இந்த வருடம் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்ட சுவாமிகளின் தொகுப்பு இப்பதிவு.
முதலில் நாம் காண்பது திருமயிலை கபாலீஸ்வரரின் தீர்த்தவாரி.
கடற்கரைக்கு கடலாட்டு காண வரும் கபாலீஸ்வரர்
இந்த வரும் சைவ தெய்வ திருமூர்த்தங்களும், வைணவ திருமூர்த்தகளும் ஒரே இடத்தில் கடலாட்டு கண்டருளினர்.
பஞ்ச பர்வ உற்சவம் கண்டருளும் சந்திரசேகர சுவாமியாக மாசி பௌர்ணமியன்று கபாலீஸ்வரர் கடற்கரைக்கு எழுந்தருளினார்.
கடல் வாழ் உயிரினங்களுக்கும்
அருள் பாலிக்கின்றார் கபாலீஸ்வரர்
அஸ்திர தேவர்
அஸ்திர தேவர் கடலாடி தீர்த்தம் தருகின்றார்.
அப்போது உடன் கடலாடும் பக்தர்கள்
கடலாடிய பின்
கடற்கரையில் பல்வேறு
திரவியங்களால் அபிஷேகம்
பின்னர் நைவேத்யமாக வெள்ளரிக்காய் படைக்கப்படுகின்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கிய பின் கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றார்.
மாசி மக தீர்த்தவாரி பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்
அம்மையின் ஞானப்பலுண்ட ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் திருமயிலையின் மாசி கடலாட்டைப் பற்றி பாடிய பதிகம்
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
கபாலீச்சரம் அமர்ந்தான் கடலாட்டு
காணும் அற்புத காட்சி
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
கபாலீச்சரம் அமர்ந்தான் கடலாட்டு
காணும் அற்புத காட்சி
பொருள்: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னை மரங்கள் நிறைந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞானசம்பந்தர் திருமயிலையில் எலும்பை பெண்ணாக்கிய அற்புதம் செய்த போது பாடிய இப்பதிகத்தில் கபாலீஸ்வரப் பெருமானின் பல்வேறு திருவிழாக்களில் மாசி கடலாட்டு விழாவை காணாமல் போகலாமா? என்று வினவுகிறார்.
மாசிக் கடலாட்டு தொடரும் >>>>>>>
2 comments:
வணக்கம்
ஊர் நிகழ்வை மற்றவர்களும் இரசிக்கும் படி பதிவாக பதிவிட்மைக்கு வாழ்த்துக்கள் படங்கள் மிக அழகு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்
Post a Comment