திருகல்யாணக் கோலம்
திருக்கல்யாணக்கோலத்துடன்
இலங்காபதி இராவணன். அவன் சிறந்த சிவ பக்தன் அதே சமயம் மிகுந்த உடல் பலமும் ஆணவமும் கொண்டவன் பல காலம் தவம் செய்தும் எம்பெருமான் மனம் இரங்காததால் கயிலை மலையையே தூக்க துணிந்து விடடான் மலை சிறிது ஆடியது உமையம்மை அஞ்ச எம்பெருமான் தனது இடது கால் பெருவிரலால் சிறிது அழுத்தி அவனது ஆணவத்தை அடக்கினார். அரக்கன் மலங்கி பாதாளத்தில் விழுந்தான். இதை ஆளுடையப்பிள்ளையாம், அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர், தமது தேவார பதிகத்திலே இவ்வாறு பாடுகின்றார்.
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
நலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.
பின்னர் காம்போதி இராகத்தில் சாம கானம் பாடி எம்பெருமானை மகிழ்வித்து வேண்டிய வரம் பெற்றான் இராவணன். எனவேதான் எல்லா திருக்கோவில்களிலும் கைலாய வாகனத்தில் இராவணன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அவன் தவம் செய்த போது உருவாக்கிய இராக்ஷஸ் தால் எனப்படும் ஏரி மானசரோவரின் இரட்டை ஏரியாக திருக்கயிலாய மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தர் தனது பதிகங்களின் எட்டாவது பாடலில் எம்பெருமான் அசுரன் இராவணனின் செருக்கை அழித்ததை பாடியுள்ளார்.
4 comments:
நேரில் தரிசித்ததைப்போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
ஆண்டவன் அனுபூதி அருளும் குருசாமி அவர்களே வருக ஐயனின் தரிசனம் என்னும் அருந்தேன் வரும் காலங்களிலும் வந்து பருகுக.
அருமையான புகைப்படங்கள் மற்றும் பதிவு ஐயா
குறிப்பாக "கோபுர வாயில் தரிசனம்" மற்றும் "கோபுரத்துடன் கோடி புண்ணியம் தரும் தரிசனம்"
பெரிதாக்கிக் பார்த்த பொழுது உள்ளம் மகிழ்ந்தேன்
நன்றி
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி. தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்LOGAN ஐயா.
Post a Comment