Saturday, November 9, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 69


முன்னர் இருமுறை இவ்வழியில் கேதார்நாத் சென்றிருக்கிறோம், ஆனால் இத்தலத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. இவ்வருடம் அவனருளால் அது சித்தித்தது. சாலையின் மிக அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் இங்கு பல காலம் தவம் செய்த தலமிது ன்கின்றனர்.  ருத்ரபிரயாகையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம். இவ்விடத்தின் உயரம் 1000 மீ ஆகும். மந்தாங்கினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  




அகஸ்தியமுனி ஆலயத்திற்கு

செல்வோம் வாருங்கள் அன்பர்களே


வரவேற்பு வளைவு


அகஸ்திய முனிவரை தரிசனம் செய்வதற்கு முன்னர் அவரது சிறப்புகளை சுருக்கமாக காணலாம்அகத்திய முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர்சித்தர்களில் முதன்மையானவர்குறு முனிவர் என்றும் கும்ப முனி என்றும் அழைக்கப்படுகின்றார்மூர்த்தி சிறிதானாலும் இவரது கீர்த்தி பெரிதுமலையரையன் பொற்பாவை பார்வதி மற்றும் திருக்கயிலை நாதரின் திருமணத்தின் போது அனைத்து ஜீவ ராசிகளும் திருக்கயிலையில் கூடிய போது வடக்கு தாழ்ந்து தெற்கு உயர அதை சமப்படுத்த சிவபெருமானால் தெற்கு திசை நோக்கி அனுப்பப்பட்டவர்தன்னால் சிவ சக்தி திருமணக் கோலத்தை காண முடியாமல் போகுமே என்று வேண்ட அவருக்கு திருமணக் கோலத்தை பல தலங்களில் காட்டி அருளினார் இறைவன். இறைவனிடமிருந்தே தமிழ் கற்றவர். “தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான் என்று கம்பர்  தமது இராமாயணத்தில் பாடுகின்றார்.  தமிழ் இலக்கண நூலான அகத்தியத்தை இயற்றியவர்இந்நூல் தற்போது கிட்டவில்லை பொதிகை மலையில் அமர்ந்து தமிழ் வளர்த்தார்இவரது மாணாக்கரான தொல்காப்பியர் இயற்றிய இலக்கண நூல் தொல்காப்பியம்.  ஹயக்ரீவர் மூலமாக லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் பெற்று நாம் எல்லாம் உய்ய அளித்தவர்இராமபிரான் இராவணனை வெல்ல ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை அளித்தவர்விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் இவரது மனைவியாகிய  லோபாமுத்ரை மிக சிறந்த ஸ்ரீவித்யா உபாசகிஅவரே இன்றும் காவிரி ஆறாக ஓடி நம்மை வாழ்விகின்றாள்.  கடலை குடித்தவர்வாதாபிவில்வளன்  என்னும்   அரக்கர்களை அழித்தவர் வாருங்கள் இனி அகத்திய முனியில் அகத்தியரை தரிசிக்கலாம்.



அகஸ்திய முனிவர் ஆலயம்


சிறு ஆலயம் தான்இமயமலைக்கே உரிய அமைப்பில் அமைந்துள்ளது.  அகத்திய முனிவர் இத்தலத்தில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம்அகத்திய முனிவரின் ஆஸ்ரமம் என்பதால்  இன்றும் அவ்வாறே  அமைந்துள்ளது ஆலயம்மையத்தில் மூன்று சன்னதிகள்  சுற்றிலும் தியான அறைகள் அமைந்துள்ளன வலப்பக்க சன்னதியில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் இலிங்க ரூபத்தில் அருட்காட்சி தருகின்றார்.  வடநாட்டில் நாமே இலிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்ய முடியும்இத்தலத்திலும் நாம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம்நாகாபரணத்துடன் ஆவுடை இல்லாமல் இருக்கும் அகஸ்தியர் வழிபட்ட சங்கரனை வணங்கி கருவறையில் கோட்டத்தில் அனுமன்இராமர்விஷ்ணுசிவ-பார்வதியை தரிசிக்கலாம்இவரின் முன் மண்டபத்தில் விதானத்தில் கருடனை தரிசிக்கலாம்நடு சன்னதியில் க்ஷேத்ரபாலகர்  அருள் பாலிக்கின்றார்பொதுவாக  இமயமலைப் பகுதியில் கிராமத்தின் தேவதையே க்ஷேத்ரபாலகராக வணங்கப்படுகின்றார்கட்யூரி விமானத்துடன்  அகஸ்திய முனிவர் சன்னதிஎட்டு உலோக (அஷ்ட தாதுமூர்த்தமாக அகஸ்திய முனிவர் அருள் பாலிக்கின்றார்அருகே வாள் ஏந்திய கோலத்தில் பைரவரும்  எட்டு உலோக மூர்த்தமாக காவல் காக்கின்றார்கேராரீஸ்வரர் மற்றும் பத்ரிநாதரின் தரிசனம் நன்றாக அமைய வேண்டும் என்று அவரிடம் வேண்டிக்கொண்டோம்இவ்வாலயத்தில் அமைத்துள்ள பலகையில் பைசாகி  விழா சிறப்பாக நடைபெறுகின்றது என்பதை அறிந்து கொண்டோம்.






 வழியில் ஒரு சங்கமம்


செர்சியில் முழு இரவு நாளில்


அருணோதய காலம்


இந்த யாத்திரைக்கான அனைத்து  ஏற்பாடுகளையும் செய்த திரு.தேஷ்பாண்டே அவர்கள்





அகஸ்திய முனியில் இருந்து புறப்பட்ட போதே மாலை நேரம் ஆகிவிட்டதுஹெலிகாப்டர் நிறுவனத்தினரிடம் பேசினோம்,  பத்து பேர் அதிகாலை  5.30 மணிக்கு வந்து விடுங்கள்  முதல் ஹெலிகாப்டரில்  அனுப்புகின்றோம் என்றார்கள்மூன்று மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்திருந்தால் அவ்வரிசைப்படி அனுப்பினர்.  அடுத்த குழு 6.30 மணிக்கும் இறுதி குழுவினரை  7.00 மணிக்கு வருமாறும் கூறினர்குப்தகாசியை தாண்டிய பின் மழை பெய்ய ஆரம்பித்ததுபாதையும் சேறும்சகதியுமாக மிகவும் மோசமாக இருந்ததுஇருளில்  வண்டி ஒட்டுனர் மிகவும் நிதானமாக கொட்டும் மழையில் குண்டும் குழியுமாக இருந்த பாதையில் வண்டியை ஒட்டினர்வண்டிக்குள் அமர்ந்து கொண்டு அடியோங்கள் ஓம் நமச்சிவாய மந்திரத்தை செபித்துக்கொண்டிருந்தோம்சீதாபூர்மற்றும் இராம்பூர் என்ற ஊர்களைக் கடந்து செர்சி(Sersi) என்ற ஊரை அடைந்தோம்அடியோங்கள் முன் பதிவு செய்திருந்த  ஹெலிகாப்டர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தலம் இவ்வூரில்தான் அமைந்துள்ளதுஅவ்வூரிலேயே அனைவரும் தங்குவதற்கு இடம் கிட்டியதுஒரு நெடிய மலைப் பயணத்திற்கு பிறகு மறு நாள் கேதாரீஸ்வரரை  தரிசிக்க போகின்றோம் என்ற மனத்துடன் உறங்கச்சென்றோம்மறு நாள் ஐயனின் தரிசனம் கிடைத்தாஎவ்வாறு அமைந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.  
யாத்திரை தொடரும் .. . . . .. 

No comments: