Saturday, September 27, 2014

நவராத்திரி நாயகி - 5


முத்து மாரியம்மன் நவராத்திரி அலங்காரங்கள் 

முதல் நாள் 



மூலவர் முத்து மாரியம்மன் அலங்காரம் 





  
உற்சவர் முத்து மாரியம்மன் அலங்காரம் 

**********

இரண்டாம் நாள் 


மூலவர் காயத்ரி அலங்காரம் 






உற்சவர் கண ஸ்கந்த மாதா அலங்காரம் 

(தன் இரு புதல்வர்களுடன் அன்னை மலைமகள் பார்வதி)



லலிதா சகஸ்ர நாமத்தில் வரும் சில நாமக்கள்

காமேச்வர  - முகாலோக - கல்பித - ஸ்ரீகணேச்வராயை நம: 

காமேசுவரனது முக தரிசனத்தினால் கணேசனைப் பெற்றவள். 

மஹா கணேச - நிர்பின்ன - விக்ன யந்த்ர - ப்ரஹர்ஷிதாயை நம:

விக்ன யந்திரத்தைப் பொடிப்பொடியாக்கிய கணேசரைக் கண்டு மகிழ்ந்தவள். 

கணாம்பாயை நம:

கணங்களுக்கும் கணபதிக்கும் தாய். 

குமார கணநாதாம்பாயை நம:

குமரனுக்கும் கணபதிக்கும் தாய். 

குஹாம்பாயை நம:

குஹப்பெருமானின் தாய்.

குஹ ஜென்ம புவே நம: 

குமரக்கடவுளின் ஜென்மஸ்தானம் .



***********

மூன்றாம் நாள் 


மூலவர் ஜெய துர்க்கா தேவி  அலங்காரம் 




ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 

துர்கா தேவி சரணம்  கனக துர்கா தேவி சரணம்



உற்சவர் நர்த்தன மஹா கௌரி அலங்காரம் 




 லாஸ்ய - பிரியாயை நம:
(லாஸ்ய - பெண்கள் ஆடும் நடனம். தாண்டவம் - ஆண்கள் ஆடும் நடனம்.)

(லாஸ்ய) நர்த்தனத்தில் பிரியம் உள்ளவள்.


நடேச்வர்யை நம:  

நடனம் செய்யும் நடராஜனை அனுசரித்து நடனம் செய்யும் ஈஸ்வரி.     


மஹேஸ்வர - மஹாகல்ப - மஹா தாண்டவ - ஸாக்ஷிண்யை: 

மஹா கல்பத்தில் மஹேசுவரர் செய்யும் மஹா தாண்டவத்திற்கு சாட்சியாக இருப்பவள்.                                                                                                                                                                                                              
************

               இவ்வாலயம் சென்னை வெங்கடநாராயணா சாலையில் உள்ளது.                                                                                                                                                               
                                              அபிராமி அம்மை பதிகம்                                                   

ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினில் போய்

நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர்
நவிற்றும் உபதேசம் உட்கொண்டு

ஈனம்தன்னைத் தள்ளிஎனது நான் எனும் மானம்
இல்லாமலே துரத்தி

இந்திரிய வாயில்களை இறுகப்புதைத்து நெஞ்சு
இருள் அற விளக்கு ஏற்றியே

வான் அந்தம் ஆனவிழி அன்னமே உன்னை என்
மனத் தாமரைப் போதிலே

வைத்து வேறே கவலை அற்றுமேல் உற்றுபர
வசமாகி அழியாதது ஓர்

ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (8)

பொருள்:  இப்பாடலில் பல அரிய கருத்துக்களை அபிராமிபட்டர் கூறியுள்ளார். சத்சங்கத்தின் மேன்மையும். ஐம்புலன்களையும் அடக்கி, ஆணவத்தை வென்று மனத்தாமரையில் அன்னையை அமரச்செய்வதே ஒரு ஆத்மசாதகன் முக்தி அடைய செய்ய வேண்டும் என்பதை அருமையாக காட்டுகின்றார் அபிராமி பட்டர். 

                                                                                                                                                                                      அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

2 comments:

கோமதி அரசு said...

அன்னை கொலுவீற்றிருக்கும் படங்களும் பாடல் பகிர்வும் அருமை.

நவராத்திரி நாயகி அனைவருக்கும் நலங்களை தரட்டும்.

S.Muruganandam said...

//நவராத்திரி நாயகி அனைவருக்கும் நலங்களை தரட்டும்//

அப்படியே அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். கோமதி அம்மா.