திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷி அம்பாள்
அன்ன வாகன சேவை
காமாக்ஷி அம்பாள்
அம்மன் அன்ன வாகனத்தில் கொலு
அலை மகள்
மற்றும் வெள்ளீஸ்வர ஐதீகம்
கலைமகள்
அபிராமி அம்மை பதிகம்
வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன(து) அன்பெனுஞ் சிறகால்
வருந்தாமலே அணைத்துக்
கோடாமல் வளர்குஞ்சரம் தொட்டுஎறும்பு கடை
கொண்டகரு ஆன சீவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினைல்
குறையாமலே கொடுத்து
நீடாழி உலகங்கள்யாவையும் திருஉந்தி
நெட்டு தனிலே தரிக்கும்
நின்னை அகிலங்களுக்கு அன்னை என்று ஓதாமல்
நீலி என்று ஒதுவாரோ?
ஆடாய நான் மறையின் வேள்வியால் ஓங்கு புகழ்
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (5)
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (6)
அலை மகள் கலை மகளுடன் மலை மகள்
காமாக்ஷி அம்பாள்
மற்றும் வெள்ளீஸ்வர ஐதீகம்
சுக்கிராச்சாரியார் வெள்ளீஸ்வரரை வழி பட்டு கண் பெறுதல்
அபிராமி அம்மை பதிகம்
வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன(து) அன்பெனுஞ் சிறகால்
வருந்தாமலே அணைத்துக்
கோடாமல் வளர்குஞ்சரம் தொட்டுஎறும்பு கடை
கொண்டகரு ஆன சீவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினைல்
குறையாமலே கொடுத்து
நீடாழி உலகங்கள்யாவையும் திருஉந்தி
நெட்டு தனிலே தரிக்கும்
நின்னை அகிலங்களுக்கு அன்னை என்று ஓதாமல்
நீலி என்று ஒதுவாரோ?
ஆடாய நான் மறையின் வேள்வியால் ஓங்கு புகழ்
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (5)
பொருள்: சீவராசிகள் என்னும் உயிர்களை படைப்பவள் அன்னை. அந்த்ப்பப்யிர்கள் வாடாமல் என்றும் தழைத்து ஓங்கி உயர்ந்து வளர, தன் அருள் மழை பொழிந்து அப்பயிர்களை இன்பக்கடலிலே ஆழ்த்தி தன் அன்பென்னும் சிறகால் அணைத்துக் கொள்பவளும் அவளே. வேதங்களின் வாக்குப்படி ந்தைபேரும் யாகங்களால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமான திருக்கடவூரில் உறைபவளே! அமுதீசரின் இட பாகத்தை விட்டு ஒரு போதும் அகலாதவளே! கிளியை தன் திருக்கரத்தில் ஏந்தியவளே!அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமியே என்று அன்னையின் கருணையை வியந்து பாடுகின்றார் அபிராமி பட்டர்.
பல்குஞ்சரம் தொட்டு எறும்புகடை ஆனது ஒரு
பல் உயிர்க்கும் கல் இடைப்
பட்ட தேரைக்கும் அன்றுப்பவித்திடு கருப்
பையுறு ஜீவனுக்கும்
மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றும் ஓரு மூவருக்கும் யாவர்க்கும் அவரவர்
மனசலிப்பு இல்லாமலே
நல்கும் தொழிற்பெருமை உண்டாய் இருத்தும்மிகு
நவநிதி உனக்கு இருந்தும்
நான் ஒருவன் வறுமைய்யால் சிறியன் ஆனால்அந்
நகைப்பு உனக்கே அல்லவோ?
அல்கலந்து உம்பர்நாடு அளவேதுக்கும் சோலை
ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (6)
பொருள்: யானை முதல் எறும்பு வரை உள்ள பல்விதமான உயிர்களுக்கும், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருவில் உள்ள ஜீவனுக்கும் மற்றும் அசையும், அசையா பொருள்களுக்கும், தேவர் கூட்டத்திற்கும், மும்மூர்த்திகளுக்கும், மற்றும் அகிலத்தி; உள்ள அனைவருக்கும் அவரவர் மனம் சோர்வடையாதபடி அவர்கள் செய்ய வேண்டிய தொழில்களை தந்தருளும் பெருமைஉனக்கு உண்டு. அடர்ந்து இருள் செறிந்து வானுலகை அளப்பது போல் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின் வாழ்வே! அமுதீசர் இடப்பாகம் ஒரு போதும் அகலாத அன்னையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அனைவருக்கும் அளவிலாது அருள்புரிபவளே! அபிராமவல்லியே! நவநிதியும் உன்னிடம் இருந்தும் உன் பகதனாகிய நான் வறுமையில் வாடினால் அதனால் உண்டாகும் இகழ்ச்சி உனக்கல்லவோ? என்று அன்னையிடம் வினவுகிறார் அபிராமி பட்டர்.
அம்மன் அருள் தொடரும். . . . .. ...
அம்மன் அருள் தொடரும். . . . .. ...
2 comments:
நவராத்திரி நாயகி தரிசனம் அருமை.
வாழ்த்துக்கள்.
எல்லாம் அன்னையின் அருள்.
Post a Comment