Tuesday, April 19, 2011

வாருங்கள்! வாழ்த்துங்கள்!

வாரணமாயிரம் சூழவலஞ்செய்து
நாரணநம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (1)

நாளைவதுவை மணமென்றுநாளிட்டு
பாளைகமுகு பரிசிடைப்பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தனென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன்தோழீ! நான். (2)

இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசிமந்திரித்து
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (3)

நால்திசைத்தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனசிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புணைகண்ணிப் புனிதனோடென்தன்னை
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (4)

கதிரொளிதீபம் கலசமுடனேந்தி
சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையார்மன்ன னடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன்தோழீ! நான். (5)

மத்தளங்கொட்ட வரிசங்கம்நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்தோழீ! நான். (6)

வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து
காய்சினமாகளிறன்னான் என்கைபற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன்தோழீ! நான். (7)

இம்மைக்குமேழேழ்பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன்நம்பி
செம்மையுடையதிருக்கையால் தாள்பற்றி
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்தோழீ! நான். (8)

வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (9)

குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கலவீதி வலஞ்செய்துமணநீர்
அங்கவனோடும் உடன்சென்றாங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (10)

ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல்
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர்
வாயுநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (11)
என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் கோதை நாச்சியார் ஆயனுக்காக கனாக் கண்டது போல் கனாக்கண்ட


எங்கள் அருமை மகளுக்குத் திருமணம்
மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் திருவருள் துணை கொண்டுவரும் ஜுன் மாதம் 8ம் நாள் புதன் கிழமை
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சென்னை, அசோக் நகர்

உதயம் கல்யாண மண்டபத்தில்
உதயம் தியேட்டர் அருகில்)நடைபெறவுள்ளது.


வரவேற்பு - ஜூன் மாதம் 7ம் நாள் அன்றுமாலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும்


தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து

குறைவொன்றுமில்லாத கோவிந்தனும் அகலகில்லேன் இறையுமென்று அவன் மார்பில் உறையும் அலர்மேல் மங்கையும்
போல வாழ வாழ்த்த இரு கரம் குவித்து வேண்டுகிறோம்.


அடியோங்கள்முருகானந்தம் - அருள்வாணிமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மீனாக்ஷி அம்பாள் பொன் விமானம்பொற்றாமரைத் திருக்குளம்
ரிஷபாரூடராய் அம்மையப்பர்
தாங்கள் தங்கள் வாழ்த்துக்களை இங்கு சென்றும் பதிவு செய்யலாம்.நல்வாழ்த்துக்கள்11 comments:

Sankar Gurusamy said...

மணமக்கள் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்...

அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....

http://anubhudhi.blogspot.com/

குமரன் (Kumaran) said...

மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

Kailashi said...

மிக்க நன்றி குமரன், சங்கர் குருசாமி ஐயா.

Logan said...

திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள் ஐயா,

Kailashi said...

தாங்கள் நேரில் வந்து வாழ்த்தினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் தங்களுடைய மின்னஞ்சல்/ முகவரி அனுப்பி வைக்கவும் LOGAN ஐயா.

Logan said...

வேலை நிமித்தம் சிங்கையில் தொடர்கிறேன்,

அழைப்பிற்கு நன்றி ஐயா

My Email : Loganathan.e@gmail.com

Kailashi said...

பரவாயில்லை, மின்னஞ்சல் மூலம் பத்திரிக்கை அனுப்பி வைக்கிறேன் முடிந்தால் நேரில் வந்து வாழ்த்தவும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நந்தினி-பாலாஜி் தம்பதியர்க்கு இனிய இல்லற வாழ்த்துக்கள்!
கோதையும் தமிழும் போல், மணிவாசகரும் அருளும் போல், நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! பல்லாண்டு பல்லாண்டு!

முருகானந்தம்-அருள்வாணி தம்பதியர்க்கும் அகமகிழ்ச்சி பொங்க இனிய வாழ்த்துக்கள் :)

கைலாஷி ஐயா திருவடிகளே சரணம்!

Kailashi said...

//கோதையும் தமிழும் போல், மணிவாசகரும் அருளும் போல், நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! பல்லாண்டு பல்லாண்டு!//

அனந்த கோடி நன்றிகள். தாங்கள் நேரில் பெசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Logan said...

Sir By Gods Grace i believe marriage is went well. convey my regards to the couple.

Kailashi said...

//By Gods Grace i believe marriage is went well. convey my regards to the couple//

Yes, by His grace every thing went well.

Thank You very much.