Thursday, January 5, 2023

சுவாமியே சரணம் ஐயப்பா - 22

நீலி மலையேற்றம் 

நீலிமலை ஏற்றம்
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே
அருள் காவலனாய் இருப்பார்





இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

               4                       10     11     12      13     14     15     16     17     18     19     20    21     22     23     24     
 

ஒரு காலத்தில் நீலி மலையேற்றமும் கரிமலையேற்றம் போலத்தான் இருந்தது. ஆனால் தற்போது சிமென்ட்  படிகள், டுவில் கம்பிகள் இரு பக்கமும்  கடைகள் என்று வசதிகள் அதிகமாகிவிட்டன,  அதிக சிரமமில்லாமல் இம்மலையை ஏறலாம். அழுதை மலை மற்றும் கரிமலை ஏறி கால் கனத்தும், இறக்கத்தில் முழங்கால் வலியோடும் வரும் பெரிய பாதையில் வந்த பக்தர்களுக்கு இந்நீலி மலையேற்றம் மிகவும் சிரமமாகத்தான் இருக்கும்.  ஆயினும், ஐயப்பனை நெருங்கி விட்டோம் என்ற ஆனந்தத்தினால் சோர்வு தெரியாது. பக்தர்கள் களைப்பை போக்க நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா பக்தர்கள் இங்கு மிக சப்தமாக சரண கோஷமிட்டுக் கொண்டே மலை ஏறுகின்றனர். பல இடங்களின் பக்தர்களின் வசதிக்காக சாய்வுகளையும் அமைத்துள்ளனர்.  



நீலிமலையில் வசித்த மதங்க மகரிஷிதன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்த தாகவும்அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில்வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதைஎன்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்பட்டதுஇன்று கழுதைகளுக்கு பதிலாக ட்ராக்டர்கள் பொருட்களை சுமந்து செல்கின்றன.  இறங்கும் போது இப்பாதையை  அதிகமான  பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.. 



இவ்வழியில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்கள் மற்றும் மூலிகைக்குடிநீர் வழங்கும் மையங்கள், சுவாசக் கோளாறு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் ஆக்சிஜன் நிலையங்கள் தேவசம் போர்டினரால் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நடுநடுவே  இளைப்பாற் பதினெட்டு மண்டபங்கள் சன்னிதானம் வரை உள்ளன.  நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடுஇப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சி மேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னி சுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதைகளை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.



ஏற்றம் சிறிது கடினம் என்பதினால் பக்தர்கள் 
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
 தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்   - 


  என்று பாடிக்கொண்டே மலையேறுகின்றனர். அவ்வாறு  மலையேறினால் ஐயப்பன் 

நல்ல பாதையைக் காட்டிடுவார்
சபரி பீடமே வந்திடுவார்
சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் 
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனை ஏறிடுவார். 


அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் சபரிமலை என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள்.

மதங்கொண்ட ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்து தவத்தின் வலிமையால் தனது சீடர்களுடன் பிரம்மலோகம் செல்லும் பாக்கியம் பெற சபரி தவம் செய்த இடம் இதுதான். மதங்க முனிவரின் முதல் சீடரான சபரி” மாதங்க முனிவரோடு பிரம்மலோகம் செல்லும் பாக்கியம் கிடைத்தும் இராமபிரான் மீது கொண்ட பக்தியால் அவரைப் பூலோகத்தில் பூசிப்பதற்கும் அதன் பின்னர் பிரம்மலோகம் செல்வதற்கும் பிரம்மதேவனிடம் வரத்தினைப் பெற்றுக் கொண்டு தவம் செய்து இராமபிரானைச் தரிசித்த இடமும் இதுதான்.

இந்த மூதாட்டிக்கு இராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்… ஆனால்பகவான் பக்தனைத் தேடிதனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம். அவ்வகையில், இராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டுவிஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்துஇன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள்இந்த மலையில் தங்கி இராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்ப ழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்துஇனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். இராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.

தான் கடித்த பழங்களையே தந்தனள் தாய் சபரி 
தருவதற்கொன்றும் இல்லை தலவனே நீ எனை ஆதரி - என்று இந்நிகழ்வைப் போற்றிப் பாடுகின்றனர் பக்தர்கள்.



குரு சுவாமியுடன்

எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம். இப்பகுதி மரக்கூட்டம் என்றழைக்கப்படுகின்றது. பல நூற்றாண்டிகளைக் கடந்த பிரம்மாண்ட மரங்களை காணலாம். வனத்துறையினர் அம்மரத்தை பற்றிய தகவல் பலகைகளை மரங்களில் அமைத்துள்ளனர். பெரிய மலை அணில்கள், கருங்குரங்கள் முதலிய  வன விலங்குகள் இப்பகுதியில் கண்ணில் படுகின்றன.  இந்த இடத்தில் இராமபிரானைக்  காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தார். இச்சபரிபீடத்தில் சிதறு  தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்றார்கள் இந்த  ஸ்ரீசபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள்.


சபரி பீடத்திற்கு முன்பாக சரம் வழிபாடு கவுண்டர் உள்ளது. . சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதி ஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டு வந்த சரம், வில், வேல் ஆகியவற்றை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்கின்றனர்..

இச்சமவெளிப்பகுதியும் முழுதுமாக சிமென்ட் பாதையாக மாறி விட்டது. அநேகமாக அடியோங்கள் இரவு மலையில் தங்குவோம் எனவே இம்மலையேறும் சமயம் இரவாகத்தான் இருக்கும்.   பாதையின் இருபுறமும்   விளக்குள் அமைத்துள்ளனர். அதனால் பகல் போலவே இருக்கின்றது. நெடிதுயர்ந்த மரங்கள் இருபக்கமும் இன்னும் அமைந்துள்ளன வெட்டாமல் விட்டிருக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பிடங்களையும் அமைத்துள்ளனர். சன்னிதானத்திலிருந்து  வரும் ஸ்லோகங்களையும் கேட்டுக்கொண்டே சரண கோஷத்துடன் ஐயனைக் காணப்போகின்றோம் என்ற ஆனந்தத்துடனும் நடை போடுகின்றோம். 


சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின்  தங்க கோயிலை தரிசித்தவுடனேயேபஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுபபி மனம் உற்சாகமாகிறது. சரங்குத்தியிலிருந்தே ஐயப்பனின் நான்காவது மலையான சபரிமலை ஆரம்பமாகிறது. நெருங்க நெருங்க சாமியே சரணம் (ஐயப்பா’ என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப் பிளக்கிறது. அடுத்த பதிவில் பதினெட்டாம்படியேறலாம் அன்பர்களே.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Sunday, January 1, 2023

சுவாமியே சரணம் ஐயப்பா - 21

                                                   பம்பா கணபதி தரிசனம் 


அன்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு  (2023)  வாழ்த்துக்கள்


நீலி மலையேற்றம் சிவபாலனும் துணை வருவான்
காலமெல்லாம் நமக்கே அருட்காவலன் ஆகிடுவான்.

இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17          18    19    20    21     22     23     24     
 

பெருவழியில் செல்லும் பக்தர்களும், சாலக்காயம் வழி வரும் பக்தர்களும்,  வாகனம் மூலம் வரும் பக்தர்களும்  பம்பை வந்தடைகின்றனர். அனைவரும் சன்னிதானம் செல்ல  நீலிமலையில் ஏறும் போது முதலில் பம்பா கணபதியை வழிபடுகின்றனர். நீலி மலையிலிருந்து சன்னிதானம் வரையிலான இப்பாதை சிறியபாதை என்றும் அறியப்படிகின்றது. வெள்ளதிற்கு முன்னர் இணையம் மூலமாக தரிசனத்திற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் முன்பதிவு நிலையத்திற்கு சென்று அதற்கான  அனுமதி சீட்டை  பெற்றுக்கொள்கின்றனர். பெருவழியில் வருபவர்கள் சுவாமியை தரிசனம் செய்யும் வண்ணம் சபரிமலையிலும் செய்தால் ல்லது. திருப்பதியில் மலையேறி வருபவர்களுக்கு தனி வரிசை உள்ளது போல இங்கும் அமுல்படுத்தலாம். அதற்கான அடையாள சீட்டுகளை கரிமலை உச்சியில் அல்லது இறக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வழங்கலாம்..



பம்பா கணபதி சன்னதி


அனைத்து பக்தர்களும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக செல்வதற்கு முன் பம்பா கணபதியை தரிசிக்கின்றனர். இவ்வளாகத்தில் ஆதி மூல கணபதி, பகவதி (பார்வதி),  நாகர், இராமர் மற்றும் அனுமன் சன்னதிகள்   அமைந்துள்ளன. அனுமன் இராமன் சன்னதிக்கிடையில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு ஏதுவாக  மண்டபம் அமைத்துள்ளனர். 
 
இராமாயண காலத்தில் இராமபிரான் சபரிக்கு அருளிய போது அனுமனுக்கு கலிகாலத்தில் என்னை பார்த்தவாறு இங்கு எழுந்தருளியிருப்பாய் என்று அருளியபடி அனுமன் சபரி மலை ஐயப்பனை பார்த்தவாறு எழுந்தருளியுள்ளார். 

ஐயப்பனை தரிசிக்க இயலாத 10 வயது முதல் 50 வயதில் உள்ள பெண்கள் இதற்கு மேல் மலையேற அனுமதி இல்லை.

இவ்வருடம் முதல் அனைத்து பக்தர்களும் முன்பதிவு செய்த பின்னரே தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர் என்பதால் பக்தர்களின் விவரம் இம்மண்டபத்தில் சரி பார்க்கப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கின்றனர்.


இராமர் -  அனுமன் சன்னதிகள் 


கணபதியை தரிசித்து இருமுடிக் கட்டில் சுமந்து வந்த ஒரு தேங்காய்களில் ஒன்றை இங்கே சிதறு காயாக உடைத்து விட்டே பக்தர்கள் மலையேறுகின்றனர். அனுமன்,  இராமபிரான் கொடுத்த வரத்தின்படி ஐயப்பனைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளார். தற்போது பம்பையில் கட்டு நிறைப்பதற்கான வசதிகள் உள்ளன.  பந்தளராச வம்சத்தினரின் பிரதிநிதிகளை வணங்கி, தட்சணை கொடுத்து அனுமதி பெற்றுக்கொண்டு நீலி மலை ஏறத்தொடங்குகின்றனர்.



நீலி,  மதங்க முனிவரின் மகள் என்றும், தன் தந்தையுடன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள். அவளது பெயரால் இம்மலை நீலிமலை என்றழைக்கப்படுகின்றது.

ஐயப்பன் ஜனனம் 

வன் புலி வாகனன்


பம்பையிலிருந்து சன்னிதானம் வரை சென்று வர டோலி வசதியும்  உள்ளது. முடியாதவர்கள்  மற்றும் வயதானவர்கள் இவ்வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம். மலையேறும் போது ஐயப்பன் ஜனனம், வன்புலி வாகனனாக ஐயன் வரும் சுதைச்சிற்பங்களை தரிசித்துக்கொண்டே நீலி மலையேற்றத்தைத் துவக்குகின்றோம். 



சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம்: வெளிப்படையாக விநாயருக்கு சிதறு தேங்காய் உடைப்பது என்பது நமது விகனங்கள்(தடைகள்) அனைத்தும் அந்த தேங்காய் உடைந்து சிதறுவது போல் மறையும் என்று பொருள் படும், ஆனால் அதன் உண்மையான தாத்பரியம் அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே உள்ள அமிர்தரசமாகிய இளநீர் இருக்கும் என்பதை உணர்த்துகின்றது. 




குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Saturday, December 31, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 20

                                                               பெரியானை வட்டம் 






கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி 
சங்கரன் மகனைக் கும்பிடுவார் 
சங்கடம் இன்றி ஏறிடுவார் 

இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    21     22     23     24     
 

ஐயனின் சன்னிதானம் அமைந்துள்ள சபரிமலை ஏறுவதற்கு முன்னர் தங்கும் தாவளம் பம்பா பள்ளத்தாக்கில் உள்ள பெரியானை வட்டம் அல்லது சிறியானை வட்டம் ஆகும். கங்கை தி போல் புண்ணிய தியாம் பம்பையில் முதலில் நீராடுகின்றனர். பம்பை தி ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் புண்ணிய தியாகும். ஐயப்பன் பாலனாக பந்தளராஜவிற்கு கிடைத்தது பம்பையின் கரையில்தான். மகிஷியை வதம் செய்ய ஐயன் காட்டிற்குள் வந்த போது தேவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் ஐயனுக்கு பொன் சிம்மாசனம் அமைத்து அதில் மணிகண்டனை அமர்த்தி அபிஷேகம் செய்வித்து பூசை செய்தனர் அந்த அபிஷேக தீர்த்தம் பம்பையில் ஓடியது. இன்றும் பம்பை பொன்னம்பல மேட்டில்தான் உருவாகின்றது.





பம்பையாற்றைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான புளிச்சமலையில்  உற்பத்தியாகி ஆலப்புழை, பத்தனம்திட்டா வழியாக 176 கி.மீ தூரம் ஓடி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புன்னமடா, வேம்பநாடு ஏரியில் கலக்கின்ரது. கேரளத்தின் மூன்றாவது பெரிய நதி பம்பை.

புராணங்களின் படி சபரிமலைக் காட்டில் மதங்க முனிவர் தவம் செய்து வந்தார். இவரது சிஷ்யைதான் சபரி. இவரது பெயர்தான் சபரிம்லைக்கு சூட்டப்பட்டுள்ளது. சபரியைப் போலவே நீலி என்ற பெண்ணும் அவரது ஆசிரமத்தில் சேவை செய்து வந்தார். இராமரும், இலக்குவனும் சீதையை தேடி வரும் போது அவர்களுக்கு அன்னம் பாலிக்கும் பாக்கியம் இவருக்கு கிட்டியது. அப்போது இவர் இராமபிரானிடம் அடியாளுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று பிரார்தித்தாள்.  அதற்கு இராமபிரான், பெண்ணே! பூமியில் மனிதர்கள் பிறப்பது, புண்ணிய செயல்கள் புரிவதற்காகத்தான். நீ இந்த பூலோகத்தில் செய்ய வேண்டிய சேவை இன்னும் நிறைய இருக்கின்றது. உன்னை ஒரு நீருற்றாக மாற்றுகின்றேன். அதில் பொங்கி பெருகும் நீர் அருவியாக விழுந்து நதியாக பெருகி ஓடும். இந்த பூலோகம் உள்ள வரையில் நீ நதியாய் ஓடி, மக்களின் பசியும், தாகமும் போக்குவாய். பூலோகம் அழியும் போது நீ என் திருவடி வந்து அடைவாய். நீ நதியாய் பெருகி ஓடும் போது ஏற்படும் ஒலி இக்காடு முழுவதும் பம்பை ஒலி போல் கேட்கும். எனவே மக்கள் உன்னை பம்பை என்று செல்லப் பெயரிட்டு அழைப்பர். இங்கிருக்கும் தர்மசாஸ்தாவை தரிசிக்க வரும் பக்தர்கள் உன்னிடட்தில் பிதுர் காரியம் செய்து முன்னோரை மகிழ்விப்பர். உன் ஒரு துளி  அந்த பக்தர்கள் மீது பட்டாலும்  அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று வரமளித்தார்.
   

இராவண வதம் முடிந்து திரும்பி வரும் போது இராமபிரான் பம்பையாற்றின் கரையில் தசரதருக்கு பித்ரு காரியம் செய்தார்.  உதயணன் என்ற கொள்ளைக்காரன் மீது ஐயப்பன் தனது படைகளுடன் தாக்குதல் நடத்திய போது இறந்த படை வீரர்களின் ஆத்மசாந்திக்காக, ஐயப்பன் பம்பை நதிக்கரையில் பிதுர்கடன் நிறைவேற்றினார். இவ்வாறு இராமராலும், ஐயப்பனாலும் பிதுர்கடன் செய்யப்பட்ட புண்ணிய நதியான  பம்பையில்  பல பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் அளித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.




பம்பா விளக்கு 

பம்பையின் கரையில் சக்தி பூசை செய்கின்றனர். அன்னதானப் பிரபுவான ஐயப்பன் அன்னதானத்தில் இந் பம்பா சதய விருந்தில் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம். எனவே பல பக்தர் குழாங்கள் பம்பையின் கரையில் தங்கி  அன்னதானம் செய்கின்றனர். கன்னி சாமிகளுக்கு ஒரு அருமையான பாடம் இங்கு கிடைக்கின்றது. ஐயப்பன் தன் வலதிருக்கரத்தினால் காட்டும் முத்திரை அன்று சனகாதியர்களுக்கு மௌன குருவாக சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தியாக காட்டிய சின்முத்திரை ஆகும். ஜீவான்மாகிய நாம் பரமாத்வாகிய இறைவனுடன் ஒன்ற வேண்டுமென்றால்  விட வேண்டியவை மூன்று மலங்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் விட வேண்டும். எனவே அடியார்கள் உண்ட இலையில் படுத்து உருளும் வழக்கம் முன்பு இருந்தது, இன்று இலைகளை தலையில் சுமந்து சென்று பம்பையில் விட்டுவிட்டு வருகின்றனர். இதனால் தான் என்ற அகங்காரத்தையும், தனது என்ற மமகாரத்தையும் விட்டொழிக்கின்றனர். மேலும் ஸ்தூல,  சூஷ்ம, காரண தேகாபிமானத்தையும் ஒழித்துக் கட்டுகின்றனர்.


பம்பையில் புனித நீராடல்



த்தாவளத்தில் தங்குவதற்கேற்ற பல விரிகள் உள்ளன. குளிப்பதற்கும், காலைக் கடன்களை முடிப்பதற்கும்   வசதி மற்றும் மூலிகை குடிநீர் வசதி, மற்றும்  எப்போதும் அன்னதானம் ந்து கொண்டிருப்பதால் உணவிற்கும் பஞ்சமில்லை எனவே பெருவழியில் வரும் அனைத்து பக்தர்களும் இங்கு தங்கிச் செல்கின்றனர்.

பெரியானை வட்டத்தில் தங்கி இருக்கும் போது கன்னி சாமிகள் 108  அடுப்புகளில் சாம்பல் எடுத்து வருகின்றனர். பின்னர் அதை வஸ்திரகாயம் செய்து  அதை பம்பா பஸ்மம் என்று பயன்படுத்துகின்றனர். 

பம்பையின் கரையில் தங்கி இருக்கும் போது கன்னி சுவாமிகள் பம்பா விளக்கும் ஏற்றுகின்றனர். மூங்கில் அல்லது குருத்தோலைகளால் ஒரு மிதக்கும் தேர் போன்ற அமைப்பில் ஒரு சிறு தோணி செய்து அதை வண்ண வண்ண  காகிதங்களைக் கொண்டு அலங்கரித்து அதில் விளக்கேற்றி இரவில் பம்பையில் மிதக்க விடுகின்றனர். மகர ஜோதிக்கு முதல் நாள் சிறப்பாக நூற்றுக்கணக்கான பம்பா விளக்குகள்  ஏற்றப்படுகின்றன. அதைக் காண்பதே  ஒரு பெரிய பாக்கியம்.


மகர விளக்கிற்கு முன்னர் ஆலங்காட்டு குழுவினரும், அம்பலபுழை குழுவினரும் எரிமேலியில் பேட்டை துள்ளிய பின்னர் பெரிய பாதை வழியாக பம்பையை அடைந்து அருமையான பம்பா சதய   அன்னதானம் செய்கின்றனர். இரவில் பம்பா விளக்கும் சிறப்பாக ந்டைபெறுகின்றது.




சிறப்பு தரிசன  சீட்டு  வழங்கும் இடம் 

(பம்பையில் வந்த வெள்ளத்தினால் இக்கட்டிடம் முழுதுமாக அடித்து செல்லப்பட்டு விட்டது)



பம்பைக் கரையில் 




இங்கு நடக்கும் அன்னதானத்தில் ஐயப்பசுவாமி ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம்.  என்வே அனைத்து  குழுக்களும் அன்னதானம்  செய்கின்றனர். 

பெரியானை வட்டத்தில் தங்கும் போது அடுத்து மலையேறுவதற்கான ஓய்வும் கிடைக்கின்றது அடுத்து ஐயனை தரிசனம் செய்வதற்கு முன் பம்பா கணபதியை தரிசிக்கலாம் அன்பர்களே. 
குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .