Wednesday, November 27, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 72

                                                      துங்கநாத்  தரிசனம்






நடைப்பயணம் துவக்கம் 



மறுநாள் காலை 8 மணியளவில் அனைவரும் சோப்டா வந்து சேர்ந்தோம்துங்கநாத்திற்கான நடைப்பயணம் 2600மீ உயரத்தில் அமைந்துள்ள, “கீழை சுவிஜர்லாந்து” (Switzerland of East) என்றழைக்கப்படும் இச்சிறிய கிராமத்தில் இருந்து துவங்குகின்றது.  அடியோங்கள் தங்கிய புன்யால் (Bhunyal) என்ற  இடம் சோப்டாவிலிருந்து    சுமார் கி.மீ தூரம்   தள்ளி கீழே இருந்தது எனவே நாங்கள் திரும்பி வந்தோம்நடைப்பயணத்தை துவக்குவதற்கு முன் முதலில் துங்கநாத் தலத்தைப்பற்றி அறிந்து கொள்ளலாம் அன்பர்களே.







பஞ்ச கேதார் என்று அழைக்கப்படும் இமயமலையில் அமைந்துள்ள ஐந்து ஆலயங்களுள் ஒன்று துங்கநாத்ஐந்து கேதாரங்களில் மூன்றாவது தலம்.  உலகில் அமைந்துள்ள சிவாலயங்களில் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள ஆலயம்இதன் உயரம் 3680மீ ஆகும்துங்கம் என்றால் கொடுமுடிகள் (சிகரம்என்று   பொருள்எனவே துங்கநாத் என்பது கொடுமுடிகளின் நாதர் என்று பொருள்படும்வளர் இமய பொருப்பில் விளையாடும் இளம் பிடியே என்று குமரகுருபரர் பாடியது போல இமய மலையின் சாய்வுகளில் விளையாடியவள் பார்வதி அன்னை அவளை மலையன்னை என்று அழைத்து மகிழகிறோம்.  பீமனிடமிருந்து தப்பிக்க ஐயன் காளையாக பாய்ந்து போது அவரது புஜங்கள் மற்றும் கரங்கள் இத்தலத்தில் வெளிப்பட்டதாக ஐதீகம்.


கேதார் சிகரங்கள்

துங்கநாத் ஆலயம் சந்திரசிலா சிகரத்திலிருந்து கி.மீ கீழே அமைந்துள்ளதுஎனவே துங்கநாத் நடைப்பயணம் செல்பவர்கள் சந்திரசிலாவும் செல்கின்றனர்சந்திரசிலாவிலிருந்து சுற்றிலும் உள்ள பனி மூடி சிகரங்கள் அனைத்தையும்  அருமையாக காணமுடியும்பாண்டவர்கள் கட்டிய இவ்வாலயம் சுமார் 1000 வருடங்கள் பழமையானதுஆதி சங்கராச்சாரியார் வகுத்த படி மற்ற கேதாரங்களில் தென் இந்திய பிராமணர்கள் பூசை செய்கின்றனர்ஆனால் இத்தலத்தில் மட்டும் இங்குள்ளவர்களே பூசை செய்கின்றனர்.



பாதை முழுவதும் கல் வேயப்ப்பட்டுள்ளது 

சௌகம்பா சிகரம் 


சோப்டாவிலிருந்து துங்கநாத் செல்லும் தூரம் மற்ற கேதாரங்களை நோக்குங்கால் மிகவும் குறைவு எனவே இங்குள்ளவர்களும்மலையேறுபவர்களுக்கும்  3.5  கி.மீ தூரம் கொண்ட இந்நடைப்பயணம் எளிதானதாக கருதப்படுகின்றதுஆனால் தென்னிந்தியாவில் செல்லும் நமக்கு அதுவும் எப்போதாவது செல்கின்ற நமக்கு சற்று கடினமானதுதான்அனைவரும் தலைக்கு தொப்பிகம்பளி உடைகள்கையுறைகள்கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு நடைப்பயணத்தை சிவபெருமானை வணங்கிப்புறப்பட்டோம்ஒரு சிலர் குதிரையில் சென்றனர்பாதை முழுவதும் கல் வேயப்பட்டுள்ளதுசில இடங்களில் மட்டுமே படிகள் உள்ளனகடினமான இடங்களில் இரு பக்கமும் தடுப்புக்கள் அமைத்திருக்கின்றனர்பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு சென்றால் குறித்து வைத்துக்கொள்கின்றனர்முன்பணம் பெற்றுக்கொண்டு கீழே வரும்போது பாட்டில்களை காட்டினால் முன்பணத்தைத் திருப்பித்தருகின்றனர்கைத்தடிகள் வாடகைக்குக் கிடைக்கின்றனகுறிப்பாக  மலை இறங்கும் போது கைத்தடிகள் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவே  அனைவரும் ஒன்றை வாங்கிக்கொண்டோம்.


 ரோடென்ட்ரான் சர்பத்


ரோடென்ட்ரான்

நடைப்பயணத்தை துவங்கியவுடன் பாதையின் சாய்வு அதிகம் இருக்கவில்லைஇரு புறமும் மரங்கள் இருந்தனமரங்களில் பாசிஒட்டுண்ணி செடிகள் படர்ந்திருந்தனசிறு மலர்கள் மலர்ந்திருந்தனவழியெங்கிலும் கடைகள் உள்ளன சிரமப்பரிகாரம் செய்து கொள்ளலாம்ஓய்வெடுப்பதற்கான 
திட்டுகள் அமைத்துள்ளனர் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு நடைப்பயணத்தை  தொடரலாம்.   சற்று தூரம் நடந்த  பின் தூரத்தில் பனி மூடிய சிகரங்கள் கண்ணில்
 பட்டனவழிகாட்டியிடம் கேட்டபோது சௌகம்பாகேதாரம் மற்றும் நீலகண்ட சிகரங்கள் என்றார்அவற்றை புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.   சிறிது நேரத்தில் மேகங்கள் வந்து சிகரங்களை மறைத்துக்கொண்டன திரும்பி வரும் வரை அவ்வாறே இருந்ததுநடைப்பயணம் தொடர்ந்ததுசிறிது நேரத்திற்க்குப்பின்  செங்குத்தான ஏற்றம் வந்ததுஅதன் அடிவாரத்தில் ஒரு கடை இருந்ததுஅக்கடையில் ரோடென்டரான் மலர்களின்  சர்பத் கிடைக்கும்மலையேற்றத்திற்கு நல்லது என்றார் வழிகாட்டி அதை வாங்கி சுவைத்தோம்அவ்வேற்றத்தை ஏறிய பின் இரு பக்கமும் புல்வெளிகள் அருமையாக அமைந்திருந்தினஅவற்றில் ரோடென்டரான் (Rhodendron) புதர்கள்அடியோங்கள் சென்ற சமயம் அவை பூத்திருக்கவில்லைவெயில் காலத்தில் அவை பூத்திருக்குமாம் அப்போது ஒரு மலர்ப் போர்வை போர்த்தியது போல இருக்கும் என்று படித்திருக்கின்றேன்.


கணேசர் ஆலயம்

இயற்கையின் அழகை இரசித்துக்கொண்டுதூய்மையான காற்றை சுவாசித்துக்கொண்டே மெல்ல மெல்ல ஏறினோம்மேலே செல்ல செல்ல சாய்வு அதிகமாகிக்கொண்டே இருந்ததுஎனவே  நடையின் வேகமும் குறைந்து கொண்டே வந்தது.  நடு நடுவே சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டே மலை ஏறினோம்உயரம் அதிகமாக அதிகமாக குளிரும் அதிகமாகியதுஅதே சமயம் அதிக நேரமாக நடப்பதால் உள்ளே வியர்க்கவும் செய்ததுகம்பளி உடையை கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டுசிறிது நீர் அருந்திவிட்டுஓம் நமசிவாய மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே நடையை சிறிது துரிதப்படுத்தினோம்குதிரையில் சென்ற எங்கள் குழுவினர் சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  நடுவில் ஒரு கோவில் போன்ற அமைப்பை பார்த்தோம்சுவாமி சிலை ஒன்றும் இருக்கவில்லை பக்கத்தில் உள்ள கடையில் விசாரித்தபோது கணேசர் கோவில் என்றார்கள்அங்கிருந்து சிறிது தூரம் சென்றவுடன்  துங்கநாத் ஆலயத்தின் கோபுரம் கண்ணில் பட்டது.

ஆகாஷ் குண்ட் (ஆகாய குளம்)

அடடா!  நெருங்கி விட்டோம் என்று நடையை இன்னும் சிறிது வேகமாக்கினோம்நிறைவாக  ஆலயத்தை நெருங்கினோம்பூஜைப் பொருட்களை விற்கும் கடைகள் பல ஆலயத்தின் அருகில் உள்ளனஆகாஷ் குண்ட் எனப்படும் குளம் தரிசித்தோம்ஆனால் தற்போது அதில்  தண்ணீர் இல்லைஆலயத்தை அடைய சுமார் 50  படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.  ஐயனை தரிசிக்கும் ஆவலில் படிகளை தாவி ஏறினோம் ஒரு திருப்பம் மற்றும் ஒரு ஏற்றம் ஆலயத்தை அடைந்தோம்வரவேற்பு வளைவைத்தாண்டி உள்ளே சென்றோம்.

ஆலயத்திற்கு செல்லும்  படிகள்

உதக் குண்டம்





பஞ்ச பாண்டவர்கள் சன்னதிகள்

பார்வதி சன்னதி 



விமான கலசம் 



பழமையான ஆலயம்முழுவதுமாக கற்றளிநீள நீளமாக கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியது போல காட்சி அளித்ததுபழமை மாறாமல் அப்படியே இருந்ததுபாண்டவர்கள் கட்டிய கோவில் என்பது ஐதீகம்ஆதி சங்கரரும் வந்து துங்கநாதரை தரிசித்து சென்றிருக்கிறார்இமயமலைக்கே உரிய கட்யூரி அமைப்புமுன் புறம் பல வர்ணங்கள் பூசியுள்ளனர்சுற்றிலும் பல சிறு சன்னதிகள் அவைகளும் மூலக்கோவிலைப் போலவே கற்றளிகள்ஆனால் அளவில் சிறியவைபஞ்ச பாண்டவர்கள்பூதநாதர்பைரவர்பார்வதிகணேசர் ஆகியோருக்கான சன்னதிகள் இவைபரிவார தெய்வங்களை எல்லாம் தரிசனம் செய்து ஐயனின் முன்னர் அமைந்துள்ள நந்தி தேவரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டுவெளிப்புறம் உள்ள கணபதியையும் வணங்கி   கருவறைக்குள் சென்றோம்ஒரு சிறு முன் மண்டபம் உள்ளதுகருவறையில் ஆவுடையுடன் சாய்ந்த கோலத்தில் அற்புதமாக அருட்காட்சி தருகின்றார் துங்கநாதர்அனைத்து அடியார்களும் உதக குண்டத்தின் நீரை செப்பு குடங்களில் ஏந்தி வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கின்றனர்அதைப் பார்த்த போது அப்பர் பெருமான் திருவையாற்றில்
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடிபோதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!யாதும் சுவடுபடாது ஐயாறடைகின்ற போது என்ற பதிகம் பாடிக்கொண்டே ஐயனுக்கு அபிஷேகம் செய்து வாகீசர் திருக்கயிலாய காட்சி பெற்றதைப் போல அடியோங்களும் மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலைநாதரின் தரிசனம் பெற்றோம்கொண்டு சென்றிருந்த வில்வ தளம் சார்த்தினோம்கங்கை நீராலும் அபிஷேகம் செய்தோம்அடிவீழ்ந்து வணங்கினோம்ஐயனுடன் அஞ்சலி ஹஸ்தராக ஆதி சங்கராச்சாரியாரும் எழுந்தருளியுள்ளார்கருவறையின் உள்ளே மற்ற கேதாரங்களின் சிவ-பார்வதிகளும் வெள்ளி படமாக எழுந்தருளியுள்ளனர்அருமையாக ஐயனை தரிசனம் செய்து பதிகங்கள் பாடி துதி செய்து விட்டு வெளியே வந்து அமர்ந்துஆலயம் முழுதும் நிறைந்திருந்த அண்டங்காக்கைகளுக்கு உணவளித்தோம்சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு  மெதுவாக கீழே இறங்கினோம்.

பைரவர் சன்னதி


சந்திர சிலா









இறங்கும் போது இயற்கை காட்சியை இரசித்துக்கொண்டே இறங்கினோம்இமய மலைக்கே உரிய பறவைகள் பலவற்றைப் பார்த்தோம் ஆனால் எதையும் புகைப்படம் எடுக்க முடியவில்லைமேகக்கூட்டம் வந்து அடியோங்களை உரசிக்கொண்டு சென்றன இருட்டிக்கொண்டும் வந்ததுமழை வரப்போகின்றதோ என்று வேகத்தை அதிகப்படுத்தினோம்வழியில் மேய்ச்சலுக்கு சென்றிருந்த பல குதிரைகள்  மணி சத்தத்துடன் எங்களை கடந்து சென்றனஅடிவாரத்தை நெருங்கும் போது மழைத்துளி விழ ஆரம்பித்ததுபின்னர் சுமார் 20 நிமிடம் நல்ல மழை பெய்ததுகுழுவினரில் பலர் மழையில் நனைந்து கொண்டே இறங்கி வந்தனர்அனைவரும் பின்னர் தங்கும் விடுதி அடைந்து மதிய உணவருந்தி கோபேஸ்வரம்சோப்டா வழியாக ஜோஷிர்மடத்தை அடைந்தோம்ஜோஷிர்மடத்தில் தரிசனம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.  


யாத்திரை தொடரும் . . . . . .