உற்சவர்கள் வாகன சேவை
உற்சவர்களின் தங்க வாகன சேவை தொடர்ச்சியாக இப்பதிவில் முருகப்பெருமானின் மூன்று கோல வாகன சேவையையும் தாயார் இருவரின் வாகன சேவையையும் காணலாம் அன்பர்களே.
ஷண்முகர் வெள்ளிரத சேவை
முன்புற தோற்றம்
வெள்ளிரதமும் இராஜ கோபுரமும்
ஷண்முகரின் பின்னழகு
தங்க ரதம்
தங்கரதத்தில் பால சுப்பிரமணியர்
தங்கரதம் பின்னழகு
தங்க மயில் வாகனத்தின் முன்னழகு
முத்துகுமார சுவாமி
சுவாமிக்கு அமைத்துள்ள மலர் பிரபைதான் எவ்வளவு பிரம்மாண்டம் மற்றும் அழகைப் பாருங்கள்.
தங்க மயில் வாகனத்தில் முத்து குமாரசுவாமி
தங்க நாக வாகனம்
தங்க நாக வாகனத்தில் கஜவள்ளி வனவள்ளி
பூக்கடை
கந்த சுவாமி கோவிலென வழங்கும்
ஸ்ரீ முத்துக் குமார சுவாமி தேவஸ்தானம்
, சென்னையின் நெரிசல்
மிகுந்த பகுதியான பாரிமுனையிலே இராசப்ப செட்டி தெருவிலே
கடைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது . வடக்கு
நோக்கிய ஐந்து நிலை கோபுரம்
நம்மை வா வா என்று
அழைக்கின்றது, உள்ளே நுழைந்தால் எதிரே
முழுமுதற் கடவுளான கணநாதரை தரிசிக்கலாம். உள் வாயிலின்
மேலே வள்ளி
திருமணக் கோல சுதை சிற்பம்
கண்ணுக்கு விருந்து. கோவிலை
வலம் வந்தால் கிழக்குப் பகுதியில்
துவஜஸ்தம்பம், கிழக்கு சுவரில் அழகிய
சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஜன்னல்கள், சிவபெருமான்
சன்னிதிற்கெதிராக சிவலிங்க வடிவிலும், கந்த சுவாமி சன்னிதிற்கெதிராக
நட்சத்திர வடிவிலும், தெய்வயானை அம்மன் சன்னதிற்கெதிராக மலர்
வேலைப்பாட்டுடனும் கலை நயத்துடன் ஜன்னல்கள்
அமைக்கப்பட்டுள்ளன வெளியே இருந்தே எம்பெருமானையும்
தாயார்களையும் தரிசிக்க ஏதுவாக அமைந்துள்ளன.
பின்
உற்சவர் மண்டபம், ஆறுமுகனுக்கு
அறுகோண ஆஸ்தான மண்டபம், ஒரு
சுற்றுடன் விளங்குகின்றது "ஓம் சரவண பவ"
என்னும் சடாக்ஷர வடிவாய் விளங்கும்
இந்த மண்டபத்தில் மூலவருக்கு
இனையான சக்தியுடன் இத்தலத்தில் விளங்கும் பரம
ஞான மூர்த்தியான தந்தைக்கே உபதேசம் செய்த ஞான
பண்டித சாமி கோடி கோடி
மன்மத லாவண்யத்துடன் பொன்னொளி
மின்னும் வதனத்தினனாய், தேவிமார்கள் இருவருடனும், மயில் வாகனத்துடன், மன
இருள்,அறியாமை, துன்பம் ஆகியவற்றை நீக்கும்
சக்தி வேலுடனும் சேவல் கொடியுடனும்
முத்துக் குமார சுவாமியாய் அருக்
காட்சி தருகின்றார். மண்டபத்தின்
முகப்பில் திருக்கோவிலின் முத்திரை எடுப்பாக சலவைக் கற்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
என்ன
ஒரு ஈர்ப்பு எம்பெருமானின் திருமுருக
வதனத்திலே, அந்த வடிவழகனை விட்டு
அகல மனம் மறுக்கின்றது.
நம் கண் பட்டுவிடுமோ என்று
தான் எம்பெருமானுக்கு திருஷ்டிப்
பொட்டு இட்டிருக்கின்றனர்.
மூலவரைப் போலவே கிழக்கு நோக்கி
அமைந்துள்ளது உற்சவர் மண்டபம், எதிரேயே
கண்ணாடி மண்டபம், எம்பெருமான் சர்வலங்கார பூஷிதராய் எழுந்துருளும்
போது நாம் சேவிக்க. மனம்
குளிர குஹப் பெருமானின் வடிவழகைக்
கண்டு வணங்கி பின் வலம்
வந்தால் நவக்கிரக சன்னதி, இம்மண்டபத்தில் மாரி
செட்டியார் இத்திருக்கோவிலை உருவாக்கிய வரலாறு சுதை சிற்பமாக
அமைக்கப்பட்டுள்ளது. சரவணப்பொய்கை
திருக்குளக்கரையில் சித்தி புத்தி சமேதராய்
ஸ்கந்த பூர்வஜன் தனி சன்னிதி, சித்தி
புத்தி என்னும் தேவிமார்கள்
இருவருடன் அமர்ந்த நிலையில் அருட்காட்சி
தருகின்றார் பிள்ளையார். அவருக்கு
வலப்பக்கத்திலே , காசி விஸ்வனாதர், விசாலாக்ஷி
சன்னதி. சென்னையில்
அமைந்துள்ள பல கோவில்கள் போலவே
இடப்பற்றாக் குறையினால் திருக்கோவிலின் உள்ளேயே திருக்குளம் மிகச்
சிறப்பாக அமைந்துள்ளது. குளக்கரையிலே
அற்புதமான சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சரவணப் பொய்கை திருக்குளத்தில்
வெல்லம் கரைத்தால் தீராத நோய்கள் எல்லாம்
தீருகின்றது. சித்திரை மாதம் தெப்போற்சவம் இத்திருக்குளத்தில்
நடைபெறுகின்றது.
குளத்தில்
நம் மெய் அழுக்கை கழுவிக்கொண்டு
மேலே ஏறினால் அக அழுக்கை
நீக்கும் ஆடல் வல்லானின் தேக்கு
மரத்தால் ஆன அழகிய மர
சிற்பம். அந்த
நிருத்த மண்டபத்தின் இறுதியில் ஞான
தண்டாயுத பாணி சன்னிதி
மற்றும் பள்ளியறை. இந்த இரு சன்னதிகளின்
கதவுகளில் சிவபெருமானின் 108 தாண்டவக்
கோலங்களும் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன. தேக்கு மரத்தால் ஆன
அழகிய கலை பொக்கிஷம். அடுத்து சோமாஸ்கந்தர்
மற்றும் நடராஜர் சன்னதிகள் கோஷ்டத்தில்
விநாயகர் ஆலமர் கடவுள், பிரம்ம முருகர், நாக
சுப்பிரமனியர், குக்குட நாதர், மஹா லக்ஷ்மி, மஹா விஷ்ணு, துர்க்கை ஆகிய தெய்வங்கள்
அருள் பாலிக்கின்றனர்.
இனி
அர்த்த மண்டபத்தில் நுழைவோமா? மண்டபத்திற்குள்
நுழையும் போது ஒன்றை கவனிக்கலாம், வாயிலின்
இரு பக்கமும் சிற்பங்கள் வலப்பக்கம் சைவ புராண சம்பந்தப்பட்ட
சிற்பங்கள், இடப்பக்கம் வைணவ புராண சம்பந்தப்பட்ட
சிற்பங்கள் குறிப்பாக கிருஷ்ண லீலை சிற்பங்கள்,
அரியும் சிவனும் ஒன்று என்பதை
உணர்த்துகின்றன இச்சிற்பங்கள். வடக்கு நோக்கி வினாயகர் சன்னதி, அடுத்து பால
முருகன் சன்னதி(நித்யோத்ஸவர்), கோஷ்டத்தில்
வீரபாகு மற்றும் சூரியன். கிழக்கு
நோக்கி உற்சவ மூர்த்திகள் சன்னதி,
வனவள்ளி சன்னதி, மூலவர்
சன்னதி வள்ளி
தெய்வானையுடன் மாரி
செட்டியாருக்காக தானே வந்து அருளிய
கந்த சுவாமி மூர்த்தி
சிறிதனாலும் கீர்த்தி பெரிதான எம்பெருமான் முருகன்,
விழாக் காலங்களில் தங்க கவசத்தில் எம்பெருமானைக்
காண கண் கோடி வேண்டும்.
கஜவள்ளி சன்னதி, விஸ்வனாதர் சன்னதிகள்
அமைந்துள்ளன. தெற்கு
முகமாக மீனாக்ஷ’ அம்மன்
சன்னதி, ஆறுமுகர்
சன்னதி மயில்
மேல ஷண்முகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகு.
இம்மண்டபத்தில் அற்புத சிற்பங்கள் நிறந்த தூண்கள் உள்ளன, அம்மை
சிவ பூஜை கோலம், மயில்
மேல் கால் ஊன்றி நின்ற
முருகர், சதுர்முகன், வினாயாகர், தசாவதார கோலங்கள், ஆட
வல்லான், பைரவர், பழனி ஆண்டிக்கோலம்,
மத்தளம் வாசிக்கும் நந்தி, கல்யாண சுந்தரர்,
ரிஷபாரூடர், கோபால கிருஷ்ணர், அன்னாரூட
பிரம்மா, வில் அம்பு தாங்கிய
முருகர், தவழும் கண்ணன், என்று பல் வேறு
சிற்பங்கள் அனைத்தும் கலை அழகுடனும் தெய்வீக
ஒளியுடனும் மிளிர்கின்றன. கூரையிலே சரவணபவ சக்கரம் நமக்கு
அருளை வழங்குகின்றது.
அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment