Wednesday, April 25, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 7

மூன்றாம் திருநாள் காலை 

அதிகாரநந்தி சேவை  -2

மூஷிக வாகனத்தில் கணபதி 



சுவாமி புறப்பாடு 








 ஐயனின்  நான்கு திருக்கரங்களில் மான், மழு, கிளி மற்றும் அதிகார தண்டம்


கோபுர சேவை ஆரத்தி 




அதிகார நந்தி திருக்கயிலையில் ஐயனின் அணுக்க வாயில் காப்பாளர் அவர் அனுமதி பெற்ற பிறகே ஐயனை யாரும் தரிசிக்க முடியும். அவர் ஐயனைப் போலவே மானும், மழுவும் தாங்கியிருப்பார். கையில் பொன் பிரம்பு அல்லது அதிகார தண்டம் கொண்டு எல்லாரையும் அடக்கும் வல்லமை கொண்டவர். எனவே அதிகார நந்தி சேவையை தரிசிப்பது திருக்கயிலை நாதரை தரிசிப்பதற்கு சமம். 


அதிகார நந்தி சேவை 









பச்சை மயில் வாகனத்தில் முருகர் 





ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் 




Tuesday, April 24, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 6


மூன்றாம் திருநாள் காலை

அதிகார நந்தி சேவை 

பக்த கணபதி 

 மூஷிக வாகனத்தில் கணபதி


சிறப்பு அலங்காரத்தில் பாரத்வாஜேஸ்வரர் - உன்னத காட்சி 







திருப்பாதங்கள்  கூட சிறப்பாக இருப்பதை கவனியுங்கள். நாகம், சிலம்பு, சலங்கை, கிண்கிணி , விரல்களில் மெட்டி  மற்றும் இடது பாதத்தில் கிளியையையும் கவனியுங்கள். 





அம்பாளுக்கு சிறப்பாக ஸ்ரீசக்கர பதக்கம் 








சுப்பிரமணியர் 



சண்டிகேஸ்வரர் 



ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் 


                                                                               அதிகார நந்தி  

                                         அதிகார நந்தி சேவை படங்கள் தொடரும்.... 

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 5

சந்திரப்பிரபை 

இரண்டாம் திருநாள் காலை சூரியப்பிரபையில் அருள் பாலித்த பாரத்வாஜேஸ்வரர்  அன்று இரவு சந்திரப்பிரபையில் அருள் பாலிக்கிறார். இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் சென்ற வருடப்படங்கள்.

இத்தலத்தில் பாரத்வாஜேஸ்வர முனிவர், வாலி மட்டுமல்ல, இராம பிரான், ஊர்வசி மற்றும் நள் மகாராஜா ஆகியோரும்  இப்பெருமானை வழிபட்டுள்ளார்கள் என்பது ஐதீகம்.


பாரத்வாஜேஸ்வரர் 



ஐயனுக்கு மூன்று நயனங்கள்  சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என்பது ஐதீகம். சூரிய சந்திர பிரபைகளில் எழுந்தருளும் போது அக்கண்களால் நயன தீட்சை தந்தருளுகிறார் என்பது ஐதீகம். 




சொர்ணாம்பாள் 





சுப்பிரமணியர்




Monday, April 23, 2018

பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 4

இரண்டாம் திருநாள் காலைத்திருவிழா

சித்திரை பெருந்திருவிழாவின் இரண்டாம் திருநாள் காலை சூரியப்பிரபையில்  சந்திரசேகர சுவாமி எழுந்தருளி அருள் பாலித்தார்.  இவ்வுற்சவம் ஒரு ஐதீக உற்சவம். பாரத்வாஜேஸ்வரர் எம்பெருமானை வழிபட்ட ஐதீகத்தை குறிக்கும் வகையில் பாரத்வாஜேஸ்வர முனிவரும் இன்றைய தினம் புறப்பாடு கண்டருளினார். அக்காட்சிகள் இதோ.


சந்திரசேகர சுவாமி




பாரத்வாஜ முனிவர் 


சுவாமி புறப்பாடு  



பாரத்வாஜ முனிவர் எதிர்சேவை  


சூரியப்பிரபையில் சுவாமி 

நேற்று இரவு மாவடி சேவையின் போது பச்சைக் குடை இன்றைய தினம் சூரியப்பிரபை வாகனத்திற்கு சிவப்புக்குடை இருப்பதை  கவனித்தீர்களா அன்பர்களே.