத்த்திலும், மற்ற மூர்த்திகள் அவரவர்கள் வாகனங்களிலும் எழுந்தருளி மாடவீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். அந்த காட்சியை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.